Skip to main content

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

சிங்களத் தீர்வு என்பது தீர்த்துக்கட்டுதலன்றி வேறில்லை


***********************************
கல்முனை தமிழ்பேசும் நிர்வாகங்களுக்டைகியில் இருந்து வந்த பிரச்சினை சிங்களத் தீர்வை நோக்கி நகர்கிறது.

கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வரை  தனிக்கணக்காளர் ஒருவரை உப செயலகத்துக்கு நியமிக்க வேண்டும் என்று தமிழர் பிரதிதிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மொழியப்பட்ட மாற்று நடவடிக்கை யோசனையை இரண்டு தரப்பு அரசியல் பிரதிநிதிகளும் ஏற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.அதாவது செயலகத்தை தரமுயர்த்துவது பற்றிய இறுதி முடிவை எடுக்கும் வரை கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் ஆகியவற்றின் நிதி விவகாரங்களை கணக்காளர் இனி அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து கையாள்வார் என்பதே அந்த மாற்று நடவடிக்கையாகும்.

கல்முனை முஸ்லிம்களுக்கும்,கல்முனைத் தமிழர்களுக்கும் கல்முனையை விடவும் அம்பாறை நகரம் அண்மையில் அமைந்திருக்கிறதா?

ஒரே மொழி பேசுகிற, நூற்றாண்டுகளாக ஒரு விதப் புரிதலோடு பரஸ்பரம் கலாச்சாரப் பரிமாற்றம் செய்து வந்த தமிழர்களும் முஸ்லிம்களும் தமக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பது என்ற பெயரில் அப்பத்தை குரங்கின் கையில் கொடுக்க சம்மதம் தெரிவித்துவிட்டார்களா?

கடந்த 30 வருடங்களாக கரையோர மாவட்டம் கோரி அரசியல் செய்து வந்த அம்பாறை முஸ்லிம் தேசிய அரசியல்வாதிகள் கரையோர மாவட்டம் தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்குள் பிணக்குகள் ஏற்பட்டால் மாவட்டத்தின்  தலை நகராக அம்பாறை நகரை ஏற்றுக்கொள்வார்களோ?

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிணக்கில் நடுநிலைச் சமூகமான முஸ்லிம்கள், பக்கம் சாராதிருந்து மத்தியத்தம் வகிப்போம் என்று சொன்ன அஷ்ரஃபின் வழி வந்ததாகக் கூறிக்கொள்ளும் இன்றைய முஸ்லிம் தலைவர்கள் அம்பாறையில் இருக்கும் தமிழ் முஸ்லிம் பிணக்கைத் தீர்த்துவைக்கும் பொறுப்பை சிங்கள அரசியல் தரப்பே ஏற்கவேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறார்களா?

தமிழர் தரப்பு தமது விடுதலைக்காக ஏழு தசாப்தகாலம் தொடர்ந்தேர்ச்சியாக அகிம்சை மற்றும் வன்முறை வடிவங்களில் பேரினவாதிகளோடு மோதி வருகிறது. இவ்வாறு நெடுங்காலம் தாம் மோதி வருகிற பேரினவாத அரசியல் தரப்பே சொற்பகாலமாக இருந்து வருகிற தமிழ் முஸ்லிம் பிணக்கை நடு நிலையாக நின்று தீர்த்துவைக்கப் பொருத்தமானது என்று தமிழ்த் தேசியவாதிகள் நம்புகிறார்களா?

தமிழ் மற்றும் முஸ்லிம் தேசிய அரசியல் போக்குகள் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான போக்கில் நுழைந்திருப்பதை கடந்த ஒரு தசாப்தகால அனுபவம் உணர்த்துகிறது. அதே நேரம் 2015 இல் இருந்து இலங்கைத் தமிழர்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரே தமிழ் அரசியல் கூட்டுக் கட்சியும், இலங்கை முஸ்லிம்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவம் செய்கின்ற இரண்டு முஸ்லிம் கட்சிகளும் ஒரே சிங்களக் கூட்டுக்கு ஆதரவளிக்கின்ற நிலைமையைக் கருத்தில் எடுத்து  தமிழ் முஸ்லிம் பிணக்குகளை கையாளும் வியூகத்தை அரசு வகுத்திருப்பது, குறித்த பிணக்குக்கு எவ்விதத் தீர்வையும் தராது, காலத்தை இழுத்தடிக்கும் தந்திரமே ஆகும். பட்ஜட்டை வெல்வதற்கான வாக்குகளை சிறுபான்மைக் கட்சிகளிடம் இருந்து பெற்றாயிற்று. இதற்காக தமிழ் பேசுவோரின் கல்முனை பிரதேச செயலகக் கணக்காளரை, நூறு வீதம் சிங்கள ஆதிக்கத்தை வைத்திருக்கும்- பள்ளிவாயிலை நொருக்கிய அம்பாறை நகருக்கு எடுக்க ஒப்புதலாயிற்று. இனி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைக் கொண்டு வெற்றி பெற்றால் கிழக்கில் மடத்தனமாக முரண்படும் தமிழ் முஸ்லிம் அரசியலை மூலதனமாகக் கொண்டு கிழக்கில் அரச அனுசரணையுடன் சிங்கள குடியேற்றங்களைச் செய்து அதனைச் சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசமாக மாற்றிவிடலாம்.

தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் உள்ள இவ்வாறான பிரச்சினைகளைத் தமிழ் முஸ்லிம் கட்சிகள் தமக்குள்ளே பேசி முடிவுக்கு கொண்டு வர முடியாமலிருப்பது ஏன்?

தமிழ் முஸ்லிம் கட்சிகள், பிரதேச ரீதியாகக் கோலோச்சுகிற இனவாத, பிரதேசவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஊறி அரசியலில் காலூன்றி நிற்கிற தமது குறுநில மன்னர்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் கண்டு அஞ்சுகின்றன.மேலும் தலைமைகளும் இதே வடிவிலான அரசியல் போக்கை கடைப்பிடிப்பதாலும், தலைமைகள் பலவீனமாக உள்ளதாலும் சிறுபான்மையினர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சினைகளாகக் கருதி தமக்குள்ளே தீர்வைத் தேடிக்கொள்ளும் அறத்தன்மையை இவர்கள் இழந்துவிட்டார்கள்.

சிங்களவர்களை விடவும் தமிழர்களே அதிக ஆபத்தானவர்கள் என்று முஸ்லிம்களுக்குள் பிரச்சாரம் செய்து அரசியல் பிழைப்பு நடாத்துகிற வழிமுறையைத் தொடங்கிவைத்த, சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு சாமரம் வீசிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் பரம்பரையே தனிக்கட்சி என்ற முகமூடியுடன் இன்று முஸ்லிம் அரசியல் தளத்தில் வீரியமுடன் இருக்கிறது. இவ்வாறே  சிங்களவர்களை விடவும் முஸ்லிம்களே அதிக ஆபத்தானவர்கள் என்று தமிழர்களுக்குள் பிரச்சாரம் செய்து அரசியல் பிழைப்பு நடாத்துகிற வழிமுறையைத் தொடங்கிவைத்த சில தமிழ் அரசியல்வாதிகளின் சில வாரிசுகள் இன்னும் கிழக்குத் தமிழரசியல் தளத்தில் வீரியமுடன் இருக்கிறார்கள்.இந்த இரு தரப்புகளும் மக்களால் மாற்றப்படாதவரை கிழக்கைச் சிங்களவர்களுக்குத் தாரைவார்த்துவிட்டு தமிழ் முஸ்லிம்களின் அடுத்த பரம்பரைக்கு அடிமை விலங்கு பூட்டப்படுவதை எவராலும் தடுக்க முடியாது போகலாம்.

தமிழரசியலும் முஸ்லிம் அரசியலும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பரஸ்பரம் எதிராக இருக்கிற அதேவேளை; இருவகைச் சிங்கள பௌத்த தேசிய அரசியலும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.இந்நிலமையை சாதாரண தமிழ் முஸ்லிம் மக்களுக்கு விளங்கப்படுத்தவேண்டிய கடமை தமிழ் முஸ்லிம் குடிமைச் சமூகத்துக்கு உண்டு.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முஸ்லிம்   நிர்வாக முரண்கள் இன்னும் நூறு வருடங்கள் நீடித்தாலும் இதனால் வருகிற நட்டம் என்பது சிங்களத் தரப்பை நடுவர்களாகக் கொண்டு இம்முரண்களைத் தீர்ப்பது போல பாசாங்கு காட்டுவதனால் ஏற்படும் நட்டத்தை விடவும் மிகக்குறைந்ததாகவே இருக்கும் என்பது நிச்சயமாகும்.
Basheer Segu Davood

Comments

Popular posts from this blog