ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
கல்லொழுவை பிரதேச சுற்றுச்சூழலைத் துப்புறவு செய்யும் நோக்கில், குப்பைகளற்ற சிறந்த கிராமமாக உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைவான மா பெரும் சிரமதானப் பணியொன்று, மினுவாங்கொடை - கல்லொழுவை, தக்கியா வீதியில், கடந்த (24) ஞாயிற்றுக்கிழமையன்று முன்னெடுக்கப்பட்டது.
தக்கியா வீதியின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான பாதையைத் துப்பறவு செய்யும் இச்சிரமதானப் பணியில்,
தக்கியா வீதியின் இரு மருங்கிலுமுள்ள கால்வாய்கள், புற்பூண்டுகள் மற்றும் குப்பைக்கூளங்கள் என்பன காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையிலான இரண்டு மணி நேரத்திற்குள் முற்று முழுதாகத் துப்புறவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மினுவாங்கொடை பொது சுகாதாரப்பரிசோதகர்களான எஸ்.ஏ. அஜித் புஷ்பகுமார (பத்தண்டுவன பிரிவு), கே.பீ.எம்.பீ. வீரசேன (நெதகமுவ பிரிவு) ஆகியோரது மேற்பார்வையின் கீழ் இடம்பெற்ற இச்சிரமதானப் பணிகளில், கல்லொழுவை பிரதேச வாழ் பெரும்பாலான நலன்விரும்பிகள், சிறார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a comment