Posts

Showing posts from April, 2019

கிழ‌க்கு ஆளுன‌ர் அலுவ‌ல‌க‌த்தில் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌ துப்பாக்கி ர‌வைக‌ள் பொலிசாருக்குரிய‌வை என‌ தெரிவிப்பு.

Image

நாளை முதல் முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.

Image
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு – நாளை முதல் முகத்தை மூடும் வகையில் ,அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் எந்த ஒருவரும் அணிகலன்களை அணியக் கூடாதென அரசு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது .

ஷிப்லி பாரூக்கின் இல்லம் நேற்று பொலிஸாரினால் சோதனை

தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர்களில் ஒருவரென சொல்லப்படும் தவ்பீக் மௌலவி காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காத்தான்குடியில் நடந்த தேடுதல்களையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது . 2017 ஆம் ஆண்டு ஸஹ்ரான் தலைமறைவானதையடுத்து இவரே அமைப்பை பொறுப்பேற்று நடத்திவந்ததாக சொல்லப்படுகிறது. இதேவேளை முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஷிப்லி பாரூக்கின் இல்லம் நேற்று பொலிஸாரினால் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னைய காலங்களில் தவ்ஹீத் ஜமாத்துடன் எந்த தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லையென ஷிப்லி பாரூக் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக அறியமுடிந்தது.

பயங்கர வாத தாக்குதல் சம்பந்தமாக சர்வமதத் தலைவா்கள்

Image
சர்வமதத் தலைவா்கள் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடகவியலாளா் மாநாடு (அஸ்ரப் ஏ சமத்) கொழும்பு-7 பௌத்தலோக மாவத்தையில் உள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ்  அலுவலகத்தில் கடந்த ஞாயிறு நடைபெற்ற பயங்கர வாத தாக்குதல் சம்பந்தமாக சர்வமதத் தலைவா்கள் இணைந்து ஊடகவியலாளா் மாநாடொன்றை இன்று (28) பி.ப. 3.00 மணிக்கு நடாத்தினாா்கள். இவ் ஊடக மாநாட்டினை கலாநிதி ஒமல்பே சோபித்த தேரா் தலைமையில் நடைபெற்றது. இவ் ஊடக மாநாட்டில் சகல மதத் தலைவா்களும் மெழுகுவாத்தி ஏற்றி உயிா் நீத்தவா்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்கள். கலாநிதி இத்பான்கே தம்மலங்கார தேரா்  கிரிஸ்த்துவ மதத்தின் சாா்பில்  மல்கம் கார்டினா் ரன்ஜித் ஆண்டகை, இந்து மதத்தின் சாா்பில்  சிவசிறி கு.வை. க வைத்தீஸ்வர குருக்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவா் அஸ்சேக் றிஸ்வி முப்தி, அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவா் ஜகத் சுமதிபால ஆகியோறும்  கலந்து கொண்டு கருத்துக்களைத்  தெரிவித்தனா். இங்கு கருத்து தெரிவித்த  இதபான்கே தம்மலங்கார தேரா்,  இந்த நாட்டில்  கடந்த கால யுத்தில் இருந்து மீண்டுள்ள இலங்கை மீண்டும் ஒரு பாதாள உலகத்திற்கு க

மாவட்டத்தின் பாதுகாப்பினையும் மக்களின் இயல்வு வாழ்க்கையையும் உறுதிப்படுத்துமாறு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள்

Image
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்  மாவட்டத்தின் பாதுகாப்பினையும் மக்களின் இயல்வு வாழ்க்கையையும் உறுதிப்படுத்துமாறு  உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள். சாய்ந்தமருது, கல்முனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பாதுகாப்பினையும் மக்களின் இயல்வு வாழ்க்கையையும் உறுதிப்படுத்துமாறு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சாய்ந்தமருது வெலிவோரியன் வீட்டுத்திட்ட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களிடம் பொலிஸார் நேற்றைய சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பொதுமக்களிடம் நலன்களை விசாரித்து தனது ஆறுதலை தெரிவித்ததுடன்  அவர் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் ம‌த‌ஸ்த‌ல‌ங்க‌ளுக்கு ம‌ரியாதை செய்வ‌தில்லை

கோயில்க‌ளுக்குள்ளும் துப்பாக்கிக‌ள் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ யுத்த‌ கால‌த்தில். ம‌கேஸ்வ‌ர‌ன் எம் பி கோயிலுக்குள் வைத்து சுட‌ப்ப‌ட்டார். இத‌ற்கெல்லாம் கோயிலோ இந்துக்க‌ளோ கார‌ண‌ம‌ல்ல‌. ப‌ள்ளிக்குள் அதுவும் இமாமின் அறை க‌ட்டிலுக்க‌டியில் வாள் இருக்கிற‌தா இல்லையா என்ப‌தை ப‌ள்ளிக்கு தொழ‌ப்போப‌வ‌னால் க‌ண்டு பிடிக்க‌ முடியாது. யாழ்ப்பாண‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் வாள் குழு இப்போதும் உள்ள‌தை த‌மிழ் பொது ம‌க்க‌ளால் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடிந்த‌தா? சில‌ முட்டாள்க‌ளின் செய‌லுக்காக‌ பொதும‌க்க‌ளை குற்ற‌ம் சாட்டுவ‌து ம‌ஹா முட்டாள்த்த‌ன‌ம். யுத்த‌ கால‌த்தில் புலிக‌ளின் ப‌ல‌ ஆயுத‌ங்க‌ள் கோயில்க‌ளில் பிடிப‌ட்ட‌தாக‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌டித்துள்ளேன். மகேஸ்வ‌ர‌ன் சுட‌ப்ப‌ட்ட‌து கொச்சிக‌டை கோயிலில். ஜோச‌ப் எம் பி சுட‌ப்ப‌ட்ட‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு ச‌ர்ச்சில். கோயிலுக்குள்ளும் ச‌ர்ச்சிக்குள்ளும் நின்ற‌ ம‌க்க‌ள் ஆயுத‌தாரிக‌ளை பிடித்துக்கொடுக்க‌வில்லை. ஏன்? அவ‌ர்க‌ளும் இத‌ற்கு உட‌ந்தையா? ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் ம‌த‌ஸ்த‌ல‌ங்க‌ளுக்கு ம‌ரியாதை செய்வ‌தில்லை. புலி ப‌ன்ச‌லைக்கு குண்டு வைத்தார்க‌ள். ஆம‌துருக்க‌ளை க

இருவர் புத்தம் புதிய வேனுக்குள் இருந்து தாக்குதல் நடத்தியவாறே தற்கொலை செய்து கொண்டனர்.

Image
சந்தேகத்திற்கிடமான வீடு,வாகனம் மற்றும் ஆள் நடமாட்டம் தொடர்பில் பொதுமக்கள் சிலர் விசாரிக்க முற்பட்டவேளை அங்கிருந்த IS தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது! உடனடியாக விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கினர் பொதுமக்கள்! விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது தீவிரவாதிகளில் இருவர் புத்தம் புதிய வேனுக்குள் இருந்து தாக்குதல் நடத்தியவாறே தற்கொலை செய்து கொண்டனர். இரண்டு தீவிரவாதியின் சடலமும் ஆயுதமும் அந்த வேனின் உள்ளே இருந்து மீட்கப்பட்டது! இரு அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டன. பதிவு செய்யப்படாத புத்தம் புதிய வேன் கடந்த 19 ஆம் திகதி அக்கரைப்பற்றில் பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது! NTJ தலைவன் ஸஹ்ரானின் சகோதரன் நியாஸ் என்பவனே குறித்த வேனை கொள்வனவு செய்திருந்தான். அக்கம்,பக்கமுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தீவிரவாதிகள் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட முடியவில்லை. தற்கொலைதாரிகள் மேலும் உள்ளே இருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தீவிரவாதிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையின்போது பொதுமகன் ஒருவரும் பலிய

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Image
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களான சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளான தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் ‘டெய்லி மெயில்’ பத்திரிகை இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. இன்ஷாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் ஆகியோரின் படங்களே வெளியிடப்பட்டுள்ளன. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகர் இப்ராஹிம் தெமட்டகொடவில் வைத்துப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சர்வதேச அமைப்பொன்று இலங்கையில் நடாத்திய தாக்குதல்-

இது சர்வதேச அமைப்பொன்று இலங்கையில் நடாத்திய தாக்குதல்- தயாசிறி ஜயசேகர! நாட்டில் இடம்பெற்றுள்ள தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பையும் அதற்கு அனுசரணை வழங்கியுள்ள அனைத்து சக்திகளையும் அவசரகால சட்டத்தின்கீழ் பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த அமைப்பை தடைசெய்யும்போது அவர்களுடைய ஆயுத பாவனை, உரைகள், ஆட்சேர்ப்பு, வகுப்பு எடுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் கவனத்திற் கொள்ள வேண்டும். இதற்கு கால அவகாசம் தேவைப்படாலும் இந்த செயற்பாடுகள் யாவும் மிகவும் ஆழமான முறையில் கையாளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். சர்வதேச அமைப்பொன்று இலங்கையர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. நாம் ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டுவதை

Sri Lanka Vocational Training closed immediately

On the orders of Rishad Bathiudeen, the Minister in charge, all the institutions coming under the Ministry of Vocational Training and Skills Development and SLITA  are shut down with immediate effect. Accordingly, all training courses conducted by the National Institute of Technical Education, Ocean University of Sri Lanka (National Institute of Fisheries and Nautical  Engineering), Ceylon German Technical Training Institute, National Apprentice and Industrial Training Authority, National Institute of Business Management, Skills Development Fund Ltd,  Sri Lanka Institute of Printing, Vocational Training Authority of Sri Lanka, Department of Technical Education  and Training, Sri Lanka Institute of Textile and Apparel (Ratmalana), NSBM, and University of Vocational Technology are closed with immediate effect. All the branches of these institutions across the island too shall remain closed. These institutions and their branches shall stay closed till Sunday 28 April 2019.

சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார்.

யாழ்.ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். தேடுதலின் தொடர்ச்சியாக அங்கு பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டும் வீதி தடை போடப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார். தான் முட்டை பல்ப் (மின்குமிழ்) முகவர் எனவும் அதனை யாழ்ப்பாணத்தில் விநியோகிப்பதற்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். எனினும் வாடகைக்கு குடியமர்ந்து சில மாதங்கள் ஆகிய போதும் அவர் மின்குமிழ் வியாபாரத்தில் ஈடுபடவில்லை என வீட்டு உரிமையாளரால் சந்தேகிக்கப்பட்டது. அத்துடன், அவரிடம் பல கார்களிலும் வாகனங்களிலும் புதுப் புது நபர்கள் வந்து செல்வதையும் வீட்டு உரிமையாளரும் அயலவர்களும் கண்டு சந்தேகம் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடாத்தப்பட்டதை அடுத்து குறித்த இளைஞரின் நடாமாட்டம் தொடர்பில் அச்சம்

குண்டுத் தாக்குலுடன் தொடர்புடைய இருவம் ஸ்ரீலங்கா பிரஜைகளா அல்லது வெளிநாட்டவர்களா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த முடியாதுள்ள நிலை

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்கான சீனாவிற்கு சொந்தமான சங்கிரிலா நட்சத்திர விடுதி தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது. பொலிசாரும், முப்படையினரும் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கிரிலா ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருக்கின்றது. கொழும்பு காலிமுகத்திடலுக்கு எதிரில் அமைந்துள்ள சீனாவிற்கு சொந்தமான சங்கரிலா ஹோட்டலில் நேற்றைய தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் இலங்கையர்கள் உட்பட அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 25 வெளிநாட்டவர்கள் பலியாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மேலதிகமான குறித்த ஹோட்டலில் கடமையாற்றிய ஐந்து பணியாளர்களும் கொல்லப்படடதாக சங்கிரிலா ஹோட்டல் அறிவித்துள்ளது. இதேவேளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள், பணியாளர்கள் என பலரும் காயமடைந்தும் உள்ளனர். இந்த நிலையில் சங்கிரிலா நட்சத்திர ஹோட்டலின் அறையொன்றில் தங்கியிருந்த இருவரே அங்கு தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசேட அதிரடிப்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தங்களது உடலில் பொறுத

All Ceylon Makkal Congress (ACMC) called Sri Lankans to move for collective actions together

Image
In the wake of the deadly Easter Sunday bomb attacks that claimed 290 lives across the country,    All Ceylon Makkal Congress (ACMC) called Sri Lankans to move for collective actions together and not to fall into a new conflict at a time when the tenth anniversary of the end of previous conflict is just around the corner. “ Sunday 21 April 2019 will go down in Sri Lanka's history as one of the worst days that we woke up to. It was a very sad day for all citizens of Sri Lanka and our reconciliation process that we are striving to accomplish despite many obstacles” said the Leader of ACMC and Minister of Industry, Commerce, Resettlement of Protracted Displaced Persons, Cooperative Development, Skills Development and Vocational Training Rishad Bathiudeen on 22 April and added: “A well-coordinated attack on faithful Sri Lankan Christian worshipers and foreign tourists resulted in more than 200 deaths and many other wounded casualties, though these victims had no role in creat

தேசிய, சர்வதேச உதவிகளைப் பெற்று குறித்த தீவிரவாத செயற்பாட்டை முறியடிக்க வலுவாக உறுதிப்பூணுவோம்

தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்திருந்தாலும், எனக்கு அறிவிக்கவில்லை இந்த நிமிடம் நாட்டுக்குள் எவ்வித தீவிரவாத நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, நாட்டை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சிப்பார்களாயின், தேசிய, சர்வதேச உதவிகளைப் பெற்று குறித்த தீவிரவாத செயற்பாட்டை முறியடிக்க வலுவாக உறுதிப்பூணுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாகவே புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்திருந்தாலும், அது தொடர்பில் தனக்கும் அமைச்சர்களுக்கும் அறிவிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம்  தொடர்பில் போதிய அவதானம் செலுத்தப்படாமைக் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தான் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இது குறித்து அறிவிக்காமை அதில் உள்ளடங்கும் என்றார்.

இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

Image
-ஊடகப்பிரிவு- நாட்டின் அமைதி.இன ஐக்கியத்தை பதற்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில்  நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன் ,  அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். இன்று  ( 21)  கொழும்பில் நடாத்தப்பட்ட சம காலத்தாக்குதல்கள் மற்றும் மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது ,  முப்பது வருட யுத்தம் மிகப்பெறுமதியான விலைகொடுத்து முடித்து வைக்கப்பட்டது.இதற்குப் பின்னரான ஒரு தசாப்த கால நிசப்தத்தை தகர்க்கும் வகையில் இத்தாக்குதல்கள் உள்ளன. மத உணர்வுகளையும். சிவிலியன்களின் சாதாரண வாழ்க்கையையும் இத்திட்டமிட்ட தாக்குதல்கள்  அச்சுறுத்தியுள்ளன. குறிப்பாக  கிறிஸ்தவ சகோதரர்கள் புனித ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகையில் தேவாலயங்கள் வன்முறைக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.மதச் சுதந்திரங்களைப் பறித்து , மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ள இந்தக் கயவர்களை எவ்விதக் கருணைகாட்டாது தண்டிக்க வேண்டும்.எந்த நோக்கங்களையும் அடைந்து கொள்

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு*

Image
*#தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு* # --------------------------------------- கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் நேற்று (16.04.2019) கமு/அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் தனது அங்கத்தவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இறைவனின் உதவியால் சிறந்தமுறையில் நடைபெற்று முடிவடைந்தது  அல்ஹம்துலில்லாஹ். இந் நிகழ்விற்கு, *ALM.Haleem* (சிரேஷ்ட விரிவுரையாளர்- SEUSL) *HM.Nijam* ( சிரேஷ்ட விரிவுரையாளர்- SEUSL) *Mufizal Aboobackar* (சிரேஷ்ட விரிவுரையாளர்- UOP) ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

ம‌க்கா பிறை அறிவித்த‌ல் வ‌ர‌ தாம‌த‌மான‌ நிலையில் அவுஸ்திரேலியா போன்ற‌ நாடுக‌ளில் பிறை தென்ப‌ட்டால்

