க‌ல்முனை ம‌க்க‌ளின் காணிக‌ளுக்கான‌ நிர‌ந்த‌ர‌ காணி உறுதி


க‌ல்முனையில் ஏ ஆர் எம் ம‌ன்சூர் கால‌த்தில் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ க‌டை காணிக‌ளுக்கான‌ சொந்த‌ உறுதி ப‌த்திர‌ங்க‌ளை வ‌ழ‌ங்க‌ கிழ‌க்கு மாகாண‌ ஆளுண‌ர் கௌர‌வ‌ ஹிஸ்புள்ளா அவ‌ர்க‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி அவ‌ரிட‌ம் நேர‌டியாக‌ கோரிக்கை விடுத்துள்ள‌தாக‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்
முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.
இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து,

க‌ல்முனை ம‌க்க‌ள் நீண்ட‌ கால‌மாக‌ அர‌சிய‌லில் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டும் ஏமாற்ற‌ங்க‌ளுக்கு முக‌ம் கொடுத்தும் வ‌ருகின்ற‌ன‌ர்.

க‌ல்முனையில் பாரிய‌ இட‌நெருக்க‌டி இருப்ப‌தன் கார‌ண‌மாக‌ 1970 க‌ளின் இறுதியில் அன்றைய‌ அமைச்ச‌ர் ஏ ஆர் எம் ம‌ன்சூரினால் பிர‌தான‌ வீதியின் ஓர‌த்தில் இருந்த‌ காணிக‌ள் பொது ம‌க்க‌ளுக்கு வ‌ர்த்த‌க‌ங்க‌ளுக்கென‌  ப‌கிர்ந்த‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.
இவ்வாறு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு சுமார் 40 வ‌ருட‌ங்க‌ளாகியும் அக்காணிக‌ளின் உரிமையாள‌ர்க‌ளுக்கு நிர‌ந்த‌ர‌  காணி உறுதிப்ப‌த்திர‌ம் இன்ன‌மும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை.

க‌ல்முனையை தொட‌ர்ந்தும் ஆட்சி செய்து வ‌ரும் முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ல்முனை முஸ்லிம்க‌ளை ஏமாற்றி தேர்த‌ல்க‌ளில் வாக்குக‌ளை பெறுகிற‌தே த‌விர‌ அம்ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ளுக்கு நிர‌ந்த‌ர‌ தீர்வுக‌ளை இதுவ‌ரை பெற்றுக்கொடுக்க‌வில்லை, பெற்றுக்கொடுக்க‌ முய‌ற்சி செய்ய‌வுமில்லை. இத்த‌னைக்கும் இம்ம‌க்களின் அமோக‌ வாக்குக‌ளை பெற்ற‌ மு. காவின் த‌லைவ‌ர் ஹ‌க்கீம் 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ கெபின‌ட் அமைச்டில் இருந்து சுக‌ம் அனுப‌வித்து வ‌ருகிறார்.


இந்த‌ நிலையில் ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌வினால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ கிழ‌க்கு மாகாண‌ ஆளுன‌ர் கௌர‌வ‌ ஹிஸ்புள்ளா அவ‌ர்க‌ள் திற‌மைசாலி, ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ளை ந‌ன்கு தெரிந்த‌வ‌ர், ஏமாற்று அர‌சிய‌ல் செய்யாத‌வ‌ர் என்ப‌தால் அவ‌ரால் கிழ‌க்கு மாகாண‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வெளுத்துக்கொண்டிருப்ப‌தை காண்கிறோம்.

அத்த‌கைய‌ சிற‌ப்பான‌ க‌வ‌ர்ண‌ர் த‌லையிட்டு க‌ல்முனை ம‌க்க‌ளின் காணிக‌ளுக்கான‌ நிர‌ந்த‌ர‌ காணி உறுதிக‌ளை வ‌ழ‌ங்கி வைக்க‌ வேண்டும் என‌ க‌ல்முனை ம‌க்க‌ள் சார்பில் உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்