அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் சி.சி.ரி.வி கமெராக்கள்

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் சி.சி.ரி.வி கமெராக்கள் ;
தவணைப் பரீட்சைகளும் நடைபெறும் 

( ஐ. ஏ. காதிர் கான் )

   நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி.  கமெராக்களைப்  பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 
   அத்தோடு, பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளை இரத்துச் செய்வதற்கான எந்தவிதத்  திட்டங்களும் இல்லை என்பதோடு, வழமை போன்று க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
   பரீட்சைகளை ஒத்திப்போடுவதால், ஏனைய சில  சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார். 
   அமைச்சரது  இல்லத்தில், 21 ஆம் திகதி  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அமைச்சர்  இவ்வாறு கூறியுள்ளார்.
   அரசாங்கப் பாடசாலைகளில் பாதுகாப்பைப்  பலப்படுத்துவது தொடர்பாகக்  கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான செலவீனங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும்  அமைச்சர்  தெரிவித்துள்ளார்.
   மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தைத்  தொடர்ந்து,  பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதிக்கு ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் மாத விடுமுறையை இரத்துச் செய்வதா என்பது பற்றிய கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

popular posts

டாக்டர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.

6 வயது சிறுவன் அப்துல்லாஹ்வால் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் நன்றி தெறிவித்துள்ளார்

கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்