கொழும்பு அல் - ஹிதாயாவில் "மீண்டும் கல்லூரிக்கு" நிகழ்ச்சி


கொழும்பு அல் - ஹிதாயாவில் "மீண்டும் கல்லூரிக்கு" நிகழ்ச்சி 

( மினுவாங்கொடை நிருபர் )

   கொழும்பு - 10, அல் - ஹிதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், "மீண்டும் கல்லூரிக்கு" சிறப்பு நிகழ்ச்சி,  அல் - ஹிதாயா பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எம்.சீ. பஹார்தீன் தலைமையில்,  (20) புதன்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. 
   இம்மாபெரும் சிறப்பு நிகழ்வில், இதுவரை காலமும் அல் - ஹிதாயா கல்லூரியில் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் பணி புரிந்துவிட்டு இடம்மாற்றம் பெற்றுச் சென்றவர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் இக்கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
   அத்துடன், அல் - ஹிதாயா கல்லூரியுடன் இதுவரை காலமும் தொடர்புபட்டவர்களுடன், இக்கல்லூரியின்  பழைய மாணவர் சங்கத் தலைவர் எம்.சீ. பஹார்தீன், சங்கப் பொதுச் செயலாளர் அஸாத் காதர்,  நிகழ்வின் திட்டக் குழுத் தலைவர் எம்.சீ. இல்ஹாம் ஹனீப் உள்ளிட்ட பலரும் இச்சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமையும்,  இக்கல்லூரி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கியது.

Comments

popular posts

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்