ம‌க்கா பிறை அறிவித்த‌லை ஏற்க‌ வேண்டும் என‌ நாம் சொல்வ‌து பிர‌ச்சினைக்கான‌ தீர்வாக‌வே என்ப‌தை புரிந்து கொள்ள‌ வேண்டும். ம‌க்கா பிறை அறிவித்த‌ல் வ‌ர‌ தாம‌த‌மான‌ நிலையில் அவுஸ்திரேலியா போன்ற‌ நாடுக‌ளில் பிறை தென்ப‌ட்டால் தாராள‌மாக‌ அம்ம‌க்க‌ள் அத‌னை ஏற்க‌லாம். நாம் சொல்வ‌து அந்நாடுக‌ளில் பிறை காண‌ப்ப‌டாத‌ நிலையில் ம‌க்கா பிறை அறிவிக்க‌ப்ப‌ட்டால் அத‌னை ஏற்க‌ வேண்டும் என்கிறோம். ம‌க்காவின் அறிவித்த‌ல் வ‌ரும் போது அந்நாடுக‌ளில் விடிந்து விடுமே என‌ சொல்வ‌து இஸ்லாமிய‌ அடிப்ப‌டைக‌ளை புரியாமையாகும். இஸ்லாம் எண்ண‌த்தின் அடிப்ப‌டையிலேயே கூலி கிடைக்கும் என்ப‌தை தெளிவாக‌ சொல்லியுள்ள‌து.  பிறை காணாத‌ நிலையில் ம‌க்கா பிறையை எதிர் பார்த்து அதுவும் தாம‌த‌மாக‌ கிடைத்தால் அடுத்த‌ நாள் அவ‌ர்க‌ள் நோன்பு நோற்க‌லாம். இவ்வாறு ந‌பிக‌ளார் வாழ்விலும் ந‌ட‌ந்து அவ‌ர்க‌ள் நோன்பை விட‌ச்சொல்லி ம‌றுநாள் பெருநாள் எடுத்தார்க‌ள். இல‌ங்கையிலும் இப்ப‌டி நிலை ஏற்ப‌ட‌லாம். உதார‌ண‌மாக‌ இங்கு உல‌மா ச‌பையின் பிறைக்குழு நாட்டில் எங்கும் பிறை தென்ப‌ட‌வில்லை என‌ கூறி ப‌டுக்கைக்கு சென்று விட்டால் அதே நேர‌ம் ம‌க்காவில் பிறை

இன்று “ கல்முனையை” கேட்கின்றான்!

ஏன்? ஏன்? ஏன்? ============= வை எல் எஸ் ஹமீட் கல்முனை ( தமிழ்) பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம், ஊள்ளூராட்சிசபை நன்காகப் பிரிப்பு, மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட பிரச்சினைகளை இப்பொழுதாவது முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையாக முன்வைத்து காலக்கெடு விதித்து சாதிக்கவேண்டும்; அல்லது அரசைவிட்டு வெளியேற வேண்டும்; என்கின்ற கோசத்தை ஏன் முஸ்லிம்களால் முன்வைக்க முடியாமல் இருக்கிறது. முஸ்லிம் கட்சிகளால் முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லையென்றால் எதற்காக அவர்கள் இன்னும் அரசுடன் இருக்கிறார்கள்? இதை ஏன் முஸ்லிம்கள் கேட்காமல் இருக்கிறார்கள்? உலமாக்கள் ஏன் உசும்பாமல் இருக்கிறார்கள்? பள்ளி நிர்வாகங்கள் ஏன் அசமந்தமாக இருக்கிறார்கள்? புத்திஜீவிகள் ஏன் புதினமாக மௌனம் சாதிக்கிறார்கள்? சிவில் அமைப்புகள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்? இளைஞர்கள் ஏன் தூங்குகிறார்கள்? மொத்த சமூகமும் ஏன் பிரமை பிடித்துப்போய் இருக்கிறது. இவர்களால் எதுவும் செய்யமுடியாவிட்டால் எதற்காக இவர்கள்? இவர்களின் சில .........இவர்களை அடிக்கடி முகநூல்களில் பாராட்டுகிறார்களே! எதைச் சாதித்

சிங்களத் தீர்வு என்பது தீர்த்துக்கட்டுதலன்றி வேறில்லை

*********************************** கல்முனை தமிழ்பேசும் நிர்வாகங்களுக்டைகியில் இருந்து வந்த பிரச்சினை சிங்களத் தீர்வை நோக்கி நகர்கிறது. கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வரை  தனிக்கணக்காளர் ஒருவரை உப செயலகத்துக்கு நியமிக்க வேண்டும் என்று தமிழர் பிரதிதிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மொழியப்பட்ட மாற்று நடவடிக்கை யோசனையை இரண்டு தரப்பு அரசியல் பிரதிநிதிகளும் ஏற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.அதாவது செயலகத்தை தரமுயர்த்துவது பற்றிய இறுதி முடிவை எடுக்கும் வரை கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் ஆகியவற்றின் நிதி விவகாரங்களை கணக்காளர் இனி அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து கையாள்வார் என்பதே அந்த மாற்று நடவடிக்கையாகும். கல்முனை முஸ்லிம்களுக்கும்,கல்முனைத் தமிழர்களுக்கும் கல்முனையை விடவும் அம்பாறை நகரம் அண்மையில் அமைந்திருக்கிறதா? ஒரே மொழி பேசுகிற, நூற்றாண்டுகளாக ஒரு விதப் புரிதலோடு பரஸ்பரம் கலாச்சாரப் பரிமாற்றம் செய்து வந்த தமிழர்களும் முஸ்லிம்களும் தமக்கிடையிலான பிரச

போர்க்களங்களை திரும்பிப் பார்க்கும் இக்பால் அத்தாஸின் பதில்கள்; பலவந்த வெளியேற்றம் பழிவாங்கலா? பாதுகாப்பா?

சுஐப் எம் காசிம் அரசியல்வாதிகள்,படைத்தளபதிகள் தளபதிகள் போராட்ட இயக்கங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடகவியலாளர்கள் வைத்துக் கொள்ளும் உறவுகள்,தொடர்புகள் எழுத்துத்துறைக்கு எவ்வாறு பங்களிக்கும்,செய்தித் தேடலுக்கு எப்படி உதவும் என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்ததா? முஸ்லிம் மீடியா போரம் கொழும்பில் ஏற்பாடு செய்த புலனாய்வுத்துறை முன்னோடி எழுத்தாளரும், உளவுத்துறை இரகசியங்களை எதிர்வு கூறுபவருமான இக்பால் அத்தாஸுடனான சந்திப்பில் கலந்து கொண்ட நான், இச்சந்தேகங்களால் புலிகளின் போராட்டக் களங்களை பின்னோக்கிப் பார்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டேன் . எங்கள் பலவந்த வௌியேற்றத்தின் காரணங்கள் தெரியும் வரை மூன்றாம் இனமாவதற்கான தேவை எங்களுக்கு இருந்ததில்லை.இதைத் தெரிந்து கொள்ளும் வரை வாழ்நாளின் அந்திமகால எமது மூச்சுக்களும் மூன்றாம் தேசத்துக்காகவே உயிர்வாழும். வடபுலத்து முஸ்லிம்களின் பலவந்த வௌியேற்றம் எந்தப் பின்னணியில் நடந்ததென புலனாய்வுத்துறை எழுத்தாளர் இக்பால் அத்தாஸிடம் கேட்டேன். உளவுத்துறை இரகசியங்களைத் தேடித்துருவுவதில் இக்பால் அத்தாஸுக்கு சிறந்த தேர்ச்சியுள்ளது. இவரது தேடல்கள்,எதிர்

கொழும்பு உம்மு ஸவாயா அரபுக்கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழா

( மினுவாங்கொடை நிருபர் )    கொழும்பு -  12, உம்மு ஸவாயாவில் இயங்கிவரும்  அஜ்வாத் அல் -  பாஸி அரபுக் கல்லூரியின் ஏழாவது வருட பட்டமளிப்பு விழா   உம்மு ஸவாயா மண்டபத்தில், "கலீபதுல் குலபா" மெளலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில், (31) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இச்சிறப்பு நிகழ்வில், உம்மு ஸவாயாவின் தலைவர் மக்கி ஹாஷிம், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட  தொழிலதிபர் இல்யாஸ் அப்துல் கரீமுக்கு நினைவுச்  சின்னம் வழங்கிக் கெளரவித்தார்.  அஷ்ஷெய்க்  அஸ்ஸெய்யித்  பஷீர் தங்கள்,  அஸ்ஸெய்யித் சுலைமான்  முர்ஷிட் முஹியத்தீன் மற்றும் கலீபதுஷ்ஷாதுலியாக்கள், முகத்தமீன்கள்,  முஹிப்பீன்கள், இஹ்வான்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். ( மினுவாங்கொடை நிருபர் )

டீசல் கட்டணம் அதிகரித்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு

  ( ஐ. ஏ. காதிர் கான் )    எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய,  எதிர்வரும் 10 ஆம் திகதி டீசலின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணங்களும்  அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.    எனினும், தற்போதுள்ள குறைந்தபட்சக்  கட்டணமான 12 ரூபாவில் எவ்வித மாற்றமும்  மேற்கொள்ளப்பட மாட்டாது என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.    புதன்கிழமை  (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.