Skip to main content

வவுணதீவுத் தாக்குதல்- எளிய முடிவுகளுக்கு வர முடியாது


***********************
வவுணதீவு- வலையிறவுக் காவலரணில் வைத்து கடந்த 29 ஆம் திகதி ஒரு சிங்களப் பொலிஸ் உத்துயோகத்தரும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காவல் கடமையில் இருந்த போது இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைப் பொலிஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக எடுத்து ஆய்வுசெய்து வருகிறார்கள். இராணுவமோ,பொலிசோ, அதிரடிப்படையோ, பாதுகாப்பு அமைச்சோ இதுவரை இந்தக் கொலையைச் செய்தவர்கள் பற்றி எவ்விதக் கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இக்கொலையை இன்னார்தான் செய்திருக்கவேண்டும் என்ற சந்தேகக் கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டார்கள்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இன்றைய அரசியல் தேவை கருதி வெளியிட்டுள்ள இக்கருத்து சரியாகவோ பிழையாகவோ இருக்கலாம், ஆனால் சரியான தாக்குதல்தாரிகள் யார் என்பதைக் கண்டறிய நடாத்தப்படுகிற விசாரணைகளுக்கு இக்கருத்துப் பாதகத்தை விளைவிக்கும்.இது மட்டுமல்ல நீண்ட காலத்துக்குப் பிறகு மட்டக்களப்பில் நடந்துள்ள இந்தப் பாரதூரமான நிகழ்வால் அதிர்ச்சியுற்றிருக்கும் மட்டக்களப்பு மக்களை இக்கருத்து மேலும் அச்சத்துக்குள்ளாக்கி நிம்மதியிழக்கச் செய்துவிடும்.மேலும், இவ்வாறான புதிய சம்பவங்கள் நிகழ்வதைத் தூண்டும் கைங்கரியத்தைச் செய்யும் வாய்ப்பையும் இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து ஏற்படுத்தக்கூடும்.

நமது அரசியல்வாதிகள் இனத்துவ வரலாற்றிலிருந்து எதையுமே இதுவரைக் கற்றுக்கொள்ளவில்லை என்பது துரதிஸ்டமானதாகும். கடந்தகாலத்தில் அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் காலத்துக்குக் காலமும், சம்பவத்துக்கு சம்பவமும் வெளியிட்ட பொறுப்பற்ற கருத்துக்களும்கூட கடந்த மூன்று தசாப்தகால அழிவுகளுக்குக் காரணமாய் அமைந்தன என்ற பட்டறிவைக் கணக்கெடுக்கத் தவறி சொந்தக் கட்சி மற்றும் தனி நலன்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மேற்படி கருத்தை இவ்விரு உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

இவ்விருவரும் ஏற்கனவே பேசிக்கொண்டதற்கு அமைவாகவே- சிங்கள எம்பி முன்னர் எழுந்து பேச, தமிழ் எம்பி அடுத்து எழுந்து வழிமொழிந்து பேசியதாகப் புரிந்துகொள்ளலாம். நல்ல அரசியல் முடிவு இது, ஏனெனில் கொல்லப்பட்டது இரு இனங்களையும் சேர்ந்தவர்களல்லவா?

உச்சபட்ச அரசியல், நீதி, நிர்வாக மற்றும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமகால இலங்கை எதிர்கொள்கிறது.ஜனாதிபதி பிரதமரை மாற்றியுள்ளதால் நாடாளுமன்றம் சீர்குலைந்துள்ளது. நாடாளுமன்றக் கலைப்பு நீதிமன்றில் கிடக்கிறது.பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.யாருடைய பணிப்புகளை ஏற்றுச் செயல்படுவது என்று நிர்வாகிகள் தடுமாறிப் போயுள்ளார்கள்.பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சரிந்துகொண்டு செல்கிறது. இவ்வாறு இருக்கையில் நடந்த வவுணதீவுத் தாக்குதலை அரசியல்வாதிகள் அரசியல் இலாபக் கண்கொண்டு பார்த்துக் கருத்திடக் கூடாது.

நாட்டில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு மக்கள் சிதிலமடையும் வாய்ப்பு உள்ளதா என்ற அடிப்படையில்தான் இரு பொலிசாரினதும் கொலையை மக்கள் பிரதிநிதிகள் நோக்கவேண்டும். இவ்வாறான தாக்குதல்கள் தொடருமானால்,ஏற்கனவே அரசியல் உறுதித்தன்மை சரிந்து கிடக்கிற தருணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பிடி இறுகுவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கவேண்டும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு எப்படியாக அமைந்தாலும் இன்று இருக்கின்ற நாட்டின் அரசியல் நிலைமையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாது என்று நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய நிலைமை தொடர்ந்தால், ஏற்கனவே தெளிவான தலைமைத்துவம் இல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் மீதுள்ள ரணிலின் பிடி தளர்ந்து விடலாம். இதனால் இக்கட்சி பலவீனமடைந்து நீண்டகாலத்துக்கு நிமிர்த்த முடியாத நிலைக்குள்ளாகலாம். தலைமைத்துவம் தெளிவாக உள்ள ஆனால் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத பொதுஜன பெரமுனவின் நாட்டின் மீதான பிடி இறுகுவதற்கு வாய்ப்புள்ளது.

இப்படியாக நிலமை இருக்கையில் நிகழ்ந்த வவுணதீவுக் கொலையை சாதாரணக் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எவரால் செய்யப்பட்டிருந்தாலும், இது வெறும் கொலையல்ல திட்டமிட்ட ஒரு இராணுவத் தாக்குதலாகும். நீண்டகால கெரில்லாத் தாக்குதல் அனுபவம் கொண்டவர்கள் மேற்கொண்ட அமைதித் தாக்குதலாகும். ( Silent Operation ) பொலிசார் இருவரதும் கைகள் கட்டப்பட்டுள்ளன. கூடாரத்துக்குள் கிடந்த சிங்களப் பொலிசாரின் உடலில் 21 கத்திக் குத்துக் காயங்கள் இருந்திருக்கின்றன.வெளியில் கதிரையில் உட்கார்ந்திருந்த தமிழ்ப் பொலிசாரின் கழுத்து அறுக்கப்பட்டிருக்கிறது. மேலதிகமாக இவர்கள் மீது T56 துப்பாக்கியால் சுட்டுமிருக்கிறார்கள்.வெடிச் சத்தம் கேட்டதாக இது வரை வவுணதீவ பொலிஸ் நிலையத்தில் வேலை செய்யும் பொலிசாரே கூறியதாகச் செய்திகள் வரவில்லை. பொலிசார் வசம் இருந்த றிவோல்வர்கள் இரண்டும் கொலையாளிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

வவுணதீவு உட்கிராமங்களில்,மாவீரர் நினைவை ஒட்டிச் செய்யப்பட்டிருந்த சோடனைகள் இரவோடிரவாகப் பொலிசாரால் கிழிக்கப்பட்டதாக அறியக் கிடைக்கிறது. மாவீரர் தினத்துக்கான சுவரொட்டிகளை ஒட்டிய, சோடனைகளைச் செய்த இளைஞர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கரவெட்டிப் பகுதியில் இரவு வேளைகளில் சில பொலிசார் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் பேசப்படுகிறது.

கொல்லப்பட்ட சிங்களப் பொலிஸ் உத்தியோகத்தர் தென்னிலங்கை காலிப் பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். இவரின் உடலில் 21 தடவைகள் கத்தியால் குத்துவதாக இருந்தால் குத்தியவருக்கு சிங்களப் பொலிசார் மீது நீண்டகால வரலாற்றுக் கோபமும், வெறியும் இருந்திருக்க வேண்டும். அல்லது இறந்தவரின் உடல் தெற்குக்குக்குக் கொண்டு செல்லப்பட்டதும், உடலைப் பார்ப்பவர்கள் கோபப்பட்டுக் கிளர்ந்தெள வேண்டும் என்பது குத்தியவரின் நோக்கமாக இருந்திருக்கவேண்டும்.

ஆற்றோரமாக அமைந்திருந்த இந்த வலையிறவுக் காவலரணைத் தாக்குவதற்கு வந்தவர்களின் காலடித் தடம் ஆற்றோரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.கைவிடப்பட்ட தொழு நோயாளர் வைத்தியசாலை இருந்த மாந்தீவுப் பக்கமிருந்து தாக்குதல்தாரிகள் வந்திருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த இடங்களில் சீசீரி கமரா இல்லை; ஆனால் வவுணதீவு ஊருக்குள்ளால் முன் வெளிச்சம் போடப்படாத உந்துருளி ஒன்று செல்வது அப்பக்கமாக இருந்த சீசீரி கமராவில் அகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எல்லாமே கதைகள்தான். நியாயமான ஆய்வு செய்யப்பட்டு தாக்குதல்தாரிகள் கைது செய்யப்பட்டால்தான் உண்மை தெரியவரும். அதுவரை அரசியல்வாதிகள், தமக்கு அனுபவமோ அறிவோ இல்லாத ஒரு தளமாகிய புலனாய்வைச் செய்வதையும், அவற்றை அறிக்கைகளாக  நாடாளுமன்றில் வெளியிடுகிற வேலையையும் தவிர்த்துக்கொள்வது நமது சாதாரண மக்களுக்குப் பாதுகாப்பானதாகும்.
Basheer Segudavood 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய