க‌ல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு!

க‌ல்முனை பிரதேசத்தின் கல்வி ரீதியான முன்னேற்றச் செயற்பாடுகளில் பங்காளிகளில் ஒன்றாக இருந்து வருவது  இளம் பட்டதாரிகள் அமைப்பாகும்.

அதன் பிரகாரம் இளம் பட்டதாரிகள் அமைப்பின் எதிர் வரும் ஈராண்டிற்கான நிர்வாக தெரிவு நேற்று(29.01.2019) பி.ப.4.00 மணியளவில் அமைப்பின் செயலாளர் அப்துல் றஹ்மான் அவர்களின் இல்லத்தில் தலைவர் மனாஸ் அவர்களின் தலைமையில் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றிருந்தது.

அதன் பிரகாரம் இவ் அமைப்பில் தொடர்ச்சியாக முயற்சி மற்றும் சமூக சிந்தனையுடன் தொழிற்படக்கூடிய புதிய ஆளுமைகள், தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் வழிமொழிதலுடனும்,
 புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளின் சம்மதத்துடனும் உடன் அமுலிற்கு வரும் வகையில் பிரேரிக்கப்பட்டு ஏற்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம்.....

தலைவர்-முர்சித் முபாரக்(வயம்ப பல்கலை கழகம்)

உப தலைவர்-தில்சாத் ( தெ.கி.பல்கலை கழகம்)

செயலாளர்-தானிஸ் முஹம்மட்(தெ.கி.பல்கலை கழகம்)

உப செயலாளர் - முஹம்மட் றிஜாஸ் (தெ.கி.பல்கலை கழகம்)

பொருளாளர்-அப்ஸல் இலாஹி (பேராதனை பல்கலை கழகம்)

ஏனைய உறுப்பினர்கள் பதவி வாயிலாக.....

கல்வி நடவடிக்கை-

நஜ்ரத்( தெ.கிழக்கு பல்கலை கழகம்)
அன்சாத்(பேராதனை பல்கலை கழகம்)
அபாம் கலீல் ( தெ.கிழக்கு பல்கலை கழகம்)
இன்சாப்(ஜெயவர்த்தன பல்கலை கழகம்)

ஊடகம்-

யஹீனுல் ஹக்
(யாழ்ப்பாண பல்கலை கழகம்)

கலாச்சார அலுவல்கள் -

மௌலவி இம்தாத்
( தெ.கிழக்கு பல்கலை கழகம்)
அய்மன்(பேராதனை பல்கலை கழகம்)

எழுத்துப்பணி -
வசீம்( யாழ்ப்பாண பல்கலை கழகம்)

நிதி தொடர்பான நடவடிக்கை-
றிக்காஸ்
(ரஜரட்ட பல்கலை கழகம்)

ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள்-அமைப்பின் சகல முன்னை நாள் தலைவர்களும் ஏனையவர்களும் அமைப்பின் யாப்பின் பிரகாரம் தொடர்ந்து நிலையிருப்பர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற 14 நிர்வாக உறுப்பினர்களையும் அல்லாஹ்வின் துணையுடனும், தூய உள்ளத்தை கொண்டும் , மிகச்சிறந்த பணியான இந்த சமூக பணியை வேறுபாடுகள் கலைந்து சிறப்பாகவும் செய்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இவ்வ‌மைப்பின் செயற்பாடுகளோடு தொடர்புடைய ஏனைய அமைப்புகள் மற்றும் நபர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு க‌ல்முனை பிரதேசத்தின்  கல்வி நடவடிக்கைகளிற்கு  மேற் கொண்டுவரும் முயற்சிகளிற்கு பேருதவியாக இருக்குமாறு    மிகப் பணிவுடன் அனைவரையும் வேண்டிக் கொள்ள‌ப்ப‌டுகிற‌து.

மீண்டுமொருமுறை தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற இளம் பட்டதாரிகள் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோம்💐💐💐.

இவ்வண்ணம்.

2016/2018 கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,முன்னை நாள் உறுப்பினர்கள்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்