எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேச சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் கூட்டமைப்பு தலைவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை
- சு. கவின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்
வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதையை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே கிழக்கு மாகாணத்தை எப்போதும் அணுகி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கிஞ்சித்தும் சிந்திப்பவர்களாக இல்லை. சம்பந்தன் ஐயாவின் இருப்பிடமாக திருகோணமலை இருப்பினும்கூட அவரின் இருதயத்தில் வடக்குக்கு மாத்திரம் இடம் இருக்கின்றது என்பதை அவருடைய செயற்பாடுகள், செயலின்மைகள் ஆகியன மூலமாக மிக நீண்ட காலமாகவே அவதானித்து வந்திருக்க முடிகின்றது. தேர்தல் காலங்களில் மாத்திரம் கிழக்கு மாகாணத்துக்கு வந்து கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற பிற்பாடு இம்மக்களை கறிவேப்பிலைகளாக ஒதுக்கி தள்ளுகின்ற நடைமுறையைதான் இவர்களின் அரசியல் வழிமுறை கொண்டிருக்கின்றது. இதுவே ஆளுனர்கள் நியமனம் சம்பந்தப்பட்ட விடயத்திலும் நடந்தேறி உள்ளது.
வட மாகாண ஆளுனர் நியமனம் தொடர்பாக மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறை செலுத்தி உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையீடு காரணமாகவும்தான் வட மாகாண ஆளுனரை ஜனாதிபதி நியமிப்பதில் தாமதம் நேர்ந்து உள்ளது. இது தொடர்பாக சுமந்திரன் எம். பி போன்றவர்களின் கருத்துகள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில் வெளியாகி உள்ளன. ஆனால் கிழக்கு மாகாண ஆளுனர் நியமனம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைகள் அழுத்தம் கொடுத்ததாக தெரியவே இல்லை. இந்த இரட்டை வேடத்தை கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஆகவேதான் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் எவருக்கும் கிடையாது என்று அடித்து கூறுகின்றேன்.
எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுனர் பதவிகளுக்கு மிக பொருத்தமானவர்களையே அடையாளம் கண்டு நியமித்து உள்ளார் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமனம் பெற்று உள்ள முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களுக்குமான ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதியாக ஆளுனர் ஹிஸ்புல்லா செயற்படுவார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் எல்லா விடயங்களிலும் இன சமத்துவத்தை பேணி நடக்க வேண்டும் என்பது கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
Tharmi
Comments
Post a comment