விளையாட்டு பிரதி அமைச்சராக இருந்து எங்கயாவது உருப்படியாக தேசியரீதியிலான ஒரு விளையாட்டு மைதானம் நிர்மானித்ததுண்டா ?

ஹரீஸ் எம்பியின் செயலாளர் நௌபர் ஏ வாவா அவர்களே !

எனது கட்டுரைக்கு நீங்கள் வழங்கிய பதிவின்மூலம் எம்பியின் செயலாளர் என்றவகையில் உங்களது கடமையை செய்துள்ளீர்கள்.

உங்கள் கருத்தானது “பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு” என்பதுபோல் உள்ளது. 

ஹரீஸ் எம்பிக்கு இன்னும் பொருத்தமான அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறு வழங்கினால்தான் நன்றாக அபிவிருத்தி செய்து மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும், கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அத்துடன் எனது கருத்து அறிவு இல்லாத்தனமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

எனக்கு அறிவு இல்லை என்பதனை ஏற்கிறேன். ஆனால் நீங்கள் சிறந்த அறிவாளி, அறிவின் தந்தை என்பது எல்லோருக்கும் தெரியும். 

விடயத்துக்கு வருவோம்.

நான் மல்லாக்க படுத்துக்கொண்டு துப்புவதற்கு விரும்பியிருக்கவில்லை. ஆனால் வலிந்து அதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தினால் எனக்கு வேறு வழியில்லை.

“ஆடத் தெரியாதவன் மேடை கோணல்” என்பானாம். அதுபோல உள்ளது உங்களின் பதிவு.

ஓர் அரசியல் அதிகாரம் என்பது அமைச்சர் பதவியில் மட்டும் தங்கியிருப்பதில்லை. சாதாரண அதிகாரிகளாக இருந்துகொண்டு மக்களுக்கு பலர் பல சேவைகளை ஆற்றியுள்ளார்கள். அது தனிமனித ஆளுமையில் தங்கியுள்ளது. 

தௌபீக் எம்பி அவர்கள் சாதாரண எம்பியாக இருந்துகொண்டு முழு திருகோணமலை மாவட்டத்துக்கும்,

அதுபோல் ரிஸ்வி ஜவகர்சா அவர்கள் மாகாணசபை உறுப்பினராக இருந்துகொண்டு முழு குருணாகல் மாவட்டத்துக்கும் 2௦15 தொடக்கம் இன்று வரைக்கும் அபிவிருத்திக்காக ஒவ்வொருவரும் செலவழித்த பணம், பிரதி அமைச்சராக இருந்து ஹரீஸ் அவர்கள் செலவழித்த பணத்தினைவிட அதிகமாகும்.

இவர்கள் அமைச்சர் பதவி இல்லாமல் எவ்வாறு இவ்வளவு பணத்தினை அவர்களது மக்களுக்கு கொண்டு சென்றார்கள் ? 

கௌரவ ஹரீஸ் எம்பி அவர்கள் 2௦௦1 தொடக்கம் 2004 வரைக்கும் பாராளுமன்ற உறுப்பினராகவும், 2006 தொடக்கம் 2010 வரைக்கும் கல்முனை மாநகர முதல்வராகவும், மீண்டும் 2௦1௦ தொடக்கம் 2015 வரைக்கும் பாராளுமன்ற உறுப்பினராகவும், 2௦15 இல் இருந்து பிரதி அமைச்சராகவும் பணியாற்றி வருகின்றார்.

இவ்வளவு நீண்ட காலங்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்து அவர் சாதித்தது என்ன ? விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதுதான் அவரது சாதனையா ?

அவ்வாறு கழகங்களுக்கு வேறு எவரும் உபகரணங்கள் வளங்கியதில்லையா ? 

கல்முனை மாநகரசபை கட்டிடம், கல்முனை பொது சந்தை கட்டிடம், கல்முனைக்குடி உள்ளூர் வீதிகள் இன்னும் அபிவிருத்தி செய்யப்படாமல் பழைய நிலையிலேயே உள்ளது என்று எதிர்க்கட்சி காரர்கள் கூறும் விமர்சனத்தினை உங்களால் மறுக்க முடியுமா ?

விளையாட்டு பிரதி அமைச்சராக இருந்து எங்கயாவது உருப்படியாக தேசியரீதியிலான ஒரு விளையாட்டு மைதானம் நிர்மானித்ததுண்டா ?
அந்த மைதானத்தின் பெயரை கூறுங்கள். 

ஹரீஸ் எம்பியை தேர்தலில் வெற்றிபெற செய்வதற்காக எத்தனையோ இளைஞ்சர்கள் கஷ்டப்பட்டு தேர்தலில் பணியாற்றி உள்ளார்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதா ?

நானும் கல்முனை தொகுதியை சேர்ந்தவன். எனது தொகுதியில் அமைச்சர் பதவி இருந்தால் சந்தோசப்படுவேன். ஆனால் அந்த அமைச்சர் பதவி மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவா ? அல்லது அலங்காரத்துக்காகவா ?

தொடர்பாடல் விடயத்தில் ஹரீஸ் எம்பியை தொடர்புகொள்ள முடியாதென்றால், ஒரு பாமரமகன் எவ்வாறு தொடர்புகொள்வது ? 

எனவேதான் இரண்டாவது அமைச்சர் பதவி மு.காங்கிரசுக்கு கிடைத்தால் அது நியாயமானமுறையில் பொருத்தமானவருக்கு வழங்கப்படல் வேண்டும். அப்போதுதான் அதன் பயன் மக்களுக்கு முழுமையாக சென்றடையும். இல்லாவிட்டால் குரங்கின் கையில் கிடைத்த பூமாலைதான்.       

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

ய‌தார்த்த‌ம் என்ன‌வென்றால் அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் இருந்து முஸ்லிம் காங்கிர‌சை துடைத்தெறியாம‌ல் எவ‌னும் கெபின‌ட் அடைய‌ முடியாது. அப்ப‌டித்தான் கிடைத்தாலும் அத‌னை வைத்து சாதிக்கும் திற‌மை மூவ‌ரிட‌த்திலும் இல்லை. 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்