Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

த‌மிழ் முஸ்லிம் முர‌ண்பாடுக‌ள் ஏன் எப்ப‌டி உருவாகின‌?

பார்த்தீப‌ன் கும‌ர‌குருநாத‌ன் என்ப‌வ‌ரின் பிழையான‌ க‌ட்டுரைக்கு என‌து ப‌தில். அவ‌ர‌து க‌ருத்துக்க‌ளை அடைப்புக்குறியுள் இட்டுள்ளேன்.

(இஸ்லாமியர்களில் தமிழர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் வடக்கு, கிழக்கு, புத்தளம் போன்ற பகுதிகளில் வாழ்கிறனர்.)

முஸ்லிம்க‌ளில் ப‌ல‌ர் ஏற்க‌ன‌வே அர‌பும் த‌மிழும் க‌ல‌ந்த‌ சோன‌க‌ பாசை பேசுவோராக‌ வாழ்ந்த‌ன‌ர்.  இந்தியாவில் இருந்து த‌மிழ‌ர்க‌ள் வ‌ட‌க்கு கிழ‌க்கில் குடியேறிய‌தால் த‌மிழ் மொழி செல்வாக்கு சூழ‌ல் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ளும் த‌மிழ் பேச‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.


(அடுத்ததாக மொரோக்கோ, அரேபிய வழித்தோன்றல் இஸ்லாமியர்கள். கல்வி, வியாபாரம் , அரசியல் என தொன்றுதொட்டு உயர் நிலைகளில் இருப்பவர்கள். )
மொரோக்கோ அரேபிய‌ வ‌ழித்தோன்ற‌ல் முஸ்லிம்க‌ள் இல‌ங்கையில் இல்லை. இருந்திருந்தால் அவ‌ர்க‌ளின் முக‌, நிற‌ தோற்ற‌ம் இன்றும் இருந்திருக்கும். மொரோ என்ற‌ சொல்லை அறிமுக‌ப்ப‌டுத்தியோர் ஒல்லாந்த‌ர். கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் க‌ட‌ல் மார்க்க‌மாக‌ நாடுக‌ளை பிடித்த‌ போது ஆபிரிக்காவில் உள்ள‌ மொரோக்கோவையும் கைப்ப‌ற்றின‌ர். அங்குள்ள‌  முஸ்லிம்க‌ள் சிவ‌ப்பு தொப்பி, நீள் அங்கி போடுப‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். ந‌ம‌து நாட்டு முஸ்லிம்க‌ளையும் அத்தோற்ற‌த்தில் க‌ண்ட‌தால் இவ‌ர்க‌ள் மோரோக்கோவாசிக‌ள் என்ற‌ அர்த்த‌த்தில் மோரோ என்ற‌ன‌ர்.

(தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டம் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாக மாறியபோது இஸ்லாமிய இளைஞர்களும் இணையத் தொடங்கினர்.

ஐக்கிய தேசியக் கட்சி 1984 இல் இஸ்ரேல் உதவியை நாடியது.
இஸ்ரேலிய ஆலோசனைப்படி கிழக்கில் ஒன்றாக வாழ்ந்த தமிழர்கள் இஸ்லாமியரிடையே முரண்பாடுகள் வளர்க்கப்பட்டன. தலையில் தொப்பி, சாரம்( லுங்கி) கட்டிய நபர்களால் தமிழர்களின் வயல்கள், கால்நடைகள், அழிக்கப்பட்டன. களவுகள் நடந்தன. இதனால் பிரச்சனைகள் வளர்ந்தபோது புலிகளின் தளபதி கிட்டு, அருணா போன்றோரால் சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு முஸ்லிம் சமூக பெரியவர்களிடம் தெரியப்படுத்தப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அப்போதுதான் உள்ளூர் சண்டியர்களுடன் சிங்கள படையினர் முஸ்லிம் உடைகளுடன் சம்பவங்கள் செய்தமை குறித்த தகவல்கள் தெரிய வந்தன.)
இஸ்ரேலின் ஆலோச‌னைக்க‌மைய‌வே த‌மிழ் முஸ்லிம் முரண்பாடு தோற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌து உண்மை.  ஆனால் சிங்க‌ள‌வ‌ர் தொப்பி போட்டு தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌து பின்ன‌ரான‌ ச‌ம்ப‌வ‌மே த‌விர‌ த‌மிழ் முஸ்லிம் முர‌ண்பாட்டின் ஆர‌ம்ப‌ ச‌ம்ப‌வ‌ம் அல்ல‌.

ஆர‌ம்ப‌த்தில் வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் தமிழீழ‌ விடுத‌லை போராட்ட‌த்துக்கு பூர‌ண‌மாக‌ ஒத்துழைத்த‌ன‌ர். ஆனால் கிழ‌க்கில் உள்ள‌ த‌மிழ் போராளிக‌ள் இத‌னை முஸ்லிம்க‌ளின் ப‌ல‌வீன‌மாக‌வே பார்த்த‌ன‌ர். இத‌ன் கார‌ண‌மாக‌ 1981ம் ஆண்டிலிருந்தே முஸ்லிம்க‌ளிட‌ம் க‌ட்டாய‌ க‌ப்ப‌ம் கோருத‌லை ஆர‌ம்பித்த‌ன‌ர். குறிப்பாக‌ அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் த‌மிழ‌ர்க‌ளை விட‌ முஸ்லிம்க‌ள் பொருளாதார‌த்தில் மேம்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌வும் த‌மிழ‌ர்க‌ள் பெரும்பாலும் முஸ்லிம்க‌ளிட‌ம் கூலித்தொழில் செய்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌தாலும் ஏற்ப‌ட்ட‌ பொறாமை இத‌ற்கு பிரதான‌ கார‌ண‌ம்.

81ம் ஆண்டு நான் கூட‌ க‌ல்முனையில் நிற்கும் போது போராளி ஒருவ‌ர் ப‌ண‌ம் கேட்ட‌ போது அவ‌ர் கொடுத்தார். ஏன் கொடுத்தீர்க‌ள் என‌ நான் கேட்ட‌ போது அவ‌ர‌து இடுப்பில் இருந்த‌ துப்பாக்கியை காட்டிய‌தை காண‌வில்லையா? என்றார். அதே ச‌கோத‌ர‌ரை புலிக‌ள் 1990ம் ஆண்டு வீட்டுக்கு வ‌ந்து பிடித்துச்சென்று கொலை செய்த‌ன‌ர்.

1981, 82க‌ளில் க‌ப்ப‌ம் கோருத‌ல், கொள்ளைய‌டித்த‌ல், காரைதீவு முச்ச‌ந்தியால் வ‌ரும் முஸ்லிம்க‌ளுக்கு அடித்த‌ல் என‌ சின்ன‌ச்சின்ன‌ கொடுமைக‌ளை புரிய‌த்தொட‌ங்கின‌ர். அவ்வேளையில் இப்ப‌குதிக‌ளால் ராணுவ‌ம் பெரிதாக‌ இல்லை. அத‌னால் சிங்க‌ள‌வ‌ரும் இருக்க‌வில்லை.

இந்த‌ வெறுப்பை ந‌ன்றாக‌ அன்றைய‌ ஐ தே க‌ அர‌சு இஸ்ரேலின் ஆலோசனைக்கிண‌ங்க‌ ந‌ன்றாக‌ ப‌ய‌ன் ப‌டுத்திக்கொண்ட‌து என்ப‌தே உண்மை. க‌ரைதிவு க‌ல‌வ‌ர‌மும் ஏற்ப‌ட்ட‌து.
அத‌ன் பின்ன‌ரே முஸ்லிம்க‌ள் போல் தொப்பி அணிந்து த‌மிழ் ப‌குதிக‌ளில் தாக்கின‌ர்.


(இந்தியப் படை வந்த காலத்தில் EPRLF, TELO, ENDLF போன்ற இந்தியப் படையுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் ஒட்டுக்குழுக்கள் புலிகளுக்கு ஆதரவான முஸ்லிம்களை இலக்கு வைத்தன.
முஸ்லிம்களிடையே புலிகளே கொல்கிறார்கள் என குழப்பங்கள் உருவாக்கப்பட்டன.)

இது த‌வ‌றான‌ க‌ருத்து. endlf, eprlf போன்ற‌ இய‌க்க‌ங்க‌ள் புலிக‌ளை விட‌ மோச‌மான‌ துவேசிக‌ள் என்ப‌தை கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் புரிந்திருந்த‌ன‌ர்.  இத‌ன் கார‌ண‌மாக‌ இந்த‌ இய‌க்க‌ங்க‌ள், இந்திய‌ ராணுவ‌த்திட‌மிருந்து புலிக‌ளை காக்க‌ முஸ்லிம்க‌ள் உத‌வின‌ர்.

ஆனால் இந்திய‌ ப‌டை வெளியேறிய‌ பின் மேற்ப‌டி த‌மிழ் இய‌க்க‌ங்க‌ளும் ஓடிவிட்ட‌ன‌. புலிக‌ள் பிரேம‌தாச‌வின் உத‌வியுட‌ன் முழு கிழ‌க்கையும் பிடித்த‌ன‌ர். அத‌ன் பின்ன‌ர்தான் புலிக‌ளும் த‌ம‌து ந‌ன்றி கெட்ட‌ த‌ன‌த்தை காட்டி முஸ்லிம் ப‌குதிக‌ளில் வெறியாட்ட‌ம் ஆடின‌ர்.  முஸ்லிம் முத‌லாளிக‌ளை க‌ட‌த்திச்சென்று ப‌ணம் ப‌றித்த‌ன‌ர். வாலிப‌ர்க‌ளை பிடித்து த‌ம‌து முகாம்க‌ளில் சிறையிட்ட‌ன‌ர்.
பிரேம‌தாச‌வின் ப‌டைக்கும் புலிக‌ளுக்கும் இடையில் ஒப்ப‌ந்த‌ம் இருந்த‌து. அதாவ‌து கிழ‌க்கில் இராணுவ‌ம் இருக்க‌லாம். ஆனால் புலிக‌ளின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் இராணுவ‌ம் த‌லையிட‌க்கூடாது.
இல‌ங்கை அர‌சின் இந்த‌ துரோக‌ம் கார‌ண‌மாக‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ முஸ்லிம் வாலிப‌ர்க‌ள் புலிக‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

இந்த‌ நிலையில்தான் திடீரென‌ பிரேம‌தாச‌வின் இராணுவ‌த்துக்கும் புலிக‌ளுக்கும் ச‌ண்டை மூண்ட‌து. யுத்த‌ நிறுத்த‌ம் முறிவுற்ற‌து. ச‌ர‌ண‌டைந்த‌ க‌ல்முனை பொலிசார் 600 பேரை கைது செய்து புலிக‌ள் கொன்ற‌ன‌ர். முழு கிழ‌க்கிலும் பொலிசாரும் இராணுவ‌மும் வாப‌ஸ் பெற்ற‌ன‌ர்.

முஸ்லிம் ச‌மூக‌ம் நெருப்பில் த‌த்த‌ழித்த‌து. இத‌ன் பின் இராணுவ‌ம் சிவில் உடையில் அம்பாரையிலிருந்து வ‌ந்து புலிக‌ளை தாக்க‌ தொட‌ங்கிய‌து. ஆத்திர‌த்தில் இருந்த‌ முஸ்லிம்க‌ள் இராணுவ‌த்துக்கு ஒத்துழைத்த‌ன‌ர்.

( சமகாலத்தில் தமிழ்நாட்டில் PJ எனப்பட்ட பி். ஜெயினுலாப்தீன் ஊடான தவ்ஹீத் எனப்படும் அரேபிய தேசியவாதம் பரவத் தொடங்கியது. முஸ்லிம்கள் போராடுவது தவறு. அவர்கள் இலங்கை அரசுடன் இருக்க வேண்டும் என்ற வகையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.)
த‌வ்ஹீத் என்ப‌து அர‌பு தேசிய‌வாத‌ம் அல்ல‌. அது இஸ்லாத்தின் கொள்கைக‌ளில் ஒன்று. இல‌ங்கைப்பிர‌ச்சினைக்கும் pjவுக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இருக்க‌வில்லை.


(1990 இல் இந்தியப்படை வெளியேறிய பின்னர் பிரேமதாச அரசாங்கம் கிழக்கில் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்ற முஸ்லிம் ஆயுதக்குழுக்கள், ஊர்காவல் படை என்பவற்றுடன் படையெடுத்தார். பல ஊர்களில் தமிழர்கள் அரச படைகளாலும் முஸ்லிம் குழுக்களாலும் கொல்லப்பட்டனர். பதில் நடவடிக்கைகள் நடந்தபோது அப்பாவி முஸ்லிம்கள் பலரும் உயிரிழந்தனர்.)
உண்மை.

(காத்தான்குடிக்கு அருகே உள்ள மஞ்சந்தொடுவாய் கிராமத்தினுள் புகுந்து தமிழர்களை வெட்டுவதற்காக ஜிகாத் குழுவினர் பள்ளிவாசலில் கூடியுள்ளனர் என்ற தகவலையடுத்து பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல அப்பாவிகள் பலியாகிய துயரம் நடந்தது.)
ப‌ள்ளிவாச‌லில் தொழும்போது பின்னால் இருந்தே சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். சிறுவ‌ர்க‌ளும் அட‌ங்கும். அவ்வாறு ப‌ள்ளிவாய‌லில் திட்ட‌ம் போடுவ‌தாக‌ பொய்யான‌ த‌க‌வ‌ல் வ‌ந்திருக்க‌லாம். பொய் த‌க‌வ‌லை வைத்து அப்பாவி ம‌க்க‌ளை புலிக‌ள் கொன்ற‌மை குற்ற‌ம்.

(இதைப் பயன்படுத்தி நிந்தவூர் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தி புலிகள் மீது பழியைப்போடும் திட்டம் முஸ்லிம்கள் உதவியுடன் முறியடிக்கப்பட்டது.

வடக்கில் ஆயுதக் குழுக்கள் ஊடாக பள்ளிவாசல்களுக்குள் வாள்கள் முதலான ஆயுதங்கள் வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வடக்கில் தமிழ் முஸ்லிம் கலவரத்தை தடுக்க முஸ்லிம்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.)

இது ப‌ச்சைப்பொய். 90ம் ஆண்டு இராணுவ‌ம் கிழ‌க்கில் புகுந்த‌தை தொட‌ர்ந்து முஸ்லிம்க‌ளும் இராணுவ‌த்துக்கு உத‌விய‌தால் வ‌ட‌க்குக்கு ஓடிய‌ புலிக‌ள் முஸ்லிக‌ளை அங்கு குற்ற‌ம் சாட்டிய‌தால், வ‌ட‌க்கு புலிக‌ளும் எப்போது முஸ்லிம்க‌ளை விர‌ட்டுவ‌து என‌ இருந்த‌தால் இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ட‌ முஸ்லிம்க‌ளின் அனைத்து உட‌மைக‌ள‌யும் கொள்ளைய‌டித்த‌ பின் வெளியேற்றின‌ர்.

(காத்தான்குடி சம்பவம், முஸ்லிம்கள் வெளியேற்றம் போன்றன தமது தவறுகளாக புலிகள் ஏற்று மன்னிப்பு கோரி மீளக் குடியேற 2002 இல் அழைத்தனர். ஆனால் பிரச்சார யுத்தத்தில் இலங்கை அரசைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம் அரசியல் தலைமைகள் அதை தடுத்தனர்.)
புலிக‌ள் அழைத்த‌து உண்மை. ஆனால் முஸ்லிம்க‌ளிட‌ம் கொள்ளைய‌டித்த‌ சொத்துக்க‌ளை திருப்பித்த‌ருவ‌தாக‌ சொல்லாத‌தால் முஸ்லிம்க‌ள் திரும்பிச்செல்ல‌ த‌ய‌ங்கின‌ர் என்ப‌தே உண்மை.

(2009 இன் பின்னர் இந்த ஆயுதக்குழுக்கள் குறித்து அறியக் கிடைக்கவில்லை. ஆனால் SLTJ ,NTJ போன்ற அடிப்படைவாத குழுக்கள் தமிழினத்திற்கு எதிரான பரப்புரைகளை செய்வதுடன் மதமாற்றம், மதவெறுப்பு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டன.)

இதுவெல்லாம் ப‌ச்சை பொய்க‌ள். ஆதார‌ம‌ற்ற‌வை.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய