Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

மாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 18

மாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 18

மாக்கந்துர மதுஷ் இலங்கையில் இருந்து தனது சகாக்கள் மூலம் கடத்திச் சென்ற இரத்தினக்கல் இப்போது டுபாய் பொலிஸாரின் வசம் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது.

அதேசமயம் இந்த கடத்தலுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன...

700 கோடி ரூபா இரத்தினக்கல்லை பன்னிப்பிட்டியில் கொள்ளையிட்ட மதுஷ் அந்தக் கொள்ளையை நவீன தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தியே மேற்கொண்டிருப்பதை அறிந்து பொலிஸாரே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

700 கோடி ரூபா பெறுமதியான கொள்ளை என்பதால் இது பிசகிவிடக் கூடாது என்பது ஒரு பக்கம் - கொள்ளையிட்ட பின் தகவல்கள் வெளியே செல்லக் கூடாதென்பது இன்னொரு பக்கம் - அப்படியே சென்றாலும் தனது சகாக்கள் யாரும் சிக்கிவிடக் கூடாதென்பது இன்னொரு பக்கம்...

இப்படி பல பக்கங்களை யோசித்த மதுஷ் - கணணித்துறையில் ஆற்றல் மிக்க ஒருவரைக் கொண்டு இதற்கென ஒரு மொபைல் செயலியை (app )வடிவமைத்துள்ளார். அந்த செயலியின் ஊடாகவே இது திட்டமிடப்பட்டு - ஒருங்கிணைக்கப்பட்டு - ஒருவருவருக்கொருவர் தொடர்புகொள்ளப்பட்டு -  இந்தக் கொள்ளை நடத்தப்பட்டுள்ளது. அந்த செயலியை தயாரித்தவர் இப்போது சிக்கியுள்ளார்.இப்படி தொழிநுட்ப உதவி - யுக்தியுடன் ஏற்கனவே வேறு பல விடயங்களையும் இவர்கள் அரங்கேற்றியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இப்படி கொள்ளையடிக்கப்பட்ட அந்த இரத்தினக்கல் பின்னர் ஒரு நபரால் நடிகர் ரயன் மற்றும் பாடகர் அமல் ஆகியோரிடம் தெமட்டகொடை சமந்தா தியேட்டருக்கு அருகில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

அந்த கல்லை வழங்க பியகமவில் இருந்து ஒரு வாகனம் வாடகைக்கு அமர்த்தப்பட்டு வந்திருப்பதும்  அன்று மாலையே ரயன் - அமல் - மற்றும் ஒரு கொழும்பு வர்த்தகர் இசைநிகழ்ச்சி ஒன்றுக்காக டுபாய் சென்றதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரத்தினக்கல் கடத்தலுக்காகவே டுபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார் மதுஷ். அதில் கலந்து கொள்ளும் போர்வையில் சென்ற மேற்படி முக்கியஸ்தர்களே இதனை கொண்டு சென்றுள்ளனர். அதுவும் சுங்க அதிகாரி ஒருவரின் சப்போர்ட்டுடன்...

ரயன் மற்றும் அமல் மதுஷுடனான தொடர்புகளை ஆரம்பத்தில் மறுத்தனர். ஆனால் இப்போது நிலைமை வேறு. அவர்கள் சிக்கிக் கொண்டது ஒருபுறம். மறுபுறம் அவர்களின் கைத்தொலைபேசி அன்றைய தினம் தெமட்டகொடையில் இருந்து கட்டுநாயக்க வரை பயன்பாட்டில் இருந்துள்ளதை விசாரணை செய்யும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஊர் பாஷையில் சொல்வதானால் இவர்களுக்கு இனி கேஸ் பாரம் தான்.

இவற்றை விட இன்னுமொரு முக்கிய விஷயம்...
இந்த சம்பவம் தொடர்பில் இரத்தினக்கல் உரிமையாளர் பொலிஸ் சென்ற பின்னர் டுபாயில் இருந்து மதுஷ் அவருடன் மூன்று தடவைகள் போனில் பேசியுள்ளார்.

“ ரொம்ப துள்ள வேண்டாம்.. என்னைப்பற்றி உனக்கு தெரியாது. 1300 கோடி ரூபாவுக்கு அதனை விற்க நான் பேசியுள்ளேன்.அப்படி விற்றால் உன்னை கவனிக்கிறேன். இத்தோடு தேடுவதை நிறுத்திக்கொள்” என்று மதுஷ் தொலைபேசியில் இரத்தினக்கல் உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மதுஷ் தேடப்பட்டார்..

மாக்கந்துர மதுஷ் இலங்கை பாதுகாப்புத் தரப்பினருக்கு அப்பால் பாகிஸ்தானின் மாஃபியா கும்பலால் கொல்வதற்கு தேடப்பட்டவர் என்பது விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கொடுக்கல் வாங்கலால் மதுஸுடன் கோபமடைந்திருந்த பாகிஸ்தான் தரப்பு கஸ்டமர் என்ற ரீதியில் இருவரை மதுஷுடன் தொடர்புகொள்ள வைத்து டுபாய்க்கும் அனுப்பியிருந்தது. அவர்கள் மதுஷை தீர்த்துக்கட்டி திரும்ப பாகிஸ்தான் வர விசேட படகுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தது பாகிஸ்தான் ரீம்.

கடந்த சில மாதங்களாக மதுஷ் மிகுந்த பாதுகாப்புடன் இருந்ததாலும் வெளிப்பயணங்களை தவிர்த்த காரணத்தினாலும் அவர்களின் நோக்கம் கைகூடவில்லை. பொலிஸில் மதுஷ் மாட்டிய கையோடு இப்போது பொலிஸில் அவர்களை மேலும் இறுக்க பாகிஸ்தான் ரீம் வேலைகளை செய்து வருவதாக தகவல்..

மதுஷின் சகாக்கள் கைது...

இப்போது இலங்கையில் மதுஷின் சகாக்கள் கைது நாளாந்தம் இடம்பெற்று வருகிறது.இன்றும் கூட இருவர் கைது செய்யப்பட்டனர். கஞ்சிப்பான இம்ரானின் இடத்தை நிரப்பி அவரின் வேலைகளை முன்னெடுக்க முயன்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் சொல்கிறது.

அதேசமயம் களுத்துறை சிறைச்சாலை பஸ் தாக்குதலை நடத்திவிட்டு படகில் இந்தியா தப்பிச் சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் டுபாய் செல்ல முற்பட்ட அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகியோர் இந்திய பொலிஸ் பிடியில் இருந்து தப்ப தமிழக அரசியல்வாதிகளின் உதவியை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

தமிழக அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதி ஒருவரின் உதவியின் ஊடாகவே மதுஷ் குழு இந்த வேலையை செய்துள்ளதாகவும் இங்கிருந்து தப்பிச் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள பாதாள உலக கோஷ்டி பிரமுகர்கள் இதில் ஒத்தாசைகளை வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.அவை தொடர்பிலும் விசாரணைகள் நடக்கின்றன.

இவற்றைவிட நவீன ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்ப மதுஷ் முயன்றதாக வந்த தகவல்கள் குறித்து நேற்று குறிப்பிட்டிருந்தேன்.கடல் மூலம் சுமார் ஐந்து இடங்களில் கைமாற்றி இந்த ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
SIVA

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.