மதுஷ் கோஷ்டி கைது - மேலதிக விபரங்கள்...!டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை இலங்கைக்கு நாடுகடத்த அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கைது செய்யப்பட்டவர்களில் அஹூன்கல்ல புத்தி, அமில ஆகியோர் மிக முக்கிய புள்ளிகளென சொல்லப்படுகிறது.

இன்னுமொரு முக்கிய புள்ளியான மாளிகாவத்தையின் கஞ்சிப்பான இம்ரான் மற்றும் அவரது சகாக்கள் பாஸ்,பைசர்,ஷியாம் , அஜ்மி ஆகியோரும் சிக்கியவர்களில் அடக்கம். மாளிகாவத்தை பகுதி பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரும் இதில் அடங்குவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் சொல்கின்றன.

டுபாய் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிகரெட் பிடிப்பதற்காக ஹோட்டலை  விட்டு வெளியே வந்து மீண்டும் ஹோட்டலுக்குள் செல்ல முயன்றபோது பொலிஸாரை கண்டு தப்பியோடிய அங்கொட லொக்கா மற்றும் அவரது இரு கூட்டாளிகளை சி சி ரீ வி உதவியுடன் கைது செய்ய டுபாய் பொலிஸார் நடவடிக்கை  எடுத்துள்ளனர்.

அங்கொட லொக்காவின் முக்கிய சகாக்கள் இருவர் பொலிஸாரிடம் சிக்கியிருப்பதால் அவர் தங்கியிருக்கும் பகுதி மற்றும் அவரது நட்பு வட்டாரங்கள் குறித்து தேட ஆரம்பித்துள்ள துபாய் பொலிஸ், பெரும்பாலும் அவர் கைதுசெய்யப்படுவார் என்றே நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் மதுஸுடன் தொடர்பில் இருந்த இலங்கை அரசியல்வாதிகள் சிலர் அவரை இங்கு கொண்டுவரக்கூடாதென அரசுக்கு மறைமுக அழுத்தங்களை வழங்க ஆரம்பித்துள்ளனரென சொல்லப்படுகிறது.

டுபாயில் மதுஸுக்கு சொந்தமான சொத்துக்களை தேட ஆரம்பித்துள்ள பொலிஸ் அவற்றுக்குரிய ஆவணங்களை மீட்டுள்ளது. இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக ஆட்களை தருவிக்கும் மேன்பவர் நிறுவனம் ஒன்றை அவர் நடத்திவந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மட்டக்களப்பில் இருந்து 80 ரி 56 ரக துப்பாக்கிகளை மதுஷ் அணிக்கு வழங்கிய புள்ளி ஒருவரும் இதில் சிக்கியுள்ளதாக தகவல்.

ரனாலே சூட்டா ,அங்கொட சுத்தா ,கெஸெல்வத்த டினுக்க ஆகியோரும் கைதானோரில் அடங்குவர்.

இதேவேளை இந்த அணியில் இராஜதந்திர கடவுசீட்டை வைத்திருந்த நபர் குறித்த தகவலை சில பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளியிடாதிருக்கும் இலங்கை பொலிஸார் விரைவில் அதனை அறிவிப்பார்களென சொல்லப்படுகிறது.
Siva 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்