BREAKING NEWS

தற்கொலை தாக்குதலின் பின்னணி சஹ்ரானின் மனைவி என்ன சொல்கிறார்

தற்கொலை தாக்குதலின் பின்னணி
சஹ்ரானின் மனைவி என்ன சொல்கிறார்

சிங்களத்தில்: ஸ்ரீநாத் பிரஸன்ன ஜயசூரிய , லங்காதீப வார இதழ்
தமிழ்: ஏ.எல்.எம். சத்தார்

தேசிய தௌஹீத் ஜமாஅத் முக்­கி­யஸ்­தர்­களில் சிலர் சாய்ந்­த­ம­ரு­துவில் தங்­கி­யி­ருந்து வீட்டை பாது­காப்புத் தரப்­பினர் சுற்­றி­வ­ளைத்த போது அதில் இருந்த ஆண், பெண், சிறுவர்கள் உள்ளிட்ட 16 பேர் குண்டு வெடிப்பில் பலி­யா­கினர். அவர்­களில் பெண்­ணொ­ரு­வரும் அவரின் சிறிய மகளும் உயிர்­தப்­பினர். சிறு காயங்­க­ளுக்­குள்­ளான இவர்கள் இரு­வ­ரையும் இரா­ணு­வத்­தினர் முத­லு­தவி சிகிச்சை வழங்கி உட­ன­டி­யாக அம்­பாறை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர். அங்கு சிகிச்சை பெற்று இரு­வரும் தேறி­யுள்­ளனர்.

குண­ம­டைந்த தாயும் சேயும் தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் எனக் கூறப்­படும் மொஹம்மட் காஸிம் மொஹம்மட் சஹ்­ரானின் மனை­வியும் மக­ளு­மா­வார்கள்.

சஹ்­ரானின் மனை­வி­யான 24 வய­து­டைய அப்துல் காதர் பாத்­திமா சாதி­யா­விடம் அம்­பாறை பொலிஸ் தலை­மை­யக அதி­கா­ரிகள் நீண்ட விசா­ர­ணை­களை நடத்­தினர். அதன் போது அவர் வெளி­யிட்ட தக­வல்கள்.
உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டு தாக்­கு­தல்கள் நடத்­து­வ­தற்கு முன்னர் ஒரு தினத்தில் தற்­கொலை குண்­டு­தா­ரிகள் கறுப்பு நிறத்­தி­லான நீண்ட மேலங்­கியை அணிந்­த­வாறு சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்­டனர். இது கொழும்பில் வாட­கைக்கு எடுத்­துக்­கொண்ட சொகுசு வீட்­டுத்­தொ­கு­தியில் உள்ள வீடொன்­றி­லேயே இடம்­பெற்­றது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­டைய அமைப்­புக்கு கொழும்­பி­லுள்ள குபேரர் ஒரு­வரால் அவ்­வப்­போது பெருந்­தொ­கை­யான பணம் வழங்­கப்­பட்டு வந்­தது. இந்துக் கோயில் ஒன்­றுக்­குள்ளும் தற்­கொலைத் தாக்­குதல் மேற்­கொள்ள திட்டம் ஒன்று தீட்­டப்­பட்­டி­ருந்­தது.

சஹ்ரான் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத்­துடன் ஈடு­பாடு காட்­டிக்­கொண்­டி­ருந்­த­போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைக் கடு­மை­யாக விமர்­சித்து வந்தார். பின்­னர்தான் இதில் இணைந்­துள்ளார்.
தொடர்ந்து சஹ்­ரானின் மனைவி சாதியா தன்னை அறி­முகம் செய்த போது,

நான் குரு­நாகல் நாரம்­ம­லயில் பிறந்தேன். தரம் 9 வரையே பயின்­றுள்ளேன். எனக்கு இரு சகோ­த­ரி­களும் நான்கு சகோ­த­ரர்­களும் உள்­ளனர். எனது தந்தை மொஹம்மத் ஹுசைன் அப்துல் காதர் – தாய் யாஸின் சித்தி சஹிலா. தாய்க்கு இரண்டு சகோ­த­ரர்­களும் மூன்று சகோ­த­ரி­களும் உள்­ளனர். தாயின் இளைய சகோ­தரி மொஹம்மட் இப்­ராஹிம் நௌபர் மௌலவி என்­ப­வரை மண­மு­டித்­துள்ளார். இவர் காத்­தான்­கு­டியைச் சேர்ந்­தவர்.

சஹ்ரான் காத்­தான்­குடி தாருல் அதர் பள்­ளியில் பணி­பு­ரிந்­துள்ளார். இதனால் சமய பிர­சாரப் பணியில் ஈடு­படும் நௌபர் மௌல­வி­யுடன் சஹ்ரான் எனது வீட்­டுக்குப் பக்­கத்­தி­லுள்ள பள்­ளிக்கு பிர­சாரப் பணிக்­காக வந்தார். அப்­பள்ளி மத்­ர­ஸாவில் குர்ஆன் ஓது­வ­தற்­காக நான் செல்வேன். அப்­போது என்னைக் கண்டு அவர் மண முடிக்க விரும்­பினார். எனக்கு 11 வயது என்­பதால் எனது பெற்றோர் அதனை நிரா­க­ரித்­துள்­ளனர். 2009 இல் சஹ்ரான் ஜப்பான் நாட்­டுக்குச் சென்­றுள்­ள­தாக நெளபர் மௌல­வி­யூ­டாக தெரிந்­து­கொண்டேன். அங்­கி­ருந்து மூன்று மாதங்­களில் திரும்­பி­வந்து, இனிப்பு வகை­க­ளுடன் அழ­கிய ஆடை­யொன்றும் கொண்டு வந்து தந்தார்.

2009 மே மாதம் 30 ஆம் திகதி எனக்கும் சஹ்­ரா­னுக்கும் திரு­மணம் நடந்­தது. அப்­போது எனக்கு 14 வயது. தாருல் அதர் பள்ளி நிர்­வா­கத்­துடன் கருத்து மோதல் ஏற்­பட்டு சஹ்ரான் பள்ளி பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டார். அதனைத் தொடர்ந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்­ளி­வாசல் ஒன்றை சஹ்ரான் நிறு­வினார்.

இந்த அமைப்பு ஆரம்­பிக்க முன்னர் சஹ்ரான் நல்ல குண­வி­யல்­புடன் காணப்­பட்டார். அப்­போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் நட­வ­டிக்­கை­களை அங்­கீ­க­ரிக்க முடி­யாது என்ற நிலைப்­பாட்­டிலே அவர் இருந்தார். சமய கிரி­யைகள் தொடர்­பான சஹ்­ரானின் கருத்து முரண்­பாட்­டினால் பலர் இவ­ருடன் பகைத்­துக்­கொண்­டனர். சஹ்ரான் தனது கொள்கைப் பிர­சா­ரத்­திற்­காக நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் சென்று வந்தார்.

எனது தலை­மகன் 2011 ஒக்­டோபர் 30 ஆம் திகதி குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் பிறந்தார். பின்னர் எனது இளைய மகளும் 2015 ஜூலை 7 ஆம் திகதி குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் பிறந்தார். இந்த மகள் தான் குண்டு வெடிப்பில் என்­னுடன் காயங்­க­ளுக்­குள்­ளா­னவர். நௌபர் மௌல­வியும் எனது சிறிய தாயாரும் கட்டார் நாட்­டி­லி­ருந்து வந்­த­பின்னர் நாரம்­ம­லயில் குடி­யே­றி­யி­ருந்­தனர்.

சஹ்ரான் முன்னர் நெளபர் மௌல­வி­யுடன் மனஸ்­தா­பப்­பட்­டி­ருந்தார். கட்­டா­ரி­லி­ருந்து நௌபர் மௌலவி இங்கு வந்த பின்னர் நோன்பு மாதம் ஒன்றில் இரு­வரும் ஒற்­று­மை­யா­கினர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து பிர­சாரப் பணி­களில் ஈடு­ப­டு­வது குறித்து ஸஹ்­ரா­னுடன் வின­விய சந்­தர்ப்­பங்­களில் அவர் என்­னுடன் கடும் கோபப்­ப­டுவார். எனது பாட்டில் இருக்­கும்­படி எச்­ச­ரிப்பார். ஸஹ்ரான் முகநூல் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் நட­வ­டிக்­கைகள், தக­வல்­களைத் தேடிப்­பார்ப்பார். அவற்றின் காட்­சி­களை எனக்கும் காண்­பிப்பார். தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் பெயரைப் பயன்­ப­டுத்திக் கொண்டு நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கி­றீர்­களே  உங்கள் செயற்­பா­டு­களால் எனக்கும் உங்கள் பிள்­ளை­க­ளுக்கும் பிரச்­சி­னைகள் ஏற்­படும். எனவே இதனை நிறுத்­திக்­கொள்­ளுங்கள் என்று நான் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கிறேன். இச் சந்­தர்ப்­பத்­திலும் அவர் கடும் கோபத்­தையே வெளிப்­ப­டுத்­தினார். எனது பேச்சு எத­னையும் அவர் பொருட்­ப­டுத்­த­வில்லை. அவ­ரது தம்பி ரிழ்வான் அடிக்­கடி வந்து ஸஹ்­ரானைச் சந்­திப்பார். வீட்டுத் தோட்­டத்தில் சென்று இர­க­சி­ய­மாக உரை­யா­டு­வார்கள். அவை என்­ன­வென்­பது எனக்குத் தெரி­வ­தில்லை.

நான் காத்­தான்­கு­டிக்குப் போன சந்­தர்ப்­பங்­களில் தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்­ளிக்குச் செல்வேன். அங்கு ஸஹ்ரான் சமய போதனை புரிவார். அங்கு சுமார் 100 ஆண்­களும் 25 பெண்கள் அள­வி­லுமே வருவர். அங்கு சமய போத­னை­களே இடம்­பெற்­றன. ஸஹ்ரான் போகும் இடம் எத­னையும் என்­னிடம் சொல்­வ­தில்லை. அவர் நீண்ட நாட்கள் எங்கள் நாரம்­மல வீட்­டுக்கு வர­மாட்டார். பிள்­ளைகள் வாப்­பாவைத் தேடி அழு­வார்கள். ஊராரும் என் பெற்­றோ­ருக்கு ஸஹ்­ரானை எனக்குக் கட்­டிக்­கொ­டுத்­த­தற்­காகத் திட்­டு­வார்கள். ஸஹ்­ரானின் இந்­ந­ட­வ­டிக்­கை­களால் நான் அவ­ரி­ட­மி­ருந்து விவா­க­ரத்துப் பெறு­வ­தற்­காகக் கேட்­டாலும் அதற்கும் அவர் மறுப்புத் தெரி­விப்பார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு சில நாட்­க­ளுக்கு முன்னர் ஸஹ்­ரா­னையும் நௌபர் மௌல­வி­யையும் தேடி சி.ஐ.டி யினர் எங்கள் வீட்­டுக்கு வந்­தனர். அவர்கள் போகும் இருக்கும் இடம் எதுவும் எமக்குத் தெரி­யாது என்றே நான் உண்­மையைக் கூறினேன். தெரிந்­தாலும் கூறி­யி­ருந்தால் நான் அவர்­களால் கொல்­லப்­ப­டுவேன் என்­ப­த­னையும் நான் அறிவேன்.

ஜன­வரி மாதம் ஒருநாள் இரவு ஸஹ்ரான் எங்கள் வீட்­டுக்கு வந்தார். துணிப் பையொன்று நிறைய இலட்­சக்­க­ணக்­கான பணத்­துடன் காணப்­பட்டார். இவ்­வ­ளவு தொகைப்­பணம் எப்­ப­டிக்­கி­டைத்­தது என்று வின­வினேன். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு உதவும் பெரிய வர்த்­தகர் ஒருவர் இலங்­கையில் உள்ளார். அவர் இவ்­வ­மைப்பின் பணி­க­ளுக்­காக எவ்­வ­ளவு பணம் வேண்­டு­மா­னாலும் தரு­கிறார் என்றார். மறுநாள் காலை அவர் குறித்த பணப் பையுடன் வீட்­டி­லி­ருந்தும் வெளி­யே­றினார். அவர் எங்­கி­ருந்த போதிலும் அவ்­வப்­போது வீட்டு செல­வுக்குப் பணம் அனுப்பிக் கொண்­டி­ருப்பார்.

