ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
( மினுவாங்கொடை நிருபர் )
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையடுத்து, புதிய அமைச்சுக்களுக்கான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இம் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், மேற்படி இவ்விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிணங்க, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்த ஊடகத்துறையோடு இணைந்த விடயங்கள் மற்றும் திணைக்களங்கள், நிறுவனங்கள் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சரவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
தகவல் திணைக்களம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் (லேக்ஹவுஸ்) ஆகியன அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சின் கீழ், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சராக, அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவன் விஜேவர்தன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமைச்சரவை அந்தஸ்தற்ற விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் கிராமிய புத்தெழுச்சி நிதியம், மக்கள் ஊக்குவிப்பு நிதியம் ஆகிய நிறுவனங்கள், விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment