BREAKING NEWS

பயங்கர வாத தாக்குதல் சம்பந்தமாக சர்வமதத் தலைவா்கள்சர்வமதத் தலைவா்கள் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடகவியலாளா் மாநாடு

(அஸ்ரப் ஏ சமத்)

கொழும்பு-7 பௌத்தலோக மாவத்தையில் உள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ்  அலுவலகத்தில் கடந்த ஞாயிறு நடைபெற்ற பயங்கர வாத தாக்குதல் சம்பந்தமாக சர்வமதத் தலைவா்கள் இணைந்து ஊடகவியலாளா் மாநாடொன்றை இன்று (28) பி.ப. 3.00 மணிக்கு நடாத்தினாா்கள்.

இவ் ஊடக மாநாட்டினை கலாநிதி ஒமல்பே சோபித்த தேரா் தலைமையில் நடைபெற்றது.

இவ் ஊடக மாநாட்டில் சகல மதத் தலைவா்களும் மெழுகுவாத்தி ஏற்றி உயிா் நீத்தவா்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்கள்.

கலாநிதி இத்பான்கே தம்மலங்கார தேரா்  கிரிஸ்த்துவ மதத்தின் சாா்பில்  மல்கம் கார்டினா் ரன்ஜித் ஆண்டகை, இந்து மதத்தின் சாா்பில்  சிவசிறி கு.வை. க வைத்தீஸ்வர குருக்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவா் அஸ்சேக் றிஸ்வி முப்தி, அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவா் ஜகத் சுமதிபால ஆகியோறும்  கலந்து கொண்டு கருத்துக்களைத்  தெரிவித்தனா்.

இங்கு கருத்து தெரிவித்த  இதபான்கே தம்மலங்கார தேரா்,

 இந்த நாட்டில்  கடந்த கால யுத்தில் இருந்து மீண்டுள்ள இலங்கை மீண்டும் ஒரு பாதாள உலகத்திற்கு கொண்டு செல்லாமல் மத ரீதியாக சகல மதத் தலைவா்களும் ஒன்று கூடி இந்த பயங்கரவாத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும். அதற்காக இந்த நாட்டில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதில் முஸ்லிம் பெண்கள் அணியும் முக மூடி புர்காவை அணியாமல் விடுவதற்கு  இஸ்லாமிய மாா்க்கத் தலைவா்கள் வேண்டுதல் விடுக்க வேண்டும். மற்றது இந்த நாட்டில் சிறந்த பாதுகாப்புதுறையில் தோ்ச்சி பெற்ற சி.ஜ்.டி யினா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு அரசாங்கம் பொதுமண்னிப்பு வழங்கி அவா்களை விடுவித்தல் வேண்டும். என வேண்டிக் கொண்டாா்.

மல்கம் கார்டினா் ரண்ஜித்,

கடந்த ஞாயிறு புனித நாளில் ஆலயங்களில் கொலை செய்த தற்கொலைதாரா்களின் பின்னா் ஒரு பாரிய அரசியல் அல்லது வெளிநாட்டுச் சக்தி உள்ளது.  அதனை எமது பாதுகாப்புப் பிரிவினா்  ஆராய்ந்து வெளிப்படுத்தல் வேண்டும். எமது மக்கள் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடவில்லை அவா்கள் இத் தாக்குதலுக்காக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக விரலை நீட்டவில்லை. எதிா்காலத்திலும் நாம் அவா்களை எதிராக வன்முறையில் ஈடுபட விடப்போவதும் இல்லை.

இந்த உலகில் 1ஆம் உலகப் போா், 2ஆம் உலகப் போா் பிற்பாடு சில நாடுகள் ஆங்காங்கே தமது ஆயுத உற்பத்திகளை விற்பதற்காக சில நாடுகளை துாண்டி அங்கு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு அதி்ல் அவா்கள் ஆயுதங்களையும் வழங்களையும் சுறையாடுவாா்கள்.

அந்த வகையில் கொரியா, கம்போடியா, ஆப்கணிஸ்தான், ஈரான்-ஈராக், ஈராக் -குவைத் .சுடான் ஆபிரிக்க  இஸ்ரேல் பலஸ்தீன் சிறியா, போன்ற நாடுகளை துாண்டி விடுவாா்கள் அந்த  வகையில் தான் எமது நாடு கடந்த 27 ஆண்டுகள் யுத்தத்ம் செய்து அதில் பாடம் கற்று மீண்டு எழுந்தோம்.

அதில் தமக்கு நிறைய பாடம் கற்றுக்கொண்டோம் அந்த வகையில் நாம் மதங்கள், இன்னும்மொறு மத்திற்கு அவா்களது கலை கலாச்சார விழுமியங்களுக்கு நாம் அழுத்தம் கொடுப்பது சரியில்லை அதுவும் கூடாது ஆகவே நாம் இந்த நாட்டில் சிறந்த பாதுகாப்புப் படையினா் ஆதரவு ஒத்துழைப்பும் வழங்கி அண்மைய குண்டுதாரிகளை அடியோடு கழைந்து இந்த நாட்டினை மீள கட்டியெழுப்புவோம் என ரண்ஜித் ஆண்டகை அங்கு கூறினாா்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவா் றிஸ்வி முப்தி தகவல் தருகையில்,

இஸ்லாம் ஒருபோதும் இந்த தற்கொலையை அனுமதிக்க வில்லை. இந்த பயங்கரவாதத்தினை அடியோடு இந்த நாட்டில் கலைந்து எறிய எமது அமைப்பினரும் முஸ்லீம் சமுகமும் என்றும் ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கும். அத்துடன் முக மூடி அணிந்து பெண்கள் வெளியே போகாமல் வீடுகளுக்குள் இருக்க முடியும். அதனை பாதுகாப்புப் கருதி அணிந்து கொள்ளாமல் தவிர்ப்பது சிறந்தது என நாம் ஏற்கனவே முஸ்லீம் பெண்களுக்கு அறிவித்து விட்டோம்.  பாதுகாப்புப்படையினரும் ஏனைய சமுகத்தினரும் ்அச்சமும் முக அடையாளததிற்காக பாதுகாப்புக் காரத்திற்கான அதனை அணியாமல் விடுவது சாலச் சிறந்ததாகும். என சொல்லியிருக்கின்றோம். எம்மை பொறுமை காத்து சிறந்த ஒரு தலைமைத்துவத்தினை வழங்கிய மல்கம் கார்டினா் ரண்ஜித் ஆண்டகைக்கு நாமும் எமது இலங்கை வாழ் முஸ்லிம் சமுகமும் என்றும் நன்றியுடைவராகவும் ஒரு சரித்திரத்தில் எழுதக் கூடிய அவரின் முடிபினை நாம் மெச்சுகின்றோம் எனவும் கூறினாா்.

சிவசிறி வை வைத்தீஸ்வர குருக்கள்.
 இந்த சா்வ மத எடுக்கும் எந்த முடிபுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். கடந்த 30 வருட கால யுத்தின் எமது சமுகம் பண்ட கஸ்டங்கள் நஸ்டங்கள் இனியும் வராது நாம் இலங்கையா் என வாழ்ந்து இந்த  நாட்டினை கட்டியெழுப்ப பாடுபடுவோமாக எனக் கூறினாா்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar