இந்த நாடு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

Taboos muhammad
மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்கள் சொன்னது என்ன..?
எங்கள் தலைவிதியை நாங்களே எழுதுவோம்....!
============================================

1815ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை மூன்று பகுதிகளாக நிர்வாகம் செய்தனர்.

1. கண்டிச் சிங்களவர்கள்
2. கீழ்நாட்டுச் சிங்களவர்கள்
3.தமிழர்கள்

1833ம் ஆண்டு கோல்புறூக் ஆணைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் இந்த நாடு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
1.மத்திய மாகாணம்
2. கிழக்கு மாகாணம்
3.வடக்கு மாகாணம்
4.தென் மாகாணம்
5.மேல்மாகாணம்

வடக்கு கிழக்கும் எப்போது இணைக்கப்பட்டது?
====================================

1987ம் ஆண்டு இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கு 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தமிழ் மக்களின் பெயரால் ஆயுதம் தூக்கி  தனிநாடு கோரிப் போராடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஏற்படுத்திய ஆயுத நடவடிக்கைகள் பிராந்திய பாதுகாப்புக்கு உகந்ததல்ல எனும் இந்தியத் தலையீட்டின் அடிப்படையில் தமிழ் ஈழ விடுதலைப்  புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக இந்திய அனுசரணையில் ஒரு அதிகாரப்பரவலாக்கல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

அப்போது ஜனாதிபதி ஜயவர்தன வடக்கு மாகாணத்துடன்  கிழக்கு மாகாணத்தை பல்வேறு அரசியல் உபாய நோக்குகளுடன் திட்டமிட்டு இணைத்தார்.

இதனால் பாரம்பரியமாக கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களது பெரும்பான்மையை இழந்ததுடன் அவர்களது அரசியல் அடையாளம் நலிவுபடுத்தப்பட்டது.

1961ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில்46 வீதமான முஸ்லிம்களும் 23 வீத தமிழ் மக்களும் 29 வீத சிங்கள மக்களும் காணப்பட்டார்கள் என 2007ம் ஆண்டு சனத்தொகை மதிப்பு அறிக்கை கூறுகிறது.

1981ம் ஆண்டைய சனத்தொகை மதிப்பில் சிங்கள மக்களின் சனத்தொகை 37 வீதமாக அதிகரித்திருந்ததுடன் முஸ்லிம்களின் சனத்தொகை 41 வீதமாக குறைந்திருந்தது.

 1982ம் ஆண்டு அம்பாறைமாவட்டத்துடன் ஊவா மாகாணத்தின் சில சிங்களப் பிரதேசங்கள் இணைக்கப்பட்டதாலும் திட்டமிட்ட  சிங்கள குடியேற்றங்களினாலும் அரசின் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்புக்கு குடியேற்ற தூண்டுதல்களாலும்   2001ம் ஆண்டு சிங்கள மக்கள் 39 விதமாகவும் முஸ்லிம்கள் 41 விதமாகவும் காணப்பட்டனர்.

2007ம் ஆண்டைய அறிக்கையில் முஸ்லிம்கள் 44 வீதமாகவும் சிங்களவர்கள் 37.5 விதமாகவும் இருக்கின்றனர்.

தமிழ் மக்களின் சனத்தொகை 22 வீதத்திலிருந்து 18 வீதமாக குறைந்திருக்கிறார்கள்.

55 வீதத்துக்கும் அதிகமான முஸ்லீம் அல்லாத சகோதரர்கள் உள்ள மாவட்டமாக அம்பாறை மாவட்டம் இன்று காணப்படுகிறது.

இலங்கையின் 25 மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மாவட்டங்களாக  அம்பாறை மாவட்டம் மற்றும்  திருகோணமலை மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்கள்  மாத்திரமே காணப்படுகிறது .

அதிலும் திருகோணமலையில் அம்பாறை மாவட்டத்தை விட 1 வீதத்தால் அதிகரித்த 45 வீதமாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீத முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக முஸ்லிம்களின் இனப்பரம்பல் திட்டமிட்ட வகையில் பல்வேறு வகையில் மட்டுப்படுத்தப்பட்ட வருவது இலங்கை முஸ்லிம்கள் மீதான ஒரு வாழ்வியல் அச்சுறுத்தல் என்பது கசப்பான உண்மையாகும்.

இது நிற்க...

மர்ஹூம் தலைவர் என்ன சொன்னார் என்பதை நோக்குவோம்...

இலங்கை இந்திய ஒப்பந்தம் - முஸ்லீம் காங்கிரஸ் நிலைப்பாடு
===============================================

இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்ட கிழக்கு மாகாண முஸ்லிம்களின் முதுகின் மீது எழுதப்பட்ட அடிமைச் சாசனமாகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முஸ்லீம் காங்கிரஸ் பார்க்கிறது .

ஜெ வி பி எனும் அரசியல் கட்சி நீதிமன்றம் சென்று வடக்குடன் இணைந்திருந்த கிழக்கு மாகாணத்தை பிரித்தது என்பது முஸ்லிம்களுக்கு இன்று ஆறுதல் தரும் விடயமாகி இருக்கிறது.

ஏனெனில் இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான தீர்வு எனும் சொல்லைக் கூட ஜீரணிக்காத தமிழ்த் தேசிய அரசியலின் கோரா முகங்கள் பல்வேறு தருணங்களில் தனது வேட்டைப் பார்க்களால் முஸ்லீம் குருதி தோண்டிய வரலாறுகள் ஏராளம்.

மன்னிப்பு என்பது  வேறு மறத்தல் என்பது வேறு என்பதை இன்னும் தமிழ்த்தேசிய அரசியல் புரியாதது போல் காட்டிக் கொள்வது அபத்தம் ஆனது.

இப்போது இன்றய நிலைப்பாட்டுக்கு வருவோம்..

புதிய அரசியலமைப்பில் வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதை ஆதரிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் சக்திகள் முஸ்லிம்களுக்கான இந்தத் தீர்வையும் பற்றி இன்னும் வாய் திறக்காமல் உள்ளமை வேதனை தருகிறது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் அபிலாசைகள் குறித்து நாம் பேச வேண்டிய வரலாற்றுத் தேவை எழுந்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கான பொருத்தமான எல்லா முஸ்லிம்களுக்கும் நன்மை அளிக்கக் கூடிய தீர்வுப் பொறிமுறைகள் குறித்து அதிகம் பேச வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.

தொடரும் ..

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்