உச்ச நீதி மன்றில் இன்று விசாரணை ஆரம்பம் !!!


--------------
நாடாளுமன்றத்தைக் கலைத்த  அதிபர் மைத்திரிபாலவின் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை  தலைமை நீதியரசர், நளின் பெரேரா நியமித்துள்ளார்.

நவம்பர் 9 ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில்,  அதிபரால், வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக,  இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்த ஐந்து பேர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் முழுமையான அமர்வு ஒன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

அரசாங்கத்தின் சார்பில், சட்டமா அதிபரும், முழு அளவிலான விசாரணை அமர்வு ஒன்றே இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே, தனது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமே இந்த மனுக்கள் மீதான விசாரணையை நடத்தும் என்று  தலைமை நீதியரசர், நளின் பெரேரா அறிவித்துள்ளார்.

இந்த விசாரணைகள் இன்று  தொடக்கம் 6ஆம் நாள் வரை இடம்பெறும் என்றும், தீர்ப்பு 7ஆம் நாள் வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது .

சட்டமா  அதிபர்  தனது   விவாத்தை  முன்வைத்து  இந்த  நீதிமன்றம்  ஜனாதிபதி  அதிகாரத்தில்  மூக்கை நுழைக்க முடியாது  இதில்  உச்ச நீதிமன்றம்   தலையிட  முடியாது  அதற்கான  முகாந்திரம்   இல்லை என்ற  வாதத்தை  முன்வைக்கலாம்.

அத்துடன்   நான்கு   நீதிபதிகள்   அதிபர்  மைத்திரி  நாடாளுமன்றை   கலைத்தது சரி  என்ற முடிவுக்கு   வரலாம்  அத்துடன்  சட்டமா  அதிபர்  தனது   விவாத்தை  முன்வைத்து  செல்ல முடியும். ..

அதனால்  7 ஆம்   திகதி   மீண்டும்  வழக்கு   போஸ்ட்  போன்   ஆகலாம் .

தீர்ப்பு   அதிபருக்கு   ஆதரவாக   வருமானால்   ???
Nilamdeen 

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்