ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களோ,கொலை குற்றச் சாட்டுக்களோ என்று எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை


இலங்கை அரசியலில் தினமும் ஒரு புதுப்புது செய்திகள் வெளியாகின்றதைப் பார்க்கும்போது ,இந்த அரசியல் நெருக்கடி அவ்வளவு எளிதாய் முடிகின்ற ஒன்றல்ல என்று தோன்றுகின்றது.முன்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கடிதம் ஒன்று ஐ.தே.கவில் பலத்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றது.

ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயாக்காவுக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் கட்சியின் பிரதித் தலைவராக ரவி கருணாநாயக்காவை நியமிப்பதாகவும் ,அத்துடன் நிதி அமைச்சர் பதவியை வழங்குவதாகவும் குறிப்பிடப் பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பாரியநிதி மோசடியில் சிக்கி ஜனாதிபதியினால் பதவி பறிக்கப்பட்ட நிலையில் ,மீண்டும் அந்தப் பதவியை ரவி கருனாநாயக்காவுக்கு வழங்குவதால் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சிக்குள் பெரும் நெருக்கடி நிலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

நிதி அமைச்சுப் பொறுப்பு ரவி கருணாநாயக்காவுக்கு வழங்கப்படும் பட்சத்தில் ,ஏற்கனவே பாரிய நிதிமோசடியில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் ரணிலும் ,ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவியும் தப்பிக்கக் கூடிய நிலை உருவாகலாம் என்றும்,இதனால் ஐ.தே.வுக்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் பதவிக்கு போட்டிபோடும் இரண்டு தலைகளும் சட்டப்படி குற்றவாளிக் கூண்டில் அடைக்கப் படவேண்டியவர்கள்இருவரும் இலங்கையில் நடந்த மிகப் பெரிய நிதி மோசடிகளில் சம்மந்தப் பட்டவர்கள்

40 வருடகால யுத்தத்தை முடித்து ,மக்களை நிம்மதியாக நடமாடவிட்டு மோசடிகளில் ஈடுபட்டது ராஜபக்ஸ குடும்பம் எதோ ஒரு வகையில் மகிந்தவை மன்னிக்க முடியும்.நாட்டுக்காகாக எதோ ஒருவகையில் சேவைகள் செய்ததை அனைவரும் அறிவோம்.

ஆனால் அமைதியாக இருந்து கழுத்தறுப்பது என்று சொல்வோமே ..அது ரணிலுக்கு பொருந்தும்.நிதி மோசடிகளிலும் ,சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதும் ரணிலுக்கு புதிதல்ல.

2006 ஆண்டு நடந்த இலங்கையின் மிகப்பெரியVAT கொள்ளையிலும் ரணிலுக்கு சம்பந்தமிருப்பதாக தகவல் வெளியாகியதை நாட்டு மக்கள் இன்றும் மறக்கவில்லை. இலங்கையில் நடந்த VAT மோசடியில் சம்பந்தப் பட்டவர்களுடன் ரணிலுக்கு இன்று வரையிலும் ,தொடர்புகள் இருக்கத்தான் செய்கின்றது.

ரணில் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் ஓடி ஒழிந்த vat கும்பல் மீண்டும் நாட்டுக்குள் நுழைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்குரிய முக்கிய ஆதாரங்களாக ஒரு சிலவற்றை  இங்கே குறிப்பிடலாம் .

2006ஆம் ஆண்டு ஓடி ஒழிந்த VAT கிரிமினல்கள் இன்று நாட்டில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்தை காண முடிகின்றது.

இன்று வரையிலும் அரசியல் செல்வாக்கை சாதகமாய் பயன்படுத்தி சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள் .

எமது நாட்டில் நீதி செத்துவிட்டது என்பதற்கும், ரணிலின் அமைதியான கொள்ளை என்பதற்கும் இப்படிப்பட்ட சம்பவங்களை குறிப்பிடலாம் .

பிரதமர் என்ற ஒரு பதவியை குறிவைத்து இந்த இரண்டு குற்றவாளிகளும்  போட்டி போடுவது இவர்களின் குற்றங்களை மறைக்கத்தான்  என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

ஜனாதிபதி இரவோடிரவாக எடுத்த அரசியல் முடிவால்தான் இன்று நாட்டில் மிகப் பெரிய நெருக்கடி நிலவுகின்றதாக நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால்,

ஜனாதிபதிக்கு எதிராக  ஊழல் குற்றச்சாட்டுக்களோ,கொலை குற்றச் சாட்டுக்களோ என்று எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை

அப்படியான ஒரு தலைவனால் எடுக்கப்பட்ட இந்த திடீர் முடிவிற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் .

பொறுத்திருந்து பார்ப்போம். 
- வேட்டை.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்