எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
மக்கா பிறை அறிவித்தலை ஏற்க வேண்டும் என நாம் சொல்வது பிரச்சினைக்கான தீர்வாகவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கா பிறை அறிவித்தல் வர தாமதமான நிலையில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிறை தென்பட்டால் தாராளமாக அம்மக்கள் அதனை ஏற்கலாம்.
நாம் சொல்வது அந்நாடுகளில் பிறை காணப்படாத நிலையில் மக்கா பிறை அறிவிக்கப்பட்டால் அதனை ஏற்க வேண்டும் என்கிறோம். மக்காவின் அறிவித்தல் வரும் போது அந்நாடுகளில் விடிந்து விடுமே என சொல்வது இஸ்லாமிய அடிப்படைகளை புரியாமையாகும்.
இஸ்லாம் எண்ணத்தின் அடிப்படையிலேயே கூலி கிடைக்கும் என்பதை தெளிவாக சொல்லியுள்ளது.
பிறை காணாத நிலையில் மக்கா பிறையை எதிர் பார்த்து அதுவும் தாமதமாக கிடைத்தால் அடுத்த நாள் அவர்கள் நோன்பு நோற்கலாம்.
இவ்வாறு நபிகளார் வாழ்விலும் நடந்து அவர்கள் நோன்பை விடச்சொல்லி மறுநாள் பெருநாள் எடுத்தார்கள்.
இலங்கையிலும் இப்படி நிலை ஏற்படலாம். உதாரணமாக இங்கு உலமா சபையின் பிறைக்குழு நாட்டில் எங்கும் பிறை தென்படவில்லை என கூறி படுக்கைக்கு சென்று விட்டால் அதே நேரம் மக்காவில் பிறை கண்டதாக அறிவிக்கப்பட்டு அச்செய்தி ஊர்ஜிதமாக நமக்கு கிடைக்கும் பட்சத்தில் அதனை ஏற்க வேண்டும் என கூறுகிறோம்.
அதே போல் ஹஜ் கிரியைகள் மக்காவை வைத்தே இடம் பெறுவதால் அது விடயங்களில் 100 வீதம் மக்கா பிறை அறிவித்தலை ஏற்க வேண்டும் என்கிறோம். ஹஜ் என்பது நோன்பு போல் ஒரே நாளில் முடிவு செய்வதல்ல. எப்போது அரபா தினம், எப்போது ஹஜ் பெருநாள் என்பதை 9 நாட்களுக்கு முன்பே சவூதி அறிவித்து விடும் என்பதால் முழு உலகும் இதை இலகுவாக அமுல் படுத்த முடியும்.
இவை பற்றியெல்லாம் ஒரு நூல் அளவுக்கு நாம் எழுதி இணையத்தில் வெளியிட்டுள்ளோம். மீண்டும் மீண்டும் ஒரேவிதமான கேள்விகளே வருகின்றது.
- முபாறக் அப்துல் மஜீத் மதனி
17.4.2019

Comments
Post a comment