பொத்துவில் மத்தியகல்லூரியின் தேசிய பாடசாலை தரமுயர்தல் கடிதத்தை ஆளுநர் வழங்கி வைப்பு


அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தில் இருக்கின்ற பழமை வாய்ந்த பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த பல்வேறு வகையிலும் முயற்சிகள் இடம் பெற்றது. 

இச் சந்தர்ப்பத்தில் அண்மையில் நியமிக்கப்பட்டு இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் கவனத்திற்கு இவ் வேண்டுகோளை அப் பிரதேசத்தை சேர்ந்த கல்வி மான்களும்,பாடசாலை சமூகமும், உள்ளூர் அரசியல் தலமைகளும் முன் வைத்தனர்.

மேற்படி பாடசாலையினை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு ஆளுநரின் அனுமதியையடுத்து. கல்வி அமைச்சு தேசிய பாடசாலையாக தரமுயர்த்தியுள்ளது.

அதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை ஆளுநர் இன்று(16.02.2019) அம்பாறை ஆளுநர் பணிமனையில் வைத்து பாடசாலையின் அதிபர்,பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அரசியல் தலைவர்கள்,ஊர்ப் பிரமுகர்கள் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கத்தார்.

மேற்படி பாடசாலையினுடைய எதிர்கால வளர்ச்சிக்கு தன்னாலான ஒத்துழைப்பையும் , முயற்சியையும் வழங்குவதாக உறுதி மொழி வழங்கினார்.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்.உப வலயக் கல்வி பணிப்பாளர் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பிரதேச சபை உறுப்பினர்களான மஜீட் மற்றும் அன்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்edia Coordinator Governor  Eastern Province 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்