ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
காணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் சேவை
- ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் வஜிர அபேவர்தன
( மினுவாங்கொடை நிருபர் )
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சேவைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, இங்கு இடம்பெறும் சேவைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் துரித சேவைகளும், பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, காணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்டத்தை, காலியில் சம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இங்கு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும்போது, எமது அரசாங்கம் மக்களுக்குப் பயன் அளிக்கும் விதத்திலான பல முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டங்களில் ஒன்றே, காணிகளை ஒரே நாளில் பதிவு செய்யும் இத்திட்டமுமாகும். இது போன்ற மக்களுக்குப் பிரயோசனம் அளிக்கும் மேலும் பல திட்டங்களையும் விரைவில் ஆரம்பிப்போம் என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment