எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
சாய்ந்தமருதில் நிர்மூலமாக்கப்பட்டது திட்டம் இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பௌத்த விகாரை, தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இரண்டு கட்ட தற்கொலை தாக்குதலை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருந்தாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து சி.ஜ.டி.யினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக அந்த பொலிஸ் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பில் முதலில் இணைந்த சிரியாவிலுள்ள கண்டியைச் சேர்ந்த இருவரின் ஆலோசனைக்கமைய இலங்கையில் சஹ்ரான் தலைமையில் இந்த இரண்டு கட்ட தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டிந்தன. 2015ஆம் ஆண்டு தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை உருவாக்கி அதனூடாக மதப் பிரசாரங்களை முன்னெடுத்த நிலையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மாநாடு ஒன்றை நாடத்தியபோது அங்கு சுல்பி முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை ஒன்று காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்றது. இதன்போது சஹ்ரானின் தந்தை உட்பட 11 பேரை பொலிஸார் கைது செய்த நிலையில் சஹ்ரான் தப்பி ஓடியுள்ளார்