Skip to main content

Posts

Showing posts from May, 2019

முஸ்லிம் பெண் உத்தியோக‌த்த‌ர்க‌ள் அபாயா அணிவ‌தை முற்றாக‌ த‌டை செய்திருப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து

ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் அமைச்ச‌ரின் கீழுள்ள‌ பொது நிர்வாக‌  அமைச்சினால் வெளியிட‌ப்ப‌ட்ட‌ சுற்று நிருப‌த்தில் முஸ்லிம் பெண் உத்தியோக‌த்த‌ர்க‌ள் அபாயா அணிவ‌தை முற்றாக‌ த‌டை செய்திருப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌துட‌ன் மேற்ப‌டி சுற்று நிருப‌ம் திருத்த‌ப்ப‌ட்டு முக‌ம் மூடாத‌ வ‌கையில் ச‌ம‌ய‌ அடையாள‌ ஆடை அணிய‌ அனும‌திக்க‌ வேண்டும் என‌வும் அர‌சாங்க‌த்தை கேட்டுக்கொண்டுள்ள‌து. இது ப‌ற்றி அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌தாவ‌து, ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச ஆட்சிக்கால‌த்தில் கூட‌ இட‌ம்பெறாத‌ அள‌வு இந்த‌ அர‌சாங்க‌ம் முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ ச‌தித்திட்ட‌ங்க‌ளை நிறைவேற்றி வ‌ருவ‌த‌ன் அங்க‌மாக‌வே முஸ்லிம் அர‌ச‌ உத்தியோக‌  பெண்க‌ளின் இதுவ‌ரையான‌ உரிமையை இந்த‌ அர‌சு ப‌றித்துள்ள‌து. அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை  ( 4 ) பிரிவில் ஏதேனும் சமய மரபுகளுக்கு இணங்க தமது ஆடைகளை அமைத்துக்கொண்டுள்ள யாரும் இருப்பின் அவர்கள் ( 1) ஒன்றில் உள்ளவாரான உடையை அணிந்து அதன் பின் அந்த சமய அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும் உத்தியேகத்தார்களால் முழு முகத்தை தெளிவாக அடையாளம் காணக்கூடிய விதத்திலும் மேலதிக ஆடை அணி

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை –

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை –   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம் ஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கொண்டுவரப்பட்டுள்ள சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்ச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவே இதனை நாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் இன்று (30) மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சின் முக்கியஸ்தர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான மஹ்ரூப், செயலாளர் எஸ்.சுபைதீன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் வீ.ஜெயதிலக, மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் பாயிஸ், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நசீர் , உயர்பீட உறுப்பினர் கலாநிதி மரைக்கார், கிழக்கு மாகாண

10மாதிரிப் பாடசாலைகள் திட்டம்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் முயற்சியின் கீழ் சகல வசதிகளுடன் கற்றலுக்கு உகந்த சூழலுடன் 10மாதிரிப் பாடசாலைகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாகாணக் கல்விப்பணிப்பாளர் பீ. ஶ்ரீலால் நோனிஸ், கல்வி அமைச்சின் செயலாளர் ரீ.  விஜயபந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலையின் அதிபர்கள் மற்றும் அப்பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன்  போது கல்வி அமைச்சின்  ஆலோசனையின் அடிப்படையில​யே 10 மாதிரிப் பாடசாலைகள் திட்டம் ஏற்படுத்தப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார். லின்ஸ்சே மகளிர் கல்லூரி, புனித கிளயாஸ் கல்லூரி, ஆதுர்ஷா கல்லூரி, ஜனாதிபதி கல்லூரி – கொட்டாஞ்சேனை, புனித யோவான் கல்லூரி – மட்டக்குளிய, புனித யோவான் கல்லூரி – தெமட்டகொடை, ஏ. ஈ. குணசிங்க மகா வித்தியாலயம், புனித மரியாள் பாடசாலை – பொல்வத்த, டி. எஸ். ஜெயசிங்க மத்திய கல்லூரி – தெஹிவளை மற்றும் இலுகோவித்த வித்தியாலயம் –ஹோமாகம போன்ற பாடசாலைகள் இத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தான் கல்வி பயின்ற டி. எஸ் சேனாநாயக்க கல்லூரியில் மாணவர்கள் மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சரிசமமாக பழகுவதைப் போன்றதான சூழ்நிலை மாணவர

ரிஷாத், அஸாத் சாலி பாராட்டத்தக்கவர்கள் - பைஸர் முஸ்தபா புகழாரம்

முஸ்லிம் சமூகத்துக்காக அஞ்சாது குரல் கொடுக்கும் ரிஷாத், அஸாத் சாலி பாராட்டத்தக்கவர்கள் - பைஸர் முஸ்தபா புகழாரம் ( ஐ. ஏ. காதிர் கான் )    நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடிகள், நெருக்குதல்களிலிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஆலோசனைகள், வழிமுறைகள் குறித்து, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா கவனம் செலுத்தியுள்ளார்.    இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ள அவர், இதற்காக ஜம் இய்யத்துல் உலமாவில் விசேட அலுவலகமொன்றை ஏற்பாடு செய்து, இதில் விசேட குழுவொன்றையும் நியமித்து தன்னிடம் சட்ட ஆலோசனைகளைப் பெறுமாறும் ஜம் இய்யத்துல் உலமாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    சர்வதேச பயங்கரவாதத்தின் கைக்கூலியாக உள்ள சில முஸ்லிம் இளைஞர்களை பூண்டோடு அழிப்பதற்கு முஸ்லிம்கள் காட்டி வரும் அக்கறை, ஆர்வத்தை நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுக்கு அண்மையில் இடம்பெற்ற சந்திப்புக்களில் எடுத்து விளக்கிய பைஸர் முஸ்தபா எம

பள்ளிவாசல்களை உடைத்து முஸ்லிம்களுக்கிடையில் குழப்பங்களை உண்டுபன்ன எவரும் முயற்சிக்கவேண்டாம்-ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

பள்ளிவாசல்களை உடைத்து முஸ்லிம்களுக்கிடையில் குழப்பங்களை உண்டுபன்ன எவரும் முயற்சிக்கவேண்டாம்-ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர வேண்டுகோள். (ஊடகப்பிரிவு) கெகிராவை, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன். முஸ்லிம்களுக்கு மத்தியில் மதரீதியான, கோட்பாடுரீதியான பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம் அவைகளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்களை உடைப்பது தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வது மிகமோசமான ஒரு பயங்கரமான செயலாகும்.இவ்வாறான செயல்களினூடாக முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு தாங்களே அழிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இன்று இச்சம்பவங்களை ஏற்படுத்தியிருக்கின்ற பயங்கரவாதிகளின் குறிக்கோள்களாகும். ஆகவே தயவு செய்து எவரும் அதற்கு இடமளிக்கக்கூடாது தௌஹீத் பள்ளிவாசல்களை உடைப்பதோ தப்லீக், தௌஹீத், சூபிஸம் வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வதினூடாக ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியாது.எனவே இதுதொடர்பான விடயங்கள் விரிவாக

வெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ;

வெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ; மினுவாங்கொடை பாடசாலையில் அனுமதி மறுப்பு ( மினுவாங்கொடை நிருபர் )    உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைக் காரணமாக வைத்து, சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களை வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு சமூகமளிக்கச் செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள், மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.    இது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கைகள், மினுவாங்கொடை புருல்லப்பிட்டிய (சிங்கள) மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை பிரதேச வாழ் முஸ்லிம் பெற்றோர் மிகவும் கவலையுடன் தெரிவித்தனர்.    இதற்கு முன்பு, இப்பாடசாலையில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களை, வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை தினத்தன்று உரிய நேரத்திற்கு வீடுகளுக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால், கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினத்தன்று, இம்மாணவர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக வீடு செல்வதற்கு, குறித்த பாடசாலையின் அதிபர் ஊடாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.    இதேவேளை, "

