கொழும்பு உம்மு ஸவாயா அரபுக்கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழா


( மினுவாங்கொடை நிருபர் )

   கொழும்பு -  12, உம்மு ஸவாயாவில் இயங்கிவரும்  அஜ்வாத் அல் -  பாஸி அரபுக் கல்லூரியின் ஏழாவது வருட பட்டமளிப்பு விழா   உம்மு ஸவாயா மண்டபத்தில், "கலீபதுல் குலபா" மெளலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில், (31) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இச்சிறப்பு நிகழ்வில், உம்மு ஸவாயாவின் தலைவர் மக்கி ஹாஷிம், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட  தொழிலதிபர் இல்யாஸ் அப்துல் கரீமுக்கு நினைவுச்  சின்னம் வழங்கிக் கெளரவித்தார்.  அஷ்ஷெய்க்  அஸ்ஸெய்யித்  பஷீர் தங்கள்,  அஸ்ஸெய்யித் சுலைமான்  முர்ஷிட் முஹியத்தீன் மற்றும் கலீபதுஷ்ஷாதுலியாக்கள், முகத்தமீன்கள்,  முஹிப்பீன்கள், இஹ்வான்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

( மினுவாங்கொடை நிருபர் )

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா