ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
45000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை காடுகளில் வாழ்ந்த, ஹோமோ சேப்பியன்கள் எனப்படும் ஆதி மனிதர்கள் தொடர்பான பிரமிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேப்பியன்கள் உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக அறிவுடன் வாழ்ந்தார்கள் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் Griffith பல்கலைகழக மாணவர்களும், கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இந்த ஆய்வில் ஒக்ஸ்போட் மற்றும் குயின்ஸ்லாந்து மாணவர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேப்பியன்கள் குரங்குகளை வேட்டையாடி, உணவாக உட்கொண்டமைக்கான ஆதாரங்களும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது.
இலங்கையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட பாஹியங்கலை காட்டு பகுதியில் இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காட்டுக்குள் வேட்டையாடுவதற்காக அவர்கள் பயன்படுத்திய எலும்புகள் மற்றும் கல்லினால் செய்யப்பட்ட நூதனமான ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குரங்குகளின் வேகத்திற்கமைய அதனை வேட்டையாடுவது சாதாரண விடயமல்ல. எனினும் அதனை பிடித்து உணவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வினை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த காலத்தில் எதிர்பார்த்ததை விடவும் சேப்பியன்கள் அறிவுத்திறன் அதிகமாக இருந்தார்கள் எனன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் காணப்பட்ட காலநிலையின் அடிப்படையில் மலைக்காடுகளில் யாரும் வாழ்ந்திருக்க முடியாது என்ற நிலை காணப்பட்டது.
எனினும் புதிய ஆய்வின் மலைக்காடுகளின் ஆதி மனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை ஆதி மனிதனும் முதல் முஸ்லிமுமான ஆதம் இலங்கையிலேயே கால் பதித்ததாகவும் ஆதமின் வாhரிசுகளாக வாழ்ந்த வாழ்கின்ற முஸ்லிம்களே இலங்கையின் முதல் பூர்வீகம் என்பதையும் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மிக நீண்ட காலமாக தொடர்ந்து கூறி வருகிறார். அவரது கருத்தோடு இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது அவரது கருத்து உண்மை என விளங்கிக்கொள்ள முடிகிறது.
Comments
Post a comment