ஆளுநர் அசாத் சாலியால் 201 மில்லியன் பெறுமதியான காசோலை வழங்கி வைப்பு


மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியால் 201 மில்லியன் பெறுமதியான காசோலை வழங்கி வைப்பு
அவசியமான திருத்தப்பணிகளை மேற்கொள்ளவென 60 பாடசாலைகளுக்கு 201 மில்லியன் பெறுமதியான காசோலை மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியால் மாகாண சபைக் கட்டடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பாடசாலைகளுக்கு பொறுப்பான அதிபர்கள் ஆளுநரிடமிருந்து இக் காசோலைகளைப் பெற்றுக்கொண்டனர்.  கல்வி அமைச்சின் செயலாளர் விஜயபந்து வரவேற்புரையை நிகழ்த்தினார். அத்துடன் பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன இந் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விளக்கத்தை வழங்கினார்.
மேல் மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுற்ற பின்னரும் ஆளுநர் இரவு பகல் பாராது விடுமுறை நாட்களிலும் கூட எவ்வித தடையுமின்றி மக்களுக்கு அளப்பரிய சேவைகளை செய்து வருவதாக பிரதீப் யசரத்ன குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பேசிய ஆளுநர் தன்னுடைய மாகாணத்தில் 1285 பாடசாலைகள் உள்ளதாகவும் கல்விக்கே  தன்னுடைய முன்னுரிமை என்றும் குறிப்பிட்டார்.
எதுவித தாமதமும் இன்றி பாடசாலைகளில் மேற்கொள்ளவேண்டியுள்ள திருத்தங்களை  துரிதப்படுத்துமாறு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டதோடு, 335 பாடசாலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவற்றில் எவ்வித தாமதமும் இன்றி 60 பாடசாலைகளில் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சுத்தமான குடிநீர் வசதி, சுகாதாரம், போதியளவு தளபாட வசதிகள் மற்றும் போதியளவு ஊழியப்படையை உள்ளடக்கியதாக, கல்விக்கு முன்னுரிமை  அளிக்கப்பட்டுள்ளதுடன்  இதனை  முன்னெடுத்துச் செல்வதற்கு ஆக்கபூர்வமான பரிந்துரைகள் வரவேற்கத்தக்கது.
அனைத்து மதத்தையும் சார்ந்த மாணவர்கள் ஒரே கூரையின் கீழ் கல்வி கற்பதற்கான 10 மாதிரிப் பாடசாலைகளை அமைப்பதற்கு ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும், அனைத்து சமூகத்தையும் சேர்ந்தவர்கள் பாரபட்சமின்றி சமாதானமாக வாழ இவ் வகைப் பாடசாலைகள் வழிவகுக்கும் என உறுதியளித்தார்.
கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும்  மேற்கொள்வதற்கு ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டார். சர் வதேச பாடசாலைகள் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை எனவும், தரமான கல்வி மற்றும் அவர்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்க,அனைத்து சர்வதேச பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

Comments

popular posts

டாக்டர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.

6 வயது சிறுவன் அப்துல்லாஹ்வால் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் நன்றி தெறிவித்துள்ளார்

கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்