பிரதமர் மஹிந்தவுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதை சில ஊடகங்கள் பெரிதாக தூக்கிப்பிடிக்கின்றன.
உண்மையில் ஜனாதிபதி என்ன சொன்னார் என்பதை தமிழ் கூட்டமைப்பினர் மறைத்து விட்டனர்.
ஜனாதிபதி சொன்னது இதுதான். பாராளுமன்றத்தில் ரணிலுக்கும் பெரும்பான்மை இல்லை. மஹிந்தவுக்கும் பெரும்பான்மை இல்லை என்பதாகும்.
இது பற்றி ஜனாதிபதி அடிக்கடி சொல்லியிருந்தும் சிலர் வேண்டுமென்றே உண்மையை மறைத்து மக்களை வழி கெடுக்கின்றனர்.
தற்போதைய பாராளுமன்றத்தில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவே பிரதமராவார்.
எதிர் வரும் 5ந்திகதி மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதும் இலகுவான விடயம் அல்ல. ஆளும் பலம் மைத்திரி மஹிந்த பக்கமே உள்ளது. இந்த யதார்த்தத்தை இன்னமும் பலர் புரிந்து கொள்ளவில்லை.
இன்னுமொரு நம்பிக்கை பிரேரணை கொண்டு வந்து மஹிந்த தோற்கடிக்கப்பட்டாலும் ரணிலை விடுத்து இன்னொருவரை பிரதமராக்க ஐ தே க பிரேரிக்க வேண்டும். அதற்கு ஐ தே க முன்வராத போது தொடர்ந்தும் மஹிந்ததான் பிரதமர்.
ஆகவே மக்கள் அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டு கனவுலகில் இருந்து விடுபட வேண்டும்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி.

Post a Comment