Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

சபையில் விபரீதம் வேறு மாதிரி விஸ்வரூபம் எடுக்க வேண்டிய நிலை வரும் : காரைதீவு தவிசாளருக்கு எச்சரிக்கை !


காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறிலின் ஊடக அறிக்கைக்கு பதில் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.முஹம்மட் பஸ்மீர் தனது அறிக்கையில், கௌரவ தவிசாளர் ஒட்டுமொத்த முஸ்லிங்களையும் நிந்திக்கும் வகையில் அறிக்கையிட்டது தவறு. முஸ்லிங்களே வெறுக்கும் ஒரு சிறிய குழு செய்த தவறால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தவறாக கூறுவதும் , இவ்வாறு விமர்சனம் செய்வதும் தவறான செயலாகும்.என குறிப்பிட்டுள்ளார் மேலும்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வளர்வதற்கு துணை போனவர்கள் யார்? 30 வருடங்கள் இலங்கை நாட்டு மக்களாகிய நாங்கள் பட்ட துன்பம் துயரங்கள் என்னிலடங்காதது அன்று தமிழ் சகோதரர்களை ஒட்டு மொத்தமாக முஸ்லிங்களாகிய நாங்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு போதும் எந்த இடத்திலும் பொட்டைகள் போன்று கருத்துக்கள் தெரிவிக்கவில்லை என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்.
அண்மைக்காலங்களில் சில தமிழ் தரப்பு ஆளும் பிரதேச சபைகளில் முஸ்லீம் வர்த்தகர்கள் தமது எல்லைகளில் வியாபாரம் செய்யக்கூடாது என பிரேரணை நிறைவேற்றியும் உள்ளார்கள். நாட்டை குட்டிசுவராக்கிய விடுதலை புலிகளின் வண்மக் காலங்களில் கூட தமிழ் வியாபாரிகள் முஸ்லிம் பிரதேசங்களில் வர்த்தகம் செய்ய சகல ஒத்துழைப்புக்களை முஸ்லிம் மக்கள் வழங்கினார்கள் என்பதை அந்த இனவாத அரசியல்வாதிகளுக்கு நிணைவு படுத்த விரும்புகிறேன்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளுக்கோ, தீவிரவாதிகளுக்கோ எப்போதும் ஆதரவு வழங்கவுமில்லை,நிதியுதவியோ,அடைக்கலமோ வழங்க வில்லை என்பதை கௌரவ தவிசாளர் புரிந்து கொண்டு பேச வேண்டும்.முந்தானைக்கு பின்னால் ஒழிந்து கொண்டு வீர, சூற வசனம் பேசுபவர்கள் நாங்கள் அல்ல. இந்த தாயகத்தின் மீது அதீத பற்று கொண்டவர்கள்.என்பதை கெளரவ தவிசாளர் ஜெயசிரீல் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசின் சட்டத்தை மதித்து எமது பெண்கள் முகமூடுவதை தவிர்த்தும் பொது இடங்களில் வக்கிரபுத்தி கொண்ட சில அரசியல் கூஜாக்கள் ஸ்டிக்கர் ஓட்டும் படலத்தை மேற்கொண்டு அரசியல் செய்ததின் தாற்பரியத்தை தமிழ் உறவுகளும் அறியாமல் இல்லை
உங்களுக்கு எங்களோடு வாழ்வது அச்சமாக இருந்தால் தனித்து செயற்படுங்கள் அது உங்களது தனிப்பட்ட சுதந்திரம் அதற்காக இவ்வாறான கோழைத்தனமான அறிக்கை விடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.என கேட்டுக்கொள்கிறேன் இல்லை என்றால் சபையில் விபரீதம் வேறு மாதிரி விஸ்வரூபம் எடுக்க வேண்டிய நிலை வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ரிதிதென்னையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகம் மூவின மக்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகமாகும் சட்ட விரோதமாக கட்டப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் சந்தேகம் என்றால் வாருங்கள் தெளிவுபடுத்த கெளரவ ஆளுனர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லா சேர் தயாராக உள்ளார்கள் நாங்களும் உங்களுடன் வர தயாராக உள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஓரிருவர் மீது கொண்ட தனிப்பட்ட ரீதியான காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் சில அரசியல் வங்குரோத்து பிடித்தவர்கள் ஊடகங்களுக்கு விடும் அறிக்கை போன்று நீங்களும் செய்வதனை இட்டு மனவேதனை அடைகின்றோம். இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றால் சாய்ந்தமருதில் ஒழிந்திருந்தவர்களை நாங்கள் ஏன் காட்டிக் கொடுக்க வேண்டும், உங்களது கருத்து படி அவர்களை பாதுகாத்திருக்க வேண்டுமல்லாவா.? அதட்கான தேவை முஸ்லிங்களாகிய எங்களுக்கு இல்லை என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என மேலும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
(ஹுதா உமர்)
  

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய