எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
( மாவனெல்லை நீதிமன்றிலிருந்து MFM பஸீர்) கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் நொறுக்கி சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களில் 12 ஆம் சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் படிமுறைகள் அடங்கிய முக்கிய ஆவணமொன்று மீட்கப்ப்ட்டுள்ளது. புத்தளம், வணாத்துவில்லு – லக்டோ ஹவுஸ் தென்னந்தோப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைக் கொண்டு எவ்வாறு இந்த குண்டுகளைத் தயாரிக்கலாமெனும் பூரண செயன்முறை அந்த ஆவணத்தில் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) நேற்று மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணாவுக்கு அறிவித்தது. நேற்றைய தினம் குறித்தவழக்கு விசாரணைக்கு வந்தபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 2 இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க, வணாத்துவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், இரசாயனங்களை நீதிமன்றில் ஒப்படைத்து இந்த விடயத்தை தெரிவித்தார். அத்துடன் இதன்போது நீதிவான் முன்னிலையில் விசாரணைகளின் நிலைமை