கைதான பெண்ணுக்கு 50 ரூபாய் அபராதம் விதிப்பு

கத்தி, வாள்கள் ஆகியவற்றுடன் கைதான
பெண்ணுக்கு 50 ரூபாய் அபராதம் விதிப்பு

சுற்றிவளைப்பு தேடுதலின்போது  கத்தி, இரண்டு வாள்கள் ஆகியவற்றை வீட்டில் உடைமையில் வைத்திருந்தார் என்கிற சந்தேகத்தில் கல்முனைக்குடியில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் 05 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு மாத கடூழிய சிறை தண்டனையும், 50 ரூபாய் அபராதமும் இன்று விதித்தது.

கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் இவரை நீதிமன்றத்தில் ஆஜராக்கி தடை செய்யப்பட்ட கத்திகள், வாள்கள் சட்டத்தின் கீழ் இவர் குற்றம் புரிந்து உள்ளார் என்று முன்வைத்தனர். வாள்களில் அராபிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இதே நேரத்தில் இவரை ஆதரித்து சட்டத்தரணிகளான அன்ஸார் மௌலானா, அனோஜ் பிரதௌர்ஸ் ஆகியோர் ஆஜரானதுடன் இவருடைய கணவரால் 13 வருடங்களுக்கு முன்னர் சவூதியில் இருந்து வாள்கள் இவருக்கு அனுப்பப்பட்டன என்றும் கட்டுநாயக்க விமான நிலையம் மூலமாக இவை அப்போது கொண்டு வரப்பட்டிருந்தபோது யாரும் தடுத்து இருக்கவில்லை என்றும் முன்வைத்தனர். இருப்பினும் அவசர கால சட்டத்தின் கீழ் கைது இடம்பெற்று இருக்கின்ற நிலையில் இவர் குற்றத்தை ஒப்பு கொள்கின்றார் என்று தெரிவித்தனர். இந்நிலையில் கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் இவருக்கு குறைந்த பட்ச தண்டனை விதித்தார்.
Tharme

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்