எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
"கிண்ணியா மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும்" கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் விஷேட உத்தரவு. கிண்ணியா ,மூதூர் பிரதேசங்களில் கடந்த மாதம் மணல் அகழ்வு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளின் போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அப்பிரதேசங்களுக்கு ஆளுநர் விஜயம் செய்து நிலமைகளை கேட்டறிந்ததன் பின்னர் அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது தொடர்பாக கலந்துரையாட விஷேட மாநாடு கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (25.02.2019) இடம்பெற்றது. நீண்ட நேரம் இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டிய பின்னர் ஆளுநர் தனது உரையில் " மிக வறுமையான நிலையிலே இம் மக்கள் வாழ்கிறார்கள். மண் அகழும் தொழிலை நம்பி சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக இத் தொழிலை தடை செய்ததை அடுத்து மிக மோசமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் உயிரிழந்த குடும்பங்களை சென்று பார்வையிட்டேன். அவ் இரண்டு இளைஞர்களும் வறுமையில் , குடிசைகளிலே வாழ்ந்து கொண்டிரிந்தார்கள்