முகத்திரை அணிந்து சென்ற இரு பெண்கள் கைது


( மினுவாங்கொடை நிருபர் )

   பியகம, பண்டாரவத்தை பகுதியில் நிகாப் அணிந்து சென்ற இரு முஸ்லிம் பெண்களை, (03) வெள்ளிக்கிழமை மல்வானை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
   இது தொடர்பில், பியகம பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் அன்வர் விடுத்துள்ள செய்தியில்,  நாட்டில் அவசர காலச்  சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் இக் காலத்தில் முகம் மூடுவது (நிகாப்/ புர்கா உட்பட) தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பயணம் மேற்கொள்வது  சட்ட விரோதச்  செயற்பாடாகக்  கருதப்படுகிறது.
   இதேவேளை, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளதும், எம் அனைவருக்கும் தெரிந்த விடயமே. 
    எனவே, எமது முஸ்லிம் தாய்மார்கள், சகோதரிகள் எமது நாட்டின் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.  அத்துடன், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் அறிவுரையை ஏற்று நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்