இன்றய சோகங்களின் அடிப்படை. உலகம் முழுவதிலும் முஸ்லிம்களின் அடிபடை உரிமைகளா அரபியமயமாதாலா

வ.ஐ.ச.ஜெயபாலன் -

1.
இலங்கையில் குறிப்பாக கிழக்கு பாடசாலை அலுவகங்களில்  முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகள் தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. இதுபற்றி என்னிடம் கேட்க்கபட்டபோது என் கருத்தை உறுதியாக முன் வைத்தேன். 
.
ஒரு பெண் நிர்பந்திக்கபடாமல் சொந்த விருபத்தின்பேரில் முக அடையாளத்தை மறைக்காமல் அணியும் ஆடையைச் சிலர் கேழ்விக்குரித்தாக்குவதை அனுமதிக்க முடியாது. அதேபோல மாற்று மதத்தவர்களின் உடைகளை காமத்தை தூண்டுவது என வக்கிரமாகச் சிலர் குறிப்பிடுவதையும் அனுமதிக்க முடியாது.
.
எங்கள் இளமையில் சேலை முக்காடு என முஸ்லிம்களின் கலாசார உடைகள் ஒருபோதும் கேழ்விக்குள்ளானதில்லை. 1980 பதுகளின் பின்னர் முஸ்லிம்கள் அரபிய வடிவ உடைகளுக்கு மாற ஆரம்பித்தபோது உலகளாவி  உருவான உருவாக்கபட்ட  சூழல் இதுவாகும்.
.
மரபு  இஸ்லாமிய ஆடைகளா அல்லது அரபுமயமாதலா என்கிற விவாதம் உலக மட்டத்திலும்  இலங்கையிலும் அதிகரித்து வருகிறது. எனினும் இதுசார்ந்த விவாதங்களும் முடிவுகளும் உள்வாரியாக முஸ்லிம் மக்கள் மத்தில் மட்டுமே இடபெறுதல் வேண்டும். ஏனையோர்    விலகி இருப்பதே சரியானது என்பதை வலியுறுத்துகிறேன். .
.
முஸ்லிம் பெண்களிடமிருந்து உடைகள் தொடர்பான விதிகள் மற்றும்  இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட தீர்ப்புகளால் தாம் தனிப்பட்டமுறையில்  பாதிக்கபட்டதாக முறைப்பாடு வராத பட்சத்தில் இவ்விடயத்தில்  சட்டமும் அரசும் விலகி இருப்பதே ஜனநாயகமாகும்.

2.

முஸ்லிம்கள் பற்றி இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிற விடயம் அரபிய மயமாதலாகும். துர் அதிஸ்ட்ட வசமாக இதுபற்றிய தொடர் விவாதங்களும் உலக நாடுகளின் விவாதங்களில் அதன்மூலம் பங்களித்தலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகம் இல்லை. இந்த தசாப்தத்தில் இலங்கை ஐலண்ட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள்பலவற்றுக்கு இன்றுவரை  பதிலளிக்கபடவில்லை.  உலகில் முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில்  ஆய்வு கலந்துரையாடல் விவாதங்கள் இல்லாத முரட்டுத்தனமான  நியாயப் படுத்தல்கள் பகை வளர்க்குமேயென்றிப்  பதில்களாகிவிடாது. .

சிறுபாண்மையினராக வாழும் நாட்டில்  விசேட சட்டங்களைக் கோரும் இனமாக முஸ்லிம்கள் இருக்கிறது தொடர்பான முரண்களை மென்போக்குடனும் சரியான கலந்துரையாடல்கள்மூலமும் ஞானத்தோடு அணுகுவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும்.  உலகம் முழுவதும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்கள் முஸ்லிம் பெண்களுக்கான இயற்க்கை நீதியை மறுக்கும் வகையிலும் பயன்படுத்தபடுவதாக குற்றச்சாட்டுக்கள் பெருகி வருகின்றன. காதி மன்றுகள் சிலவற்றின்மீது முஸ்லிம்களே அத்தகைய குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிரார்கள். விசேட சட்டங்கள் துஸ்பிரயோகம் செய்யபடும்போது விசேட சட்டங்களை நெடுநாட்கள் பாதுகாப்பதே போராட்டாமாகிவிடும் ஆபத்துள்ளது.

விவாக விவாகரத்து சட்டங்கள் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகவே பிற மத பெண்களை மணப்பது தொடர்பாகவோ  துஸ்பிரயோகம் செய்யப்படும்போது அது அநீதியாகும்.  அது நிச்சயம் முஸ்லிம்களின் உள்விவகாரமல்ல என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும்.  அதனை மனித உரிமை ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் எதிர்ப்பார்கள். அது முஸ்லிம்களையல்ல முஸ்லிம் விரோதிகளையே பலப்படுத்தும்.  விசேட சட்டங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது முஸ்லிம் விரோதிகளுக்கு கோட்டை மதில் கதவுகளைத்  கதவு திறந்து வைக்கிற துரோகச் செயலாகும்.  இவையும் முஸ்லிம்கள் அரசுக்குள் அரசாக இயங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்களோ  என்கிற பெரும்பாண்மையினரின் சந்தேகங்களையே வல்லுப்படுத்துகிறது.  அடிப்படையாகும்.  இந்த விடயத்தை நான் முஸ்லிம் சான்றோரின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

தயவு செய்து எனக்கு கற்பிக்கவும். மரபு சார்ந்த சேலை முட்டக்கு பிஜாமா தலை நாடியை சுற்றிய முட்டாக்கு இவை புனிதநூல் நெறிப்படுத்தலுக்கு விரோதமானதா? அரபிய ஆடைகள் மட்டும்தான் புனிதநூல் நெறிப்படுத்தலுக்கு அமைந்ததா? இஸ்லாத்தில் சரிஆ போன்றவை புனிதநூலுக்கு இணையானவையா? புனித நூலில் சொன்னவற்றை பின்பற்றினால் அதை இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஆடையென சொல்லலாமா? தயவுசெய்து எனக்கு கற்பிக்க வேண்டுகிறேன்.

3.

முஸ்லிம்களின் கலாச்சார அடையாளம் அடிபடை உரிமை.
ஆனால் 1980பதுகளில் பணிபெண்கள் பணியாளர்கள் அரபு நாடுகளில் இருந்து கொண்டுவந்த கண்ணீர் கதைகளும் செல்வமும் அரபிய மயமாதலும் வேறு. இதுபற்றிய  விவாதங்கள் சிங்களவர் மத்தியில் நடப்பதுபோல முஸ்லிம் மக்கள் மத்தியில் இடம்பெறாதமையும் சிங்களவருக்கு பதில் கூறாமையும்  இன்றய சோகங்களின் அடிப்படை. உலகம் முழுவதிலும் முஸ்லிம்களின் அடிபடை உரிமைகளா அரபியமயமாதாலா எடத்ன்கு முக்கியம் என்கிற  பூதாகரமான கேழ்வியை முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். .  அரபியமயமாதல்பற்றி எனக்கு எந்த அக்கறையுமில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் ஏற்றுக்கொள்கிற முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்கிறதுக்காக என்னுடைய  உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்