எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் முதன் முதலாக ஆளுநராக நியமிக்கப்பட்டமையினை இட்டு பெருமையடைகின்றேன். இப்பதவிக்காலத்தில் இன, மத, கட்சி பேதமின்றி உங்களுடைய நடவடிக்கைகள் அமையும் என்று நம்புகின்றேன்.
அந்தவகையில் பழுத்த அனுபவம் கொண்ட அரசியல் தலைமையான நீங்கள் இந்த மாகாண சபையினை வினைத்திறன் மிக்கதாக வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குள்ளது.
கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் என்றவகையில் நீங்களும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் நானும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் எம்மிருவருக்கும் இருக்கின்றது.
அதற்கேற்ப எனது அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளில் பல அபிவிருத்திகளை நான் சார்ந்த பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றேன். அவ்வபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை கோருகின்றேன்.
கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கு வளமான எதிர்காலத்தை தோற்றுவிப்பதற்கும் நாமிருவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுவதற்கு இறைவன் அருள்புரிய பிரார்த்திப்பதோடு உங்கள் பணிகள் சிறப்பாக இடம்பெற மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.
- ஊடகப் பிரிவு -
Comments
Post a comment