Skip to main content

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

இலங்கையில் நடப்பது இனப்பிரச்சனை அல்ல,

Thiru Thirukkumaran பதிவு

இலங்கையில் நடப்பது இனப்பிரச்சனை அல்ல,
“COMMUNAL VIOLENCE AND RELIGIOUS UNREST” என ஐக்கிய நாடுகள் சபையின் கடைசி அறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டு விட்டார்கள். அதனால் ஒவ்வொருமுறை ஐக்கியநாடுகள் சபைக்கூட்டம் வரும் போதும் எப்படியோ மதச் சண்டைகள் உருவாகி விடுகின்றன, கடந்த ஆண்டுகளில் ஐக்கியநாடுகள் சபை கூடும் நேரத்தில் பெளத்த, இஸ்லாம் சண்டை இடம்பெற்றது இம்முறை பெளத்தம் சார்பில் முன்னின்று சண்டையிட்ட சண்டியன் சில காரணங்களால் இன்னும் சிறையில் இருப்பதால் அந்தப் பொறுப்பை வங்காலைக்கு நகர்த்த வேண்டியதாயிற்று

நீங்கள் தமிழின அழிப்பு என்ற போது புத்திசாலிகளான உங்களிடம்  ஐ.நா சொன்னது இன அழிப்பென்றால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அதனால் போர்க்குற்றம் என்று சொல்லுங்கள், சரி போர்க்குற்றம் என்று சொன்னீர்கள், பின்னர் ஐ.நா சொன்னது போர்க்குற்றம் என்ற சொல் சிங்கள மக்களிடையே கோபத்தைத் தூண்டும் நல்லிணக்கத்தை பாதிக்கும் அதனால் மனித உரிமை மீறலென்று இப்போதைக்கு சொல்வோம் என்றான், நீங்களும் கிளிப்பிள்ளையாய் சரி மனித உரிமை மீறல் என்றீர்கள், அவனோ இன்னும் இறங்கி மனித உரிமை மீறலும் அல்ல மோட்டுத் தமிழ் மக்களே அது
“COMMUNAL VIOLENCE AND RELIGIOUS UNREST”
அதாவது இலங்கையில் உள்ள பிரச்சனை சமூகங்களுக்கிடையேயான வன்முறைகளும், மதங்களுக்கிடையேயான அமைதியின்மையும் தானே தவிர நீங்கள் சொல்வதைப்போல் இனப்பிரச்சனை அல்ல என தெளிவாக இறுதி அறிக்கையில் சொல்லி விட்டான்.
ஆதலால் ஐ.நா சபை கூடும் நேரங்களில் இப்படியான மதச் சண்டைகள் தோற்றுவிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்பதை அப்பாவித் தமிழ் மக்கள் உணர வேண்டும்.

தவிரவும் இதற்கு இன்னுமொரு சமூகவியற் பக்கமும் உண்டு

தமிழ் சிங்கள இன முரண்பாடு உச்சமடைந்த காலத்தில் பிரச்சனைகளையும் வறுமையையும் எதிர் நோக்கிய எல்லைப் பிரதேசங்களில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்களுக்கு உதவச் சென்ற கிருஸ்த தேவாலயங்கள் எம்மிடம் வாருங்கள் நாங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறோம் என்றார்கள்.

இளைப்பாறுதல் தொடர வேண்டுமாயின் அவர்கள் இறைகுமாரன் யேசுவை நம்ப வேண்டும், அதாவது மதம் மாறினார்கள்.

பெரும்பாலும் சைவத் தமிழ்ப்பெயர்களாக இருந்த மக்களின் பெயர்கள் பின்னர் இனத்தை அடையாளம் காண முடியாத பொதுவான கிருஸ்தவ பெயராக மாற்றம் பெற்றது.

எல்லைக் கிராமங்களில் இருந்த தமிழ்ப்பாடசாலைகள் சிங்கள நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மூடப்பட அங்குள்ள மக்கள் சிங்கள மொழியில் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள், இது அவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருந்தது.

இதன் தொடர்ச்சியாக பெயரை வைத்தும் அடையாளம் காண முடியாதபடி அடுத்த சந்ததி தம்மை சிங்கள கிருஸ்தவர்களாக எண்ணிக் கொண்டார்கள்.
இப்படியாகவும் தமிழர்களின் இன விகிதாசாரப் பரம்பல் மறைக்கப்பட்டது என்கின்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அத்துடன் அன்றில் இருந்து இன்றுவரை தமிழின விடுதலைப் போராட்டத்தில் கிருஸ்தவ மக்களினதும் தேவாலயங்களினதும் பங்களிப்பென்பது மிக முக்கியமானது, மாதோட்டத்தில் துரதிஸ்டவசமாக நடைபெற்ற இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி இந்திய மேலாதிக்கத்தை எம் மண்ணில் நிறுவ நினைக்கும் சிவசேனா போன்ற மதவாத சக்திகளின் எண்ணங்களை நிறைவேற்ற நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.

-திரு

Comments

Popular posts from this blog