மாணவர்கள் கல்வியில் விடா முயற்சியைக் கைவிடக்கூடாது

மாணவர்கள் கல்வியில் விடா முயற்சியைக் கைவிடக்கூடாது 
- அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

( ஐ. ஏ. காதிர் கான்)

   ஊவா மாகாணத்திலிருந்து வெளிநாடுகளில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்கும் திட்டமொன்று, (05) சனிக்கிழமையன்று, பதுளையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.   இத்திட்டத்தின் கீழ், 3,313 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இப்புலமைப் பரிசில்களை, குறித்த மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
   அமைச்சர் இங்கு மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது, 
   ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர்களும், தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை, மேலும் முன்னேற்றகரமானதாக மாற்றவேண்டும் என்ற நன்நோக்கிலேயே, வெளிநாடுகளில் பணிபுரிகின்றார்கள். தமது பிள்ளைகளின் கல்வித்தேவைகளை நிறைவு செய்யும் வகையிலேயே, அவர்கள் அங்கு கஷ்டப்பட்டு ஊதியம் சம்பாதிக்கின்றார்கள்.
   எனவே, ஒவ்வொரு பிள்ளைகளும், தமது பெற்றோர்களின் கனவுகளை வீணடிக்காமல், சிதறடிக்காமல் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களுக்கேற்றவாறு,  ஒவ்வொரு மாணவரும் தங்களது கல்வி நடவடிக்கைகளை, மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதற்குத்  தேவையான சகல வழிவகைகளையும், சிறப்பான முறையில்  அமைத்துக் கொள்வாரேயானால், அதுதான் அம்மாணவர்  பெறும் மாபெறும் சாதனையாகும். எனவே, ஒரு மாணவர்  கல்வியின்பால் உள்ள தனது விடா முயற்சிகளை ஒருபோதும்  கைவிடக் கூடாது. இவ்வாறு, திறமையாகவும்,  நன்நோக்காகவும், புரிந்துணர்வுடனும் கற்றுக்கொள்ளும் மாணவரின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காக, தான் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்