பண்டாரவளையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கு அமைச்சர் ஹரீன் அடிக்கல் நட்டிவைப்பு( ஐ. ஏ. காதிர் கான் )

   பதுளை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ முன்வந்துள்ளார்.
   இதன் ஓர் அங்கமாக, பண்டாரவளையில் 25 கோடி ரூபா செலவில் வதிவிட வசதிகளுடன் கூடிய நீச்சல் தடாகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
   இதற்கான அடிக்கல், கினிகம பிரதேசத்தில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் அண்மையில் நட்டிவைக்கப்பட்டது.  அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுப் படிமத்தையும் அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார்.
   அத்துடன், தியத்தலாவை, அப்புத்தளை ஆகிய இடங்களிலுள்ள விளையாட்டுத் திடல்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அமைச்சர் இதன்போது தீர்மானித்துள்ளார். இதற்கமைய, தியத்தலாவை, அப்புத்தளை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள விளையாட்டுத் திடல்களையும் அமைச்சர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்