திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்களது காணிகளில் 12 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்களது காணிகளில் 12 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுனரது செயலகத்தில் இன்று (10) மதியம் 2.00 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 12 ஏக்கர் மக்களது காணிகளை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஐயசேகர கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகமவிடம் கையளித்தார்.

குச்சவெளி பிரதேச சபைக்குற்பட்ட கல்லம்பத்தை எனும் பகுதியில் 5 ஏக்கர் காணிகளும், மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் பாட்டாளிபுரம் பகுதிதில் 2 ஏக்கர் காணிகள் மற்றும் தோப்பூர் பகுதிதில் 3 ஏக்கர் காணிகளும், சேருநுவர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சித்தாறு பகுதியில் 2 ஏக்கர் காணிகளும் அடங்கலாக மொத்தமாக 12 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகம, கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஐயசேகர, 22ம் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்தான, திணைக்கள செயலாளர்கள் முப்படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பங்கேற்றிந்தனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்