ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
*#தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு* #
---------------------------------------
கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் நேற்று (16.04.2019) கமு/அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் தனது அங்கத்தவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இறைவனின் உதவியால் சிறந்தமுறையில் நடைபெற்று முடிவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இந் நிகழ்விற்கு,
*ALM.Haleem* (சிரேஷ்ட விரிவுரையாளர்- SEUSL)
*HM.Nijam* ( சிரேஷ்ட விரிவுரையாளர்- SEUSL)
*Mufizal Aboobackar* (சிரேஷ்ட விரிவுரையாளர்- UOP)
ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
Comments
Post a comment