ஆளுநர் அசாத் சாலியால் 201 மில்லியன் பெறுமதியான காசோலை வழங்கி வைப்பு

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியால் 201 மில்லியன் பெறுமதியான காசோலை வழங்கி வைப்பு அவசியமான திருத்தப்பணிகளை மேற்கொள்ளவென 60 பாடசாலைகளுக்கு 201 மில்லியன் பெறுமதியான காசோலை மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியால் மாகாண சபைக் கட்டடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. குறித்த பாடசாலைகளுக்கு பொறுப்பான அதிபர்கள் ஆளுநரிடமிருந்து இக் காசோலைகளைப் பெற்றுக்கொண்டனர்.  கல்வி அமைச்சின் செயலாளர் விஜயபந்து வரவேற்புரையை நிகழ்த்தினார். அத்துடன் பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன இந் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விளக்கத்தை வழங்கினார். மேல் மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுற்ற பின்னரும் ஆளுநர் இரவு பகல் பாராது விடுமுறை நாட்களிலும் கூட எவ்வித தடையுமின்றி மக்களுக்கு அளப்பரிய சேவைகளை செய்து வருவதாக பிரதீப் யசரத்ன குறிப்பிட்டார். இந் நிகழ்வில் பேசிய ஆளுநர் தன்னுடைய மாகாணத்தில் 1285 பாடசாலைகள் உள்ளதாகவும் கல்விக்கே  தன்னுடைய முன்னுரிமை என்றும் குறிப்பிட்டார். எதுவித தாமதமும் இன்றி பாடசாலைகளில் மேற்கொள்ளவேண்டியுள்ள திருத்தங்களை  துரிதப்படுத்துமாறு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்

மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உதவி!

இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட கினியம, வெல்லவ பகுதிகளுக்கு மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உதவி! ++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++ +++++++++++ (மாவனல்லை  நிருபர்) குருநாகல் மாவட்டத்தில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட கினியம மற்றும் வெல்லவ பகுதிகளுக்கு  மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினர் விஜயம் செய்தனர். இதன்போது, இனவாத தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கினியம பிரதேசத்துக்கான நிவாரண பொருட்களை கினியம தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் எம்.எச்.சதகதுல்லாஹ்விடம் மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் எம்.கே.எம.மிக்ஷாட் வழங்கி வைத்தார். அத்துடன், வெல்லவ பகுதிக்கான ஒரு தொகை நிவாரணப் பொதிகள் வெல்லவ ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் அல்-ஹாஜ் பௌசானிடம் ஒப்படைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.  

அமைச்சர்எஸ்.பி திஸ்ஸாநாயக்க,அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன்தொலைபேசியில் உரையாடியபோது.

52  நாட்கள்   அரசியல் பிரளயத்தின்   போது ,   மஹிந்த தலைமையிலான   புதிய அரசாங்கத்தை   அமைப்பதற்காக  பாராளுமன்ற  உறுப்பினர்களுடன்   பேரம் பேசிய   முன்னாள்   அமைச்சர் எஸ் . பி   திஸ்ஸாநாயக்க , அமைச்சர்   ரிஷாத்   பதியுதீ னுடன் தொலைபேசியில்   உரையாடிய போது .   SB:                  ரிஷாட் ....   RB  :                 ஆம் ,  அமைச்சரே ! SB:                ரிஷாட் ....   RB:                ஆம் ,  கதைக்கிறேன் ...   SB:                பேசக்கூடிய இடத்திலயா   இருக்கிறீங்க ?  RB:                சொல்லுங்கள் ...   S B:      ஓட   வேண்டிய ஓட்டங்களையெல்லாம்   ஓடி முடித்துவிட்டோம் .   துமிந்த   உட்பட எல்லோரும் முடிவாயிட்டு .   சின்னச்    சின்ன ஆட்களை   உள்வாங்கி பிரயோசனம்   இல்லை.   இது தான்   சந்தர்ப்பம்    நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக   வந்திருங்கள்   RB:                ஆஹ்ஹ் ...   SB:                பெரிய எதிர்பார்ப்போடு   இருக்கிறோம் .   RB:                அப்படியா !   SB:                இரண்டு ஜனாதிபதியும்   ரெடியாக இருக்கின்றனர் .    இப்ப   நீங்கள் வந்த

There are no Moulavis functioning in an Advisory capacity to me as the Minister.

No Islamic cleric ever functioned as an Advisor to Sri Lanka’s Minister of Industry and Commerce. And contrary to the allegations levelled against him, Minister Rishad Bathiudeen never exerted pressure on the Commander of the Army to release any arrested person. “There are no Moulavis functioning in an Advisory capacity to me as the Minister. Therefore none of the arrested Moulavis to-date were my advisors. My two official Advisors have been Mr Roy Jayasinghe and Dr Azees” said the Minister of Industry, Commerce, Resettlement of Protracted Displaced Persons, Cooperative Development, Skills Development & Vocational Training Rishad Bathiudeen in Parliament on 22 May. Using his right to reply in the House, Minister Bathiudeen was making his statement to clear various allegations levelled against him by local Politicians. Minister Bathiudeen continued: “It has been also reported earlier that a Coordinating Secretary of mine was arrested. That too was a lie and a totally false s

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் சி.சி.ரி.வி கமெராக்கள்

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் சி.சி.ரி.வி கமெராக்கள் ; தவணைப் பரீட்சைகளும் நடைபெறும்  ( ஐ. ஏ. காதிர் கான் )    நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி.  கமெராக்களைப்  பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.     அத்தோடு, பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளை இரத்துச் செய்வதற்கான எந்தவிதத்  திட்டங்களும் இல்லை என்பதோடு, வழமை போன்று க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.     பரீட்சைகளை ஒத்திப்போடுவதால், ஏனைய சில  சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.     அமைச்சரது  இல்லத்தில், 21 ஆம் திகதி  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அமைச்சர்  இவ்வாறு கூறியுள்ளார்.    அரசாங்கப் பாடசாலைகளில் பாதுகாப்பைப்  பலப்படுத்துவது தொடர்பாகக்  கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான செலவீனங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும்  அமைச்சர்  தெரிவித்துள்ளார்.    மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் ச

அர‌புக்க‌ல்லூரிக‌ளை ச‌ரியாக‌ நிர்வ‌கிக்க‌ முடியும் என்றிருந்தால் அவ‌ற்றை க‌ல்வி அமைச்சின் கீழ் கொண்டு வ‌ருவ‌தை நாம் எதிர்ப்ப‌த‌ற்கில்லை

இஸ்லாமிய‌ ம‌த‌த்தை க‌ற்றுக்கொடுக்கும்  அர‌புக்க‌ல்லூரிக‌ளை ச‌ரியாக‌ நிர்வ‌கிக்க‌ முடியும் என்றிருந்தால் அவ‌ற்றை க‌ல்வி அமைச்சின் கீழ் கொண்டு வ‌ருவ‌தை நாம் எதிர்ப்ப‌த‌ற்கில்லை என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் கூறிய‌தாவ‌து, க‌ட‌ந்த‌ ஈஸ்ட‌ர் த‌ற்கொலை குண்டுக‌ளுக்கும் அர‌பு ம‌துர‌சாக்க‌ளுக்கும் முடிச்சு போடுவ‌து வ‌டிக‌ட்டிய‌ முட்டாள்த்த‌ன‌மாகும். ஏனென்றால் இத்தாக்குத‌லில் ஈடுப‌ட்ட‌ ஒருவ‌ரைத்த‌விர‌ ஏனையோர் அர‌பு ம‌துர‌சாக்க‌ள் ப‌க்க‌ம் எட்டியும் பாராதவ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளில் அனேக‌மானோர் கல்லூரிக‌ளிலும் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளிலும் க‌ல்வி க‌ற்ற‌வ‌ர்க‌ள்.  இந்த‌நாட்டில் சுமார் நூறு வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ அர‌புக்க‌ல்லூரிக‌ள் இய‌ங்கிக்கொண்டிருக்கின்ற‌ன‌. அவ‌ற்றில் ப‌டித்த‌ எவ‌ரும் தீவிர‌வாத‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌ட்ட‌தாக‌ வ‌ர‌லாற்றில் ப‌திய‌ப்ப‌ட‌வில்லை. த‌ற்கொலைதாரிக‌ளில் ஒருவ‌ரான‌ ஸ‌ஹ்ரான் என்ப‌வ‌ர் த‌வ்ஹீத் சார்பு அர‌பு ம‌துர‌சாவில் க‌ல்வி க‌ற்ற‌வ‌ரும் அல்ல‌. நூறு வீத‌ம் த‌வ்ஹீதுக்கு மாற்ற‌மான‌ காத்தான்குடி ப‌லாஹ் ம‌துரசாவிலேயே ப‌ல‌ கால‌ம் க‌ல்வி க

ஞானசாரதேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாடம் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி உரையாடல்

பொதுப்பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரின் விடுதலை தொடர்பில்  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களிடம் உரையாடியுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். பொதுப்பலசேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசாரதேரரை வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று காலை சந்தித்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு ஆளுநர் தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்றதான தீவிரவாதச் செயற்பாடுகள் தொடர்பிலான தேரரினுடைய எதிர்வுகூறல்கள் சரியாக அமைந்நதெனவும் மேலும் குறிப்பிட்டார். தேரருடன் காணப்பட்ட மத ரீதியிலான வேறுபாடுகள் அவர் சிறை செல்லுவதற்கு முன்னதாகவே சுமுகமாக தீர்க்கப்பட்டதெனவும்,  தேசிய அபிவிருத்தியை  ஏற்படுத்திக் கொள்ள இரு சமுகத்தவர்களின் இணைப்புடன் குழுவொன்று  ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே ஞானசாரதேரரின் கைது இடம் பெற்றதெனவும் கூறினார். அனைத்து  வேறுபாடுகளையும் மறந்து ஒரே குடையின் கீழ் பணியாற்ற வேண்டியதான முக்கிய தருணம் இதுவென மேலும் கூறினார். பொதுப்பலசேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசாரதேரரின் அறிக்கையை ச

ஆட்டமிழக்குமா சமூகக்குரல்!

கடும் போக்காளர்களின் கடைசிப்பந்து வீச்சு : ஆட்டமிழக்குமா சமூகக்குரல்!   -சுஐப் எம் காசிம்- இலங்கை முஸ்லிம்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்குதல்கள்,கெடுபிடிகளிலிரு ந்து ஆறுதல் குரல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை சில சக்திகள் ஒடுக்க முனையும் போக்குகள் அரசியல் களத்தை அனல் தெறிக்க வைத்துள்ளது. நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த இத்தீய சக்திகளின் ஒடுக்கல் போக்குகளும் ஓரங்கட்டும் முயற்சிகளும் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அச்சுறுத்துகின்றன. மதத்தின் பெயரால் எமது நாட்டில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களைக் கையிலெடுத்துள்ள இத்தீய சக்திகளுக்கு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலையும் ஒரு தைரியத்தைக் கொடுத்துள்ளது.   வில்பத்து, மீள்குடியேற்றம், வீடமைப்பு முதல், வியாபாரம் வரை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் இச்சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது.இதன் ஒவ்வொரு கட்டங்களையும் அமைச்சர் எதிர்கொள்ளும் திராணி ஆண்டவன் அமைச்சருக்கு வழங்கிய அருளாகவே கருத வேண்டியுள்ளது . எதிலும் பின்வாங்காது,எதற்கும் சளைக்காது தடைகளைக் கடக்கும் அமைச்சரு

அனைவருக்கும் இடையிலான புரிந்துணர்வினாலேயே எமது சகவாழ்வு பூரணத்துவம் பெறும்

- மினுவாங்கொடை மெதடிஸ் ஆலய நதீர பெர்னாண்டோ ( ஐ. ஏ. காதிர் கான்,பெளசுல் அலீம் )     சமூகங்களுக்கிடையில் விழிப்புணர்வையும் அமைதியையும் ஏற்படுத்துவதே இன்றைய காலத்தின் தேவை. இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு, அரசியல் மற்றும் சமூக சமயத் தலைவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என, மினுவாங்கொடை மெதடிஸ் ஆலய பங்குத்தந்தை நதீர பெர்னாண்டோ தெரிவித்தார். மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலில், பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மெளலவி எம்.எஸ்.எம். நஜீம் (இல்ஹாரி) தலைமையில்  நல்லிணக்க வெசாக் ஒன்று கூடல் நிகழ்வு, (19) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆலய பங்குத்தந்தை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    அவர் மேலும் இந்நிகழ்வில் பேசும்போது,  நாம் வன்முறைகள், வெறுப்புணர்வுகள் போன்றவற்றை முழுமையாக நிராகரிக்க வேண்டும். அத்துடன், அனைத்து மக்களினதும் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.     நாம் சக ஒற்றுமை தொடர்பில் கதைக்கின்றோம். ஒருமித்து வாழுதல் என்பது, ஒருவருடன் ஒற்றுமையுடன் கழிப்பது மாத்திரமல்ல. ஒரு

முஸ்லிம் அரசியல்வாதிகளை கைது செய்ய முடியாது–ஜனாதிபதி மைத்ரி அதிரடி!

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. இன்றிரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளன. அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு சபைக்கு அப்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதில் பிரதமர் ,சபாநாயகர் ,எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் அங்கம் வகிப்பார்கள். பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நானும் அதில் இருப்பேன்.அந்த சபை அடிக்கடி கூடி ஆராயும். இப்போது எல்லோரும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரை கைது செய்யுமாறு கோருகின்றனர்.அப்படியெல்லாம் செய்துவிட முடியாது.அவர்கள் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அப்படி செய்தால் முஸ்லிம்களை தீவிரவாதத்திற்குள் நாங்கள் தள்ளுவதாகவே அமையும். அமைச்ச

உம்மா என்னை பொலிஸில் ஒப்படையுங்கள் என மகள் தான் கூறினார்

மாவனெல்லை சிலை உடைப்பு பிரதான சூத்திரதாரி சாதிக்கினால் 4 மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த மனைவி சஹீதாவின் கதை மாவ­னெல்லை புத்­தர்­சிலை தகர்ப்பின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­களில் ஒரு­வ­ராகக் கரு­தப்­படும் 29 வய­து­டைய மொஹம்மட் இப்­ராஹிம் சாதிக் அப்­துல்­லாஹ்வின் மனை­வி­யான 24 வய­து­டைய பாத்­திமா சஹீதா கடந்த மாதம் 26 ஆம் திகதி மாவ­னெல்லை முருத்­த­வெல பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்­றி­லி­ருந்து பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்டார். தற்­போது குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் பொறுப்பில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். இவ­ரது கண­வ­ரான சாதிக் அப்­துல்லாஹ் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் எனவும் பாது­காப்புத் தரப்பு இனம் கண்­டுள்­ளது. கடந்த மாதம் 25, 26 ஆம் திகதி ஊட­கங்­களில் இவ­ருடன் சேர்த்து மூன்று ஆண்­களும் மூன்று பெண்­க­ளு­மாக ஆறுபேர் பாது­காப்புப் பிரிவால் தேடப்­ப­டு­வ­தாக புகைப்­ப­டங்­க­ளுடன்  வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. இவ்­வாறு வெளி­யாகி 24 மணி நேரத்­