கினியம இக்ராம் தாஹாவின் ~~உரிமைக் குரல்|| சிறுகதைநூல் வெளியீட்டுவிழா

கினியம இக்ராம் தாஹாஎழுதிய ~உரிமைக் குரல்| சிறுகதைநூல் வெளியீட்டுவிழா 2019ஜனவரி; 18 ஆம் திகதிவெள்ளிக் கிழமை மாலை 4.00மணிக்குகுளிஃ இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்; நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு,கானெம் கினியமகுளோபல் சொசைடியின் உப தலைவர் எம்.எஸ்.எம். றிமாஸ்  முன்னிலையில் குளிஃ இஹல கினியம முஸ்லிம் மகாவித்தியாலயஅதிபர் எஸ்.டி.எம். ஹாசிம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எம்.ஏ.ஜீ. அஷ்ரப் அவர்கள் கலந்துசிறப்பிக்கவுள்ளார். அத்துடன் விசேடஅதிதிகளாக மொழிபெயர்ப்பாளர் ஹேமசந்திரபத்திரன, சட்டத்தரணிஏ.டப்ளியூ. சாதிக்குல் அமீன், பிங்கிரிய பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச். இஸ்மத் ஹஸன்(நளீமி)அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் சிறப்பதிதிகளாகஆசிரியர் எம்.ஜே.எம். நமீஸ், ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம்.எம். நியாஸ், மௌலவி எம்.ஐ. சித்தீக்,ஓய்வுபெற்றஅதிபர் ஏ.எல்.எம். சுலைமான்,ஓய்வுபெற்ற அதிபர் மஜ்மிலா இன்சார்,ஓய்வு பெற்ற ஆசரியர் ஏ.எச்.எம். இல்யாஸ்,ஓய்வுபெற்றதமிழ் மொழிஆசரியர் எம்.ஐ. மஹ்பூபா,ஓய்வுபெற்றஅதிபர் எம்.எச்.எம். சத்தார்,ஓய்வுபெற்றஆசரியரும் எழுத்தாளருமான பஸீலாஅமீர்,எழுத்தாளர் ரினோஸா முக்தார் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.

சர்வதேசப் பாடசாலைஅதிபர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். நஸீர் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.அதேபோல நூலின் விசேடபிரதிகளைசமூகசேவையாளர் தேசபந்துஅல்ஹாஜ். எப். அலாவுதீன் மற்றும் ஷாபிர் மன்சூர் பவுண்டேசன் பணிப்பாளர் தேசபந்துஎம்.எம்.எம். ஷாபிர் ஆகியோர் விசேடபிரதிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

எம்.எம். முஹம்மதுமுப்திஎன்றமாணவனின்; கிராஅத்துடன் ஆரம்பிக்கவிருக்கும்இந்நிகழ்வில்; வரவேற்புரையைஅதிபர் எம்.ரி.எம். தஹ்லான் நிகழ்த்த,வாழ்த்துரைகளைவிடிவெள்ளிபத்திரிகைபிரதமஆசிரியர்ஜனாப். எம்.பி.எம். பைறூஸ்,மேல் மாகாணம்ஒய்வுபெற்றகல்விப் பணிப்பாளர் ஜனாப். ஐ.எல்.எம். இன்சார்,மேசிகல்விவளாகஅதிபர் அல்ஹாஜ். ஏ.எச்.சமீம்,தர்காநகர் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் யாழ். ஜுமானா ஜுனைட்ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.

பூங்காவனம் சஞ்சிகையின் பிரதமஆசிரியரும்பன்னூலாசிரியருமான ரிம்ஸா முஹம்மத்; அவர்கள் நயவுரையைநிகழ்த்த,குளியாப்பிட்டியகல்விவலயத்தின் தமிழ் மொழிப் பிரிவுக்கானஉதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஜீ. அஷ்ரப் அவர்கள் கருத்துரையைநிகழ்த்துவார்கள். சந்தக்கவிமணிகிண்ணியாஅமீர் அலிகவி நயத்தைநிகழ்த்துவார். இறுதியாகஏற்புரைமற்றும் நன்றியுரையை நூலாசிரியர் இக்ராம் தாஹாஅவர்கள்நிகழ்த்துவார். இந்த நூல் வெளியீட்டுநிகழ்ச்சிகளைஐ.எல்.எம். இக்பால் ஆசிரியர் தொகுத்துவழங்கவுள்ளார் இந்நிகழ்வுகளைகானெம் கினியமகுளோபல் சொசைடிநிறுவனத் தலைவர் மௌலவி எஸ்.எச்.எம்.றியாஸ்தீன் ஏற்பாடுசெய்துள்ளார். இந்நிகழ்வில் கலை இலக்கியவாதிகள்,கல்விமான்கள்,சமூகசேவையாளர்கள் உட்பட இலக்கியஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

அர‌பா நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும்

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்