இருவர் புத்தம் புதிய வேனுக்குள் இருந்து தாக்குதல் நடத்தியவாறே தற்கொலை செய்து கொண்டனர்.


சந்தேகத்திற்கிடமான வீடு,வாகனம் மற்றும் ஆள் நடமாட்டம் தொடர்பில் பொதுமக்கள் சிலர் விசாரிக்க முற்பட்டவேளை அங்கிருந்த IS தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது!

உடனடியாக விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கினர் பொதுமக்கள்!

விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது தீவிரவாதிகளில் இருவர் புத்தம் புதிய வேனுக்குள் இருந்து தாக்குதல் நடத்தியவாறே தற்கொலை செய்து கொண்டனர்.

இரண்டு தீவிரவாதியின் சடலமும் ஆயுதமும் அந்த வேனின் உள்ளே இருந்து மீட்கப்பட்டது! இரு அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டன.

பதிவு செய்யப்படாத புத்தம் புதிய வேன் கடந்த 19 ஆம் திகதி அக்கரைப்பற்றில் பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது!

NTJ தலைவன் ஸஹ்ரானின் சகோதரன் நியாஸ் என்பவனே குறித்த வேனை கொள்வனவு செய்திருந்தான்.

அக்கம்,பக்கமுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தீவிரவாதிகள் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட முடியவில்லை.

தற்கொலைதாரிகள் மேலும் உள்ளே இருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தீவிரவாதிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையின்போது பொதுமகன் ஒருவரும் பலியாகி உள்ளார். மேலும் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

(மேலும் விரிவான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் பகிரப்படும்.)

-அல்மசூறா பிறேக்கிங் நியூஸ்

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா