முஜீபுர் றஹ்மானின் முயற்சியில் வெள்ளவத்தை “மெரைன் டிரைவ்” இல் பெண்களுக்கான மும்மொழி பாடசாலை!

முஜீபுர்  றஹ்மானின் முயற்சியில் வெள்ளவத்தை “மெரைன் டிரைவ்” இல் பெண்களுக்கான மும்மொழி பாடசாலை!

பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்  றஹ்மானின் அயராத முயற்சியில் வெள்ளவத்தை “மெரைன் டிரைவ்” இல் பெண்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய மும்மொழி பாடசாலை ஒன்றின் உருவாக்கத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

பல மாதங்களுக்கு முன்னரே அமைச்சரவை இதற்கு அங்கிகாரம் வழங்கியிருந்தது.

52 நாட்கள் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து பின்தள்ளப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டம் இன்று கல்வி அமைச்சரின் அங்கீகாரத்தோடு  செயல்வடிவம் பெறுகிறது.  

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவா்களின்  வர்த்தக வாணிபத்துறை  அமைச்சுக்கு சொந்தமாக இருந்த காணியே இந்த பாடசாலைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கொழும்பு வாழ் முஸ்லிம் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதில் இருக்கும் தடைகளையும், நெருக்கடிகளையும் நிவர்த்தி செய்யும் நோக்கில் ஒரு புதிய பாசாலையை உருவாக்க வேண்டும்  என்ற நிலைப்பாட்டில் முஜீபுர் றஹ்மான்  கடந்த மூன்று வருடங்களாக தொடராக  நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார் .

வெள்ளவத்தையில் அமையவிருக்கும் இந்த புதிய பாடசாலை மும்மொழிகளிலும்  பல்லின சமூகங்களும் இணைந்து கல்வி கற்கக் கூடிய ஒரு  பாடசாலையாக  நிர்மாணிக்கப்படவிருக்கிறது.

கதீஜா பாலிக்கா வித்தியாலயம் , ஆயிஷா பாலிக்கா வித்தியாலயம் என்ற இரண்டு பெயர்கள் இதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

1994 களில் காலம் சென்ற அமைச்சர் அஷ்ரப் கொழும்பில் இத்தகைய பாடசாலை ஒன்றை உருவாக்குவதற்கு அயராது முயற்சி  செய்தபோதும் துரதிஷ்டவசமாக அது கைக்கூடாமல் போனதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் பூரண ஒத்தழைப்புடன் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  முஜீபுர் றஹ்மான் மேற்கொண்ட அயராத நடவடிக்கையினால் இந்த முயற்சி இன்று பலனளித்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்