நீர்­கொ­ழும்புப் பகு­தியில் வாட­கைக்கு எடுத்த வீடொன்றில் நாம் சிறிது காலம் இருந்தோம். அங்­கி­ருந்­த­போதும் அவர் அடிக்­கடி வெளியே போய்­வ­ருவார். அப்­போது கேட்கும் போதெல்லாம் ஐ.எஸ்.ஐ.எஸ் பணி­க­ளுக்­கா­கவே போவ­தாகக் கூறுவார். மார்ச் 29 அல்­லது 30 ஆம் திகதி என்று நினைக்­கிறேன். காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து ஸஹ்­ரானின் தம்பி ஸைனி என்­பவர் எமது நீர்­கொ­ழும்பு இல்­லத்­திற்கு வந்தார். அந்த சந்­தர்ப்­பத்தில் நாம் கொழும்பில் வீடொன்று வாட­கைக்கு எடுத்­தி­ருக்­கிறோம். அங்கு செல்லத் தயா­ராக இருக்­கும்­படி ஸஹ்ரான் என்­னிடம் கூறினார்.

சாரா ஹஸ­னுடன் அபூ அப்­துல்லாஹ் செலுத்தி வந்த வெள்ளை வேனுடன் ஸஹ்­ரானும் நானும் இரண்டு பிள்­ளை­களும் கொழும்­புக்குச் சென்றோம். இது எந்த இடம் என்று நான் சாரா ஹஸ­னிடம் வின­வினேன். இது லிபர்ட்டி பிளா­ஸாவில் 5 ஆம் மாடியில் இருக்­கிறோம் என்று சாரா கூறினார்.

மூன்று அறை­க­ளுக்கும் மாதாந்த வாட­கை­யாக 140000/= ரூபா என்றும் அவர் கூறினார். எமது குடும்­பமும் சாராவும் அவ­ரது கணவர் ஹஸனும் மூன்று அறை­க­ளிலும் தங்­கி­யி­ருந்தோம். அபூ அப்­துல்லாஹ் முன்­சா­லையில் இருந்தார். பின்­னொரு நாள் ஸஹ்­ரானின் இன்­னொரு சகோ­த­ர­ரான ரிழ்­வானும் மற்­று­மொ­ரு­வரும் எமது இருப்­பிடம் வந்­தனர். ரிழ்­வானை நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு அன்­றுதான் கண்டேன். ரிழ்­வானின் வலது கையில் சீனி விரலைத் தவிர ஏனைய விரல்கள் அகற்­றப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னித்தேன். இடது பக்க கண் அருகே காயப்­பட்ட தழும்பு ஒன்றும் காணப்­பட்­டது. காத்­தான்­கு­டியில் ஓரி­டத்தில் குண்டு தயா­ரிப்பில் ஈடு­பட்­ட­போது அது தவறி வெடித்­ததால் ஏற்­பட்ட வடுக்கள் என்று சாரா என்­னிடம் விளக்­கினார்.

மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறச்­சென்றால் காரியம் அம்­ப­ல­மாகி விடும் என்ற அச்­சத்தில் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் சுமார் இரண்டு மாதங்கள் அளவில் சிகிச்சை பெற்று வெளி­வந்­துள்ளார். அஸாத் என்­பவர் அவர் அருகே உத­விக்கு இருந்­துள்ளார் என்று சாரா கூறினார். நீங்கள் எல்­லோரும் பெண்­க­ளான எங்­களை விட்டு வெளியே போய் இரண்டு மூன்று நாட்­களின் பின்னர் இங்கு வரு­கி­றீர்கள் என்று நான் ஸஹ்­ரா­னிடம் விசனம் தெரி­வித்தேன். அது பற்றிக் கேட்­கக்­கூ­டாது என்று கடும்­தொ­னியில் கூறினார். அப்­ப­டி­யானால் என்­னையும் இரு பிள்­ளை­க­ளையும் எனது தாய் வீட்டில் விடும்­படி மீண்டும் கேட்­டுக்­கொண்டேன். வீட்­டுக்குப் போகும் பேச்சை என்­னிடம் முறை­யி­ட­வேண்டாம் என்று கண்­டிப்­பாகக் கேட்­டுக்­கொண்டார். உங்­களைப் பாது­காத்­துக்­கொள்ள எனக்குத் தெரியும் என்றும் கூறவே நான் மௌனி­யானேன்.

ஏப்ரல் 18 ஆம் திகதி ஆஸா­தையும் பெரோ­சா­வையும் காத்­தான்­கு­டிக்குக் கூட்டிச் செல்­வ­தாக ஸஹ்ரான் புறப்­பட்டார். நானும் இரு பிள்­ளை­களும் சாரா­வுமே லிபர்ட்டி பிளாஸா அறையில் இருந்தோம். அன்று இரவு ஸஹ்­ரானும் அபூ அப்­துல்­லாஹ்வும் வேன் ஒன்றில் லிபர்ட்டி பிளா­ஸா­வுக்கு வந்­தனர். ஸஹ்ரான் நீண்ட நேரம் இரு பிள்­ளை­க­ளுடன் கொஞ்சி விளை­யா­டியும் வேடிக்கை காட்­டிக்­கொண்டும் மகிழ்ச்­சி­யுடன் இருந்தார். அன்று இரவு ஸஹ்ரான் என்­னிடம் “நான் ‘ஜிஹாத்’ ஆகப் போகிறேன். நான் இறந்த பின்னர் நீங்கள் நான்கு மாதங்கள் ‘இத்தா’ அனுஷ்­டிக்­கும்­படி என்னைக் கேட்­டுக்­கொண்டார். இப்­ப­டி­யொரு பயணம் போவ­தென்றால், ஏன் நீங்கள் என்னை இங்கு அழைத்து வந்­தீர்கள்? என்று நான் கேட்டேன். என்னை எனது தாய் வீட்­டுக்கு அனுப்­புங்கள் என்று மீண்டும் கேட்­ட­போதும் ஸஹ்ரான் அதற்கு செவி சாய்க்­க­வில்லை. அப்­போதும் நான் அவ­ரி­ட­மி­ருந்து விவா­க­ரத்துக் கோரினேன். உங்­களைப் பாது­காக்க நான் எனது தாயா­ரிடம் ஒப்­ப­டைக்­கிறேன் என்று ஸஹ்ரான் கூறி­விட்டார். என்னைப் போன்றே அஸாதும் ஹஸனும் ஜிஹாத் ஆகிறோம். அப்­ப­டி­யி­ருந்தும் அவர்­க­ளது துணை­வி­யர்­க­ளான சாராவும், பெரோ­ஸாவும் விவா­க­ரத்துக் கோர­வில்­லையே என்று ஸஹ்ரான் என்னைக் கேட்டார்.

லிபர்ட்டி பிளாஸா வீட்­டி­லி­ருந்து நாம் எல்­லோரும் பாணந்­து­றை­யி­லுள்ள வீடொன்­றுக்கு வேனில் சென்றோம். அங்கு ரிழ்­வானும் இருந்தார். பாணந்­துறை வீட்டில் 10 வாலி­பர்கள் அளவில் இருப்­ப­தாக எனது மகன் என்­னிடம் கூறினார். பாணந்­து­றை­யி­லி­ருந்து நிந்­தவூர் நோக்கிப் புறப்­பட்டோம். வேனுக்கு ஏறு முன்பே ஸஹ்ரான் என்­னி­ட­மி­ருந்த கைப்­பே­சியைக் கைப்­பற்­றிக்­கொண்டார். வீட்­டுக்குப் போகும் முன்னர் எனக்கு வெள்ளை ஆடை வாங்­கு­வ­தற்­காக ஸஹ்ரான் 35000/= ரூபா பணம் தந்தார். அத்­துடன் மகனின் கையில் 6000/= ரூபா­வையும் மக­ளுக்கு 5000/= ரூபா­வையும் கொடுத்தார். சோகம் தாங்க முடி­யாது நான் கண்ணீர் சிந்­தினேன். சாராவும், பெரோ­ஸாவும் அவ்­வ­ள­வாக அழ­வில்லை. வேனின் டிக்­கியைத் திறக்க வேண்டாம். அதில் பணப் பையொன்று உள்­ளது என்று கூறினார். நானும் இரு பிள்­ளை­களும் முன்­பக்க ஆச­னத்தில் அமர்ந்து கொண்டோம். சாராவும் பெரோ­ஸாவும் பின் பக்க ஆச­னத்தில் அமர்ந்து கொண்­டனர்.

நான், சாரா, பெரோஸா மூவரும் புர்கா அணிந்­த­வாறே பய­ணித்தோம். ரிழ்­வானும் எம்­முடன் வந்தார். அன்று வெள்­ளிக்­கி­ழமை என்­பதால் பல கடைகள் மூடி­யி­ருந்­தன. பின்னர் கிரி­உல்­லயில் திறந்­தி­ருந்த ஒரு புடை­வைக்­க­டையைக் கண்டு வாகனம் நிறுத்­தப்­பட்­டது.

நானும் பெரோ­ஸாவும் சாராவும் டிரை­வ­ருடன் கடைக்குச் சென்றோம். எனது மகளை சாரா தூக்­கிக்­கொண்டு வந்தார். அக்­க­டையில் வெள்ளை நிற ஸ்கர்ட் இரண்டு, ஒரு பிர­ஷியர், இரண்டு பிலவ்ஸ்கள் என்று வாங்­கினோம். சாரா­வுக்கு வெள்ளை நிற சாயா இரண்டும் சட்டை மூன்றும் பிர­ஷியர் இரண்டும் வாங்­கினோம். பெரோ­ஸா­வுக்கு வெள்ளை நிற ஸ்கர்ட் நான்கு, பிலவுஸ் நான்கு, பிர­ஷியர் இரண்டும் வாங்கிக் கொண்டோம். மக­ளுக்கு விளை­யாட்டுப் பொருளும் வாங்கிக் கொடுத்தோம். இவை­ய­னைத்­துக்கும் 29000 ரூபா பணம் செலுத்­தினோம்.

பயணம் தொடர்ந்­தது. அட்­டா­ளைச்­சே­னையை அடைந்து அங்­குள்ள வீடொன்­றுக்குச் சென்றோம். அங்கு தேநீர் அருந்தி விட்டு, பெரோ­ஸா­வையும் சாரா­வையும் அங்கு நிறுத்தி விட்டு, நானும் எனது இரு பிள்­ளை­களும் ரிழ்­வானின் மனை­வியும் அவர்­க­ளது இரு பிள்­ளை­க­ளு­மாக நாம் எல்­லோரும் சாய்ந்­த­ம­ரு­து­வி­லுள்ள ஒரு வீட்­டுக்குச் சென்றோம். ஏப்ரல் 21 ஆம் திகதி மு.ப.11.30 மணி­ய­ளவில், எமது ஆட்கள் தற்­கொலை தாக்­குதல் செய்து கொண்­ட­தாக ரிழ்­வானின் மனைவி நப்னா கூறினார். அத்­துடன் வெள்ளை ஆடை­யையும் அணிந்து கொள்­ளு­மாறும் கேட்­டுக்­கொண்டார்.

நான் வாங்கி வந்த வெள்ளை உடையை உடுத்து அதன் மேலால் கறுப்பு அங்­கி­யையும் அணிந்து கொண்டேன்.
22 ஆம் திகதி பகல் உண­வுக்­காக நிந்­த­வூரில் உள்ள வீட்­டுக்கு நியாஸ் கொண்டு வந்த வேனில் சென்றோம். ஸஹ்­ரானின் தாயார் என்னைக் கட்­டி­ய­ணைத்­துக்­கொண்டு அழுதார். ஸஹ்ரான் என்னையும் பிள்ளைகளையும் அநாதையாக்கிவிட்டுச் சென்று விட்டாரே என்று கவலைப்பட்டேன். அதனைக் கேட்டு, “பயப்பட வேண்டாம் நாம் இருக்கிறோம்” என்று ஸஹ்ரானின் தாயார் எமக்கு ஆறுதல் கூறினார். அன்று இரவை நிந்தவூர் வீட்டிலே கழித்தோம். 23 ஆம் திகதி காலையில் அட்டாளைச்சேனை வீட்டிலே தங்கியிருந்த சாராவையும் பெரோஸாவையும் கூட்டிக்கொண்டு நியாஸ் நிந்தவூர் வீட்டுக்கு வந்தார். அவர்கள் இருவரும் வெள்ளை உடை உடுத்து மேலால் கறுப்பு நிற அபாயாவை அணிந்திருந்தனர். நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாம் இருவரும் சந்தோசமாக இருக்கிறோம் அவர்கள் போகவேண்டிய இடத்திற்குச் சென்று விட்டார்கள் என்று பெரோஸாவும் சாராவும் என்னைத் தேற்றினர்.

தற்கொலை குண்டுதாரிகள் எனது கணவருடன் லிபர்ட்டி பிளாஸாவிலிருந்து சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் வீடியோவை கைப்பேசியூடாக சாரா எனக்குக் காட்டினார். அதில் ஸஹ்ரான் முகம் திறந்த நிலையில் ஏனையோர் முகம் மூடியிருப்பதையும் கண்டேன் என்று ஸஹ்ரானின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கட்டுரை மூலம் விடிவெள்ளிப் பத்திரிகை

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar