மக்களுக்கு அதிக பணிகளைச் செயயும் ஆண்டாக மிளிரட்டும்


மக்களுக்கு அதிக பணிகளைச் செயயும் ஆண்டாக மிளிரட்டும்
- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

( ஐ. ஏ. காதிர் கான் )

   மலர்ந்துள்ள 2019 புத்தாண்டு, சமாதானம் செளபாக்கியம் நிறைந்த ஆண்டாக, இலங்கை வாழ் சகல மக்களின் வாழ்விலும் பரிணமிக்கப் பிரார்த்திப்பதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
   அந்த வாழ்த்துச் செய்தியில், அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
   மலர்ந்துள்ள புத்தாண்டு, நமது இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் ஒரு ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. காரணம், சவால்களை  வெற்றிகொள்ளக் கூடிய திறன், தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளது. இதை நான் நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
   குறுகிய காலத்தில், அதிகமான மக்கள் பணிகளைச் செய்யவேண்டிய பிரதான சவால்களுடன், தற்போதைய அரசாங்கம் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளது.
இப்பொறுப்புக்கள் அனைத்தும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மேற்கொள்ளப்படும். சகல மக்களுக்கும் தேவையான மிகச் சிறந்த சந்தர்ப்பங்களும், இதன்மூலம் முன்னெடுக்கப்படும்.
இவற்றை,  இப்புத்தாண்டிலிருந்து புது உத்வேகத்துடனும், புதுப்பொழிவுடனும்  மேற்கொள்வோம். குறிப்பாக, மிகச்சிறந்த ஆண்டாக, இவ்வாண்டு சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும் என்பதே, எனது அன்பான பிரார்த்தனையாகும். சகல மக்களும் இப்பாரினில்  வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையாக வாழ, இப்புத்தாண்டில் மீண்டும் வாழ்த்துகின்றேன்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்