Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை –


அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்

ஊடகப்பிரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கொண்டுவரப்பட்டுள்ள சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்ச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவே இதனை நாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் இன்று (30) மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சின் முக்கியஸ்தர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான மஹ்ரூப், செயலாளர் எஸ்.சுபைதீன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் வீ.ஜெயதிலக, மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் பாயிஸ், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நசீர் , உயர்பீட உறுப்பினர் கலாநிதி மரைக்கார், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர், இந்த சம்பவங்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரையும் தொடர்புபடுத்தி வேண்டுமென்றே முடிச்சிப்போட்டு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகவே நாங்கள் இதனை கருதுகிறோம் . அனைத்து இனங்களையும் அரவணைத்து செயற்பட்டு வரும் எமது கட்சியும், கட்சித்தலைவரும் பயங்கரவாத்த்தையோ தீவிரவாத்தையோ என்றுமே ஆதரிப்பவர்களல்ல. 52 நாள் அரசாங்கத்திற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்க மறுத்ததன்  காரணமாகவே அதற்கு பழிதீர்க்க இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.  எதிர்க்கட்சியில் உள்ள மக்கள் செல்வாக்கில்லாத சில அரசியல் வாதிகள் மஹிந்தவின் மடியில் கிடந்துகொண்டு இனவாதத்தை பரப்பி பெரும்பான்மை மக்களுக்கு உசுப்பேத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான தந்திரபாயமாகவே இதனை பார்க்கின்றோம். அமைச்சர் ரிஷாத்தை தூரப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்குள் ஒரு நெருக்கடியை கொண்டுவந்து ஆட்சியை கவிழ்ப்பதே இவர்களின் திட்டமாகும்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எதிர்க்கட்சிக்காரர்களின் கோரிக்கைக்கு கடந்த ஒக்டோபர் மாதம் செவிசாய்த்திருந்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்காது. அவரைத் தூக்கி உச்சாணி கொப்பில் இப்போது வைத்திருப்பார்கள். எனவே அமைச்சர் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களையும் நாம் நிராகரிக்கின்றோம். நம்பிக்கையில்லாப்பிரேரணையை வெற்றிகரமாக முகம்கொடுத்து, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முறியடிப்பார்.

மக்கள் துன்பங்களில் இருக்கும் இந்தக்காலத்தில் ஊடகங்கள் இனவாத கருத்துக்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்காமல் மிகப் பொறுப்புடனும் தர்மத்துடனும் செயலாற்ற வேண்டும் என நாம் அன்பாக வேண்டுகின்றோம். எவர் பிழை செய்தாலும் அவர்களை சட்டத்தின்  முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமே ஒழியே,சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தனி மனிதர்கள் எவரும் தீர்ப்புக்களை சொல்ல வேண்டாமென கோருகின்றோம். இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

வடமே மாகாணத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடும் கொடுக்கும் வகையீல் ஜனாதிபதியிடன் எமது கட்சித்தலைவர் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.  எனவும் தெரிவித்தனர். 

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்