ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
( மினுவாங்கொடை நிருபர் )
நாட்டில் தற்போது பாவனையில் உள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw Machines) பதிவு செய்வதற்கான கால எல்லை, இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,
மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக அனைத்து அரசாங்க சார்பற்ற தனியார் துறை நிறுவனங்களும் அவற்றை வைத்திடும் போது, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து, அதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
எந்தக் காரணத்துக்காகவும் இயந்திர வாள் பாவனையின் கால எல்லை மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும், பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உத்தரவிற்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
( ஐ. ஏ. காதிர் கான்)
Comments
Post a comment