Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்..!


எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்..!

-அமைச்சர் ரவூப் ஹக்கீம்-

கல்முனை உப பிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல், இரு சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தரமுயர்த்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியின் 9ஆவது பட்டமளிப்பு விழா இன்று (09) அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

செய்தியாளர்கள் மத்தியில் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

நீண்டகாலமாக சர்சைக்குரிய விடயமாக இருந்துவரும் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசியிருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகண்ட பின்னரே இது சாத்தியமாகும்.

இரு பிரதேச செயலக பிரிவுக்குள் இருக்கின்ற சமூகத்தினர் இரு வேறாக தனித்தனியே பிரிந்துசெல்வது திருப்திகரமான விடயமாகத் தெரியவில்லை. தனியே ஒரு சமூகம் மாத்திரம் பிரதேச செயலகம் ஒன்றுக்குள் இன ரீதியாக உள்வாங்கப்பட வேண்டும் என்பது சாத்தியமான விடயமல்ல.

அதேபோன்று பிரதேச செயலக எல்லைகள் ஒரு சமூகத்துக்கு மாத்திரம் சார்பாக பிரித்துக் கொடுக்கப்பட முடியாது. அப்படியதொரு சட்டம் சம்பந்தப்பட்ட அமைச்சிலும் இல்லை. கிராம சேவகர் பிரிவுகளின் எல்லை நிர்ணயத்தில் இருக்கின்ற சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது பிரதேசம் சார்ந்த விவகாரங்களில் கரிசணை காட்டவேண்டியது அவரது தார்மீகப் பொறுப்பு. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சின் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு அவர், கட்சித் தலைமையுடன் இணைந்து இந்த விடயத்தை கையாண்டு வருகிறார்.

அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் கோடீஸ்வரன் தனது மாற்றுக் கருத்துகளை பேசிவருகின்றார். தான்சார்ந்த சமூகத்தின் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கின்ற அதேவேளை, இந்த விடயத்தில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதாக இருந்தால் இரு சமூகத்தையும் திருப்திப்படுத்தும் வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் பேசுவதுடன், இரு கட்சிகள் மத்தியிலும் கலந்துரையாடப்பட வேண்டும். இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டால்தான் மாத்திரம்தான் இந்த விடயம் சாத்தியமாகும் என்றார்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச