ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
முசலிப் பிரதேசத்திலுள்ள காணிகள் தொடர்பான விவகாரத்தால் முசலி பிரதேச செயலாளருக்கு இன்றைய முசலிப் பிரதேச சபையின் 13 ஆவது அமர்வில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாவத்துறை நகர் மத்தியில் மக்களுக்கான சந்தைத் தொகுதி, பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மலசல கூடம் அமைக்கக்கூட காணி இல்லாத அளவுக்கு காணி விடயத்தில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதேச செயலாளரின் செயல் கண்டிக்கப்பட்டுள்ளது.
முசலிப் பிரதேசத்தில் அரச காணிகள் விற்பனை செய்யப்படுவது குறித்து முசலி மக்கள் மத்தியில் அமைதியின்மை தோன்றியுள்ள நிலையிலேயே இந்த விவகாரம் முசலி பிரதேச சபையில் இன்று எதிரொலித்தது.
அண்மையில் காணி விடயமொன்று தொடர்பாக முசலி பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக முசலி பிரதேச செயலாளர் பொலீசாரை பிழையாக வழிநடத்தி நீதிமன்றத்தில் கிறிமினல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டத்துக்குப் புறப்பானதாகும்.
1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 20, 101, 128, 215 பிரிவுகளின் கீழ் அரச அல்லது தனியார் காணி தொடர்பாக தவிசாளருக்கு சட்ட ரீதியான அதிகாரங்கள் பல உள்ளன.
குறித்த சட்டத்தின் 217 பிரிவின்படி பிரதேச சபையின் கடமையைப் புரிய இடையூறு செய்யும் எவரும் குற்றவாளியாவார்.
இவ்விடயம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
எ.எம்.றிசாத்
Comments
Post a comment