தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களான சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளான தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் ‘டெய்லி மெயில்’ பத்திரிகை இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது.

இன்ஷாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் ஆகியோரின் படங்களே வெளியிடப்பட்டுள்ளன.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகர் இப்ராஹிம் தெமட்டகொடவில் வைத்துப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா