Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

மு.கா. வுக்கு முடிவுகட்ட மு.கா. வே முயற்சியா?


======================

வை எல் எஸ் ஹமீட்

தற்போதைய யாப்பின் படி பாராளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருப்பதாக ஜனாதிபதி கருதுகிறாரோ அவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார். அவருக்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை. எதிர்க்கட்சி விரும்பினால் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம். அது சாதாரண பெரும்பான்மையால் ( சமூகமளித்திருப்பவர்களில் பாதியும் ஒன்றும் ) நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியிழப்பார்; என்பது எல்லோருக்கும் தெரியும்.

புதிய நகல்யாப்பிலும் இதேமுறைதான் பிரேரிக்கப்பட்டிருக்கின்றது; ஆனால் சிறிய வித்தியாசம். அதாவது அவ்வாறு பிரதமர் நியமிக்கப்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். அதில் அவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் தோல்வியடைந்தால் பாராளுமன்றம் புதிய பிரதமரைத் தெரிவு செய்யும். ஆனால் ஒரு கட்சி 50% இற்குமேல் ஆசனங்களைப்பெற்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை . இதில் பிரச்சினை ஏதும் இல்லை.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு
—————————————-
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தற்போது தேவை சாதாரண பெரும்பான்மை. அதாவது 100பேர் சமூகமளித்தால் 51 பேர். நகல் யாப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற 113 தேவை. ( சரத்து 89). சிறுபான்மைக் கட்சிகளுக்கு முன்னயதைவிட சற்று அனுகூலம் குறைவு. ஆனாலும் பெரிய பிரச்சினை இல்லை. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும்போது பெரும்பாலும் எல்லோரும் சமூகமளித்திருப்பார்கள்.

இங்குதான் மு கா பெரும் ஆச்சரியத்தை நிகழ்த்தியிருக்கின்றது.

அதாவது, இந்த ஏற்பாட்டை ( சரத்து 89 ஐ) ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரை நீக்குவதற்கு  2/3 ஐத் தேவையாக்க வேண்டும்; என்று வழிநடாத்தல் குழுவுக்கு மு கா பிரேரித்திருக்கின்றது. ( இது நிபுணர் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது)
ஆழுங்கட்சிக்கே பெரும்பாலும் 2/3 பெறுவது கஷ்டம். எதிர்க்கட்சியால் பெறமுடியுமா?

இன்று ஆட்சிசெய்வதற்கு 113 தேவை. தற்போதைய தேர்தல்முறையின்கீழ் பெரும்பாலும் 113 பெறுவது சிரமம் என்பதனால்தான் சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவைப்படுகிறது.  அதை வைத்துத்தான் சாதிக்கத்தெரிந்த சிறுபான்மைக்கட்சிகள் சாதிக்கின்றன. உதாரணம் த தே கூ.

இவர்களின் பிரேரணையின்படி பிரதமராவதற்கு 113ஐப் பெறாவிட்டால் சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவை. பிரதமராகிவிட்டால் அதன்பின் ஆட்சியைத் தொடருவதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவையேயில்லை. ஏனெனில் ஒன்று, இரண்டு சிறுபான்மைக் கட்சிகள் அரசிலிருந்து விலகினாலும் எதிர்க்கட்சி 2/3 பெறாது. அதன்பொருள் ஒருவர் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவரை அசைக்கமுடியாது.

சற்று சிந்தித்துப்பாருங்கள். தற்போது தேவை சாதாரண பெரும்பான்மை. நாளை எதிர்க்கட்சி ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் த தே கூ நடுநிலை வகித்தால் கூட ஆட்சி கவிழலாம். அல்லது இரண்டு முஸ்லிம் கட்சிகளும் மாறி வாக்களித்தாலும்/ நடுநிலை வகித்தாலும் கவிழலாம். சுக்கான் நமது கையில் இருக்கின்றது. அதைப் பாவிக்கத்தெரியாமல் இருப்பது நமது பலவீனம். அது வேறுவிடயம்.

புதிய முறையில் நடுநிலை வகித்தால் கவிழாதாது. எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

இவர்களின் பிரேரணையின் படி நடுநிலை வகித்தாலும் கவிழ்க்க முடியாது, எதிர்த்து வாக்களிக்களித்தாலும் கவிழ்க்க முடியாது.

சிந்தித்துப்பாருங்கள். நாளை மஹிந்தவுடன் இணைந்து நமது 12 பேரும் வாக்களித்தாலும் 150 வருமா? த தே கூ ம் சேர்ந்து வாக்களித்தாலும் 150 வராது. இதன்பொருள் என்ன?

ஏற்கனவே முட்டுக்கொடுத்தும் எதையும் சாதிக்கவில்லை. இப்பொழுது பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டதும் எட்டி உதைத்தாலும் ஓரத்தில் போய்க் குந்தவேண்டியதுதான். சமூகத்திற்காக அரசை எதிர்த்துப்பேசினால் சிலவேளை அந்த நிலைமை வரலாம். அப்பொழுது அமைச்சு, ராஜாங்க அமைச்சு, பிரதியமைச்சு என மூச்சவிடுபவர்கள் ஒவ்வொருவராக வேலி பாய்வார்கள். அதன்பின் கட்சியை மூடவேண்டியதுதான்.

இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியில் இருந்து குரல்கொடுக்க மட்டும்தான் முடியும். தமிழர்களை ஆயுதப்போராட்டத்திற்குள் தள்ளியதே வெறும் நூறுவீத முரண்பாட்டு அரசியல்தான்.

சுருங்கக்கூறின் பிரதமராகும்வரை நாம் தேவைப்படுவோம். அதுவும் இந்தத் தேர்தல்முறை இருந்தால்தான். அதன்பின் நாம் தேவையில்லை. நாம் செல்லாக்காசு.

இந்தப் பிரேரணையை மு கா ஏன் முன்வைத்தது? இனி மு கா தேவையில்லை. ஐ தே கட்சியுடன் சங்கம்மாகிவிடுவோம்; என்றா?

அல்லது; பலம் இருந்தும் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. அந்தப்பலம் எதற்கு என்பதற்காகவா? அல்லது புரியாத்தனமா? அல்லது வேறு ஏதும் பின்னணியா? புரியவில்லை.

அங்கத்தவர்களே! ஆதரவாளர்களே! இது ஏன் என்றாவது உங்கள் தலைமையிடம் கேள்வியெழுப்புவீர்களா?